முளைகட்டிய வெந்தய குழம்பு முறை - 2(சுலப முறை)

தேதி: June 27, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைகட்டிய வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்,
துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1
தக்காளி - 1
உரித்தபூண்டு – 10
புளி – எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி- 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு
பெருங்காயம் - சிட்டிகை
கறிவேப்பிலை – 10 இலைகள்
தாளிக்க
நல்லெண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை - சிறிது


 

அரிசி கழுவிய நீரில் (1 கப்) புளியை ஊறவைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
தக்காளி பொடியாக நறுக்கவும் பூண்டை தோலுரிக்கவும்.
தேங்காயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முளைகட்டிய வெந்தயத்தை அரைத்து விழுதாக வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி பின் மீதி உள்ள முளைகட்டிய வெந்தயத்தை அதே எண்ணெயில் போட்டு வதக்கவும். பிறகு
தக்காளி, பூண்டை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி அதிலேயே சாம்பார்பொடியை போட்டு வதக்கி விட்டு ஒரு கப் நீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடவும். பின் ஊறவைத்த புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவும். பச்சை வாசனை போக கொதித்ததும், பெருங்காயத் தூளை போட்டு நன்றாக சுண்டும்வரை கொதிக்க விடவும். பின் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி நன்றாக குழம்பு சுண்டி எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான முளைகட்டிய வெந்தய குழம்பு ரெடி.


நான் ஏற்கனவே இந்த குழம்பில் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதில் வெந்தயத்தின் கசப்பு தன்மை இலேசாக இருக்கும். இந்த முறை அதை விட சுலபமானது. இதில் தக்காளி சேர்ப்பதால் வெந்தயத்தின் கசப்பு தன்மை கொஞ்சம்கூட இருக்காது. சீக்கிரமும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

முன்பே ஒருமுறை செய்து பார்த்தேன். கசப்பு சுவை தெரிந்தது. கசப்பு தெரியாமல் செய்வது எப்படி?

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

ஹாய் இளவரசி,எங்க வீட்டில் வெந்தய குழம்பு செய்வோம்.முளைகட்டிய வெந்தய குழம்பு செய்ததில்லை.உங்க குறிப்பு பார்த்துதான் செஞ்சேன்.கசக்குமோ என்னவோனு நினைச்சேன்.ஆனா,கசக்கவேயில்லை.சூப்பர் டேஸ்ட்.நன்றி இளவரசி.

அன்புடன்
நித்திலா

கசக்குமின்னு நினைச்சு விட்டுடாம முயற்சித்ததால் சூப்பர் டேஸ்ட் கிடைச்சது இல்ல...நன்றி நித்திலா :-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

i tried preparing this ,it was tasty and good..thanks for your tips

மிகவும் சுவையாக இருந்தது. நான் கூட வெந்தயத்தை அரைத்து விடுவதால் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன்.
உண்மையாகவே அருமையான சுவை.டேஸ்டாக இருந்தது.

with love