மரவள்ளிக்கிழங்கு வறை

தேதி: June 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மரவள்ளிக்கிழங்கு - 400 கிராம்
தேங்காய்பூ - 3 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 4
வெங்காயம் - 15 - 20 கிராம்
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 1/4 தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாரான நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மரவள்ளிக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும். (கரையுமளவிற்கு வேக விட வேண்டாம்).
வேக வைத்த கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்தெடுத்து, நார் இல்லாமல் தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.
உதிர்த்து வைத்திருக்கும் கிழங்குடன் மஞ்சள் தூள், தேங்காய்பூ, மீதமுள்ள உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
வெங்காயம் மற்றும் மிளகாயை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாயை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை, கடுகு சேர்த்து வதக்கவும்.
அதில் பிரட்டி வைத்திருக்கும் மரவள்ளிகிழங்கை போட்டு கிளறி விடவும்.
வதக்கியவற்றுடன் சேர்ந்து கிழங்கு நன்கு சூடாகியதும் இறக்கி வைத்து விடவும்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு வறை ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் அதிரா
நிங்கள் புதுசு பதுசா யோசிச்சு செய்யிறிங்கள் வாழ்த்துக்கள்.
மரவள்ளிக்கிழங்கு வறை சூப்பர் இதில் கறி தான் வைப்பேன் இது புதிது செய்து பத்திரரு சொல்கிறேன் குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

என் அம்மாவின் சமையலில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த மரவள்ளிகிழங்கு வறைதான் என் அம்மாவை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.நல்ல குறிப்பு.
உங்களின் கறிபன் மற்றும் பாகற்காய் பிரட்டல் செய்தேன்..பாகற்காய் நன்றாக வந்தது.
பன் தான் மைதா மாவு பயன்படுத்தியதாலோ என்னவோபன்னுக்கான சாப்ட்னஸ் வரவில்லை....
நன்றி....
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அதிரா,
மரவள்ளிக்கிழங்கு வறை பார்க்கவே நன்றாக உள்ளது. மரவள்ளிக்கிழங்கு கிடைக்கும்
போது செய்து பார்த்துச் சொல்கிறேன்.

மிக்க நன்றி.
சுகா, இளவரசி, செபா மிக்க நன்றி.

சுகா, நனும் அதிகம் கறிதான் வைப்பேன். எங்கள் மாமி ஒருவரின் வீட்டில் கறி வைக்கமாட்டார்கள், எப்பவும் இந்த வறைதான் செய்வார்கள். அதைப் பார்த்துப் பழகியதுதான் இது.

இளவரசி, மைதா மாவிலும் நான் சிலவேளை செய்வதுண்டு, அப்படியாயின் கொஞ்சம் அதிக நேரம் மாவைப் புளிக்க வைக்க வேண்டும். இல்லையாயின் ரொட்டிபோல் காட், ஆகிவிடும்.

செபா, கிடைக்கும்போது செய்துபாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இது நாகர்கோவிலை சேர்ந்த ஒரு ஆன்டி நான் சின்ன பிள்லையா இருக்கும் போது செய்து குடுத்த் சாப்பிட்ட நியாபகம். இங்க கிடைகாது, ஊருக்கு போனா செய்து பார்க்கிறேன். எனக்கு பிடிச்ச வகை இது. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிழங்கு கிடைக்கும்போது செய்துபாருங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா! உங்கள் ரேசப்பி நன்று. புதுவிதமான சமையல்களை அறிமுகப்படுத்துவதில்.கிலாடிதான் நீங்கள்:) என்னிடம் மரவள்ளி கிழங்கு கைவசம் இருந்தபடியால் உடனேயே வறை செய்து பார்த்துவிட்டேன். வறை நன்றாக வந்தது. சுவை அருமையோஅருமை. மரவள்ளி கிழங்கு கறியைவிட வறை நல்லது.இது என்றென்றும் உங்கள் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அதிரா, மரவள்ளிக் கிழங்கு வறை புது ரெசிப்பியாக இருக்கிறது. நான் கிழங்கு வாங்கும் போது செய்து பார்த்து சொல்கிறேன்.வறை என்றால் எனக்கு மிகவும் விருப்பம்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ராணி, வத்சலா
ராணி மிக்க நன்றி. வறைதான் உங்களுக்கு அதிகம் பிடித்துள்ளதோ? எனக்கு கறிதான் அதிகம் பிடிக்கும்.

வத்சலா, செய்துபாருங்கோ. இதுவும் ஒரு வித்தியாசமான சுவைதான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, உங்கள் வறை பார்க்கவே நன்றாக இருக்கு. அப்பா, அம்மா வந்திருக்கின்றார்கள். அது தான் ஒரே பிஸி. கிழங்கு வாங்கி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
வாணி

ஹாய் அதிரா,
இன்று லன்ச்க்கு உங்க மரவள்ளிக்கிழங்கு வறை செய்திருந்தேன். எனக்கும் என் கணவருக்கும் எப்போதுமே இந்த கிழங்கு ரொம்ப விருப்பம். துண்டுகளாக கட் செய்து, தாளித்து மிளகாய்த்தூள் கொஞ்சமாக போட்டுதான் செய்வேன். இன்று உங்க முறைப்படி செய்தது வித்தியாசமாக, தேங்காய் டேஸ்ட்டுடன் ரொம்ப நன்றாக இருந்தது. இனி இந்த மெத்தெட்டிலும் அடிக்கடி செய்வேன். குறிப்புக்கு நன்றி!
பி.கு. மரவள்ளிக்கிழங்கு வறையை படம் எடுத்து இருக்கேன். அட்மின் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன், பாருங்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அதிரா மரவள்ளிக்கிழங்கு வறை மிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி நீங்க ரெசிபி போட்டதில் இருந்தே செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தேன் இன்று தான் செய்தேன் :)

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மரவள்ளிக்கிழங்கு வறை செய்தேன் நன்றாக இருந்தது.
மகன் மரவள்ளிக்கிழங்கு கறி சாப்பிடமாட்டார். இது நன்றாக இருக்குதாம்,இனி மேல் இப்படி செய்து தாங்கோ எனக் கேட்டார். உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. சுஸ்ரீ(susri 27) அவர்கள் தயாரித்த மரவள்ளிக்கிழங்கு வறையின் படம்

<img src="files/pictures/aa322.jpg" alt="picture" />

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...
வாணி மிக்க நன்றி.

சுஸ்ரீ மிக்க நன்றி. வறை படமெடுத்தும் அனுப்பியிருக்கிறீங்கள்... இரட்டிப்பு நன்றி. நல்ல அழகாகச் செய்திருக்கிறீங்கள். எனக்கும் மரவள்ளிக்கிழங்கென்றால் சரியான விருப்பம். ஆனால் வாங்குவதற்கு தூரப் போகவேண்டும்.

அநாமிகா மிக்க நன்றி. நினைத்ததை நிறைவேற்றிப்போட்டீங்கள்.

வத்சலா மகனுக்கும் பிடித்துவிட்டதா? "ஏழாலை"யில் இருந்த ஒரு மாமிதான் இம்முறையில் அடிக்கடி செய்து தருவா முன்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்