சிவப்பு பூசணிக்காய் கறி

image

வழங்கியவர் : gandhiseetha

தேதி : திங்கள், 22/06/2009 - 12:21

ஆயத்த நேரம் : 10 நிமிடம்

சமைக்கும் நேரம் : 20 நிமிடம்

பரிமாறும் அளவு : 2 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • சிவப்பு பூசணிக்காய் - 1 கப் (பெரியதாக வெட்டியது)
  • எண்ணெய் - தேவையான அளவு
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • பச்சை(அ)வரமிளகாய் - 10
  • வெங்காயம் - 2
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • சர்க்கரை - 4 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

 

  • கடாயில் எண்ணெய், கடுகு, பச்சை(அ)வரமிளகாய், வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும். அதில் பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.
  • பூசணிக்காய் வதக்கியபிறகு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
  • காய் வேக தண்ணீர் சிறிது ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Note:

குழம்பாக வேண்டும் எனில் தேங்காய் துருவல் சேர்க்கலாம்.







சிவப்பு பூசனிக்காய் கறி. நல்லாஇருந்தது.