அடை தோசை - மற்றொரு வகை

தேதி: June 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

1. பாசிபருப்பு - 1 1/4 கப்
2. கடலை பருப்பு - 2 மேஜைக்கரண்டி
3. பச்சை மிளகாய் - 2
4. இஞ்சி - ஒரு சின்ன துண்டு
5. உப்பு - தேவைக்கு
6. கொத்தமல்லி - கொஞ்சம்


 

பருப்பு வகைகளை ஊர வைத்து பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
இதில் உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து வழக்கம் போல் தோசையாக ஊற்றி சுடவும்.
விரும்பினால் குழந்தைகளுக்கு இதை குடுக்கும்போது துருவிய பன்னீர் சிறிது உப்பும், கொத்தமல்லி இலையும் சேர்த்து உள்ளே வைத்து மடித்து குடுக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்