முளைகட்டிய வெந்தய குழம்பு(சம்மர் ஸ்பெஷல்)

தேதி: June 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

வெந்தயம் மிகவும் குளிர்ச்சியானது. நார்சத்து நிறைந்தது. வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் யுரினெரி இன்ஃபெக்ஷனுக்கு நல்லது. அதை முளைகட்டி சாப்பிட்டால் இன்னும் நிறைய சத்து கிடைக்கும். இதில் குழம்பு செய்ய, அரிசி கழுவிய இரண்டாம் நீர் பயன்படுத்தி உள்ளதால் வைட்டமின் B சத்தும் கிடைக்கிறது. ஆரோக்கியம் நிறைந்த இந்த குழம்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள். இன்னும் இது போன்ற பல ஆரோக்கிய நிறைந்த மற்றும் புதுமையான குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

 

முளைகட்டிய வெந்தயம் – 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – அரை கப்
உரித்தபூண்டு – 10
அரைத்த சின்ன வெங்காய விழுது - ஒரு மேசைக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
அரிசி கழுவிய நீர் – 2 கப்
உப்பு – தேவைக்கு
வறுத்து பொடிக்க:
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
பச்சரிசி - ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் – ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் – 5(காரத்திற்கேற்ப)
முளைகட்டிய வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி( கொடுத்துள்ள அளவில் பாதி)
கறிவேப்பிலை – 10 இலைகள்
தாளிக்க:
நல்லெண்ணெய், கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது


 

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைக்கவும். அரிசி கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும்.
வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க வேண்டிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து பொடிக்கவும்.
அதே வாணலியில் தேங்காய் துருவலை லேசாக வதக்கி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பொடிக்காமல் மீதியுள்ள முளைகட்டிய வெந்தயத்தை போட்டு வதக்கவும்.
அதில் சின்ன வெங்காய விழுதினை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடனே சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
ஊற வைத்த புளியை வதக்கியவற்றுடன் கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போக கொதித்ததும், பொடித்த தூளை போட்டு நன்றாக சுண்டும் வரை கொதிக்க விடவும்.
பின் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி நன்றாக குழம்பு சுண்டி எண்ணெய் மேலே மிதக்கும்வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான முளைகட்டிய வெந்தய குழம்பு ரெடி. இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்,பெர்ஃபெக்ட்.ரொம்ப அருமையான குறிப்பு,இப்படி குழம்பு வைத்து யாராவது தந்தால் நாளெல்லாம் சாப்பிடலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நலமாய் இருக்கிறீர்களா?ஒவ்வொரு முறையும் உங்களின் உற்சாகமான பின்னூட்டம் எனக்கு தனி மகிழ்ச்சியை தருகிறது...
மிக்க் நன்றி...
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி
வெந்தயக் குழம்பென்றாலே சூப்பர்தான்.
அதிலும் நீங்கள் நிறையப் பொருட்கள் சேர்த்துச் செய்திருக்கிறீங்கள். மிக நன்றாகவே இருக்கு. ஏன் அரிசி கழுவிய தண்ணீர் சேர்க்கிறீங்கள்? ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கோ?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் பின்னூட்டம் என் மகிழ்ச்சி...இந்த குறிப்பிலேயே ஆரம்பத்தில் சொல்லியுள்ளேனே பார்த்தீங்களா?அரிசி நீரில் வைட்டமின் பி சத்து உள்ளது..அதான்பா...நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வெந்தயத்தை முளை கட்ட வைப்பது எப்படி?

வெந்தய குழம்பு செய்வதற்கு உதாரணத்திற்கு வரும் ஞாயிறு செய்யபோகின்றீர்கள் என்றால் வெள்ளி இரவே வெந்தயத்தை ஊறவைத்து விடுங்கள்...பிறகு சனிக்கிழமை காலை ஊறவைத்த வெந்தயத்தை சுத்தமான வெள்ளைதுணியில் கட்டி வைக்கவும் ஞாயிறு காலைவரை அப்படியை வைத்து
பிரித்து பார்த்தால் மஞ்சள் வெள்ளை காம்பினேஷனில் முளைவிட்ட வெந்தயம் இருக்கும்
வேறு எதுவும் சந்தேகமிருந்தால் கேளுங்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.