H 1 N 1 சளி காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

H 1 N 1 சளி காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? அதில் இருத்து நம்மை காத்து கொள்ள வழி செல்லுங்கள் பிலீஸ்.....

சிங்கப்பூரில் 500 பேருக்கு இருக்கு. ரொம்ப பயமாக இருக்கு. தயவு செய்து பதில் தாருங்கள்.

மற்ற நாடுகளிலும் அதிகமாக உள்ளது. H 1 N 1 வராமல் தடுப்பது எப்படி? விளக்கம் பிலீஸ்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

எச் 1 என் 1பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

1. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

4. பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.

5. கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6. மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

7. பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி: தினமலர்

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

here we get preventive medicine(homeopathy) for எச் 1 என் 1... U can try with the homeopaths there... if u don't know of any, I can give u the contacts of the homeopath I used to see when in SG...

Dsen எனக்கு நிச்சயமா எதுவும் புரியல கொஞ்சம் விளக்கமா செல்ல்ல முடியுமா? பிலீஸ்......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

here we get a preventive medicine in homeopathy(something like vaccination in pills form)for swine flu...they say if we take this preventive medicine, we can protect ourselves from swine flu...

previously when there was chickunguniya fever spreading in India, homeopathy doctors were giving out preventive medicine for chikunguniya... & now they hav comeup with preventive medicine for swine flu(aka pandri kaaichal)... so if u want to, u can try to get this preventive medicine from homeopathy practitioners in ur place...

ஹாய் Dsen உங்கள் விளக்கத்துக்கு நன்றிகள் பலா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

h1n1 நாசல் ட்ராப்ஸ்....... எனது குழந்தையின் பள்ளியில் h1n1 நாசல் டிராப்ஸ் விடுவதாக கூறி அதற்கு 160 ரூபாய் பணம் கேட்கிரார்கள்... அடுத்த வாரம் பாப்பாவிற்கு ஊசி போடுவதாக இருந்தோம்... ஆனால் கேட்டதற்கு டிராப்ஸ் மட்டும் போதும் என்கிறார்கள்.... எனது சந்தேகம் குழந்தைக்கு டிராப்ஸ் மட்டும் போதுமா? அதன் வீரியம் எத்தனி நாள் இருக்கும்? அல்லது தடுப்பூசியும் போட வேண்டுமா?....

தடுப்பூசி போடுவது நல்லதா? அல்லது டிராப்ஸ் மட்டும் போதுமா? அல்லது இரண்டுமே வேண்டுமா? என எனக்கு விளக்கம் கூறுங்கள் தோழிகளே....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்கா... மூன்று வயது குழந்தைகள் முதல் 18 வயது வரை நாசல் ட்ராப்ஸ் போதும். ஆறு மாதம் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும் தான் Injection போடுவார்கள். அதனால் உங்கள் குழந்தைக்கு நாசல் ட்ராப்ஸ் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.என்னோட பையனுக்கு 1 1/4 வயது. அவனுக்கு injection போட்டோம்.

எல்லா Pvt. Hospitals, Clinic லயும் போடுகிறார்கள். நாசல் ட்ராப்ஸ் க்கு Rs.150 ,பெரியவர்களுக்கு போடும் injection Rs. 350 . குழந்தைகளுக்கு போடும் injection Rs.600- 2000 வரை ஆகும் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

நாகவல்லி கார்த்திக்.... இப்பத்தான் உங்க பதிவைப் பார்த்தேன்... தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்...... உங்களின் பதில் மிக பயனுள்ளதாக இருந்ததுப்பா...... நான் கூட ஊசியே போட்டுக்கலாம் என நினைத்தேன்..... ஆனா நீங்க எழுதியது போலவே தான் நான் விசாரித்த ஒரு டாக்டர் சொன்னார்.... அதனால் நாசல் ட்ராப்ஸ்சே போதும் என்று முடிவெடுத்து விட்டேன்.... நாளை மதியம் பாப்பாவிற்கு போடப்போகிறேன்...... நாசல் ட்ராப்ஸ் பவர் 1 வருடம் வரை இருக்கும் எனவும் டாக்டர் சொன்னார்ப்பா...... உங்களின் பதிவிற்கு நன்றி...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்