தேதி: June 29, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அப்பம் என்கிற இனிப்பு வகை எல்லோருக்கும் பிரசித்தமான ஒன்று. இதில் வித்தியாசமாக வாண்டுகளின் ஃபேவரட்டான நூடுல்ஸைக் கொண்டு முயற்சித்து நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.
கோதுமை மாவு – ஒரு கப்
நூடுல்ஸ் - ஒரு கப்
சீனி – ஒரு கப்
பாதாம் (சிறியதாக நறுக்கியது) – 2 மேசைக்கரண்டி
உலர் திராட்சை - 2 மேசைக்கரண்டி
தேங்காய்பால் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - ஒரு மேசைக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
நூடுல்ஸை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேக வைத்த நூடுல்ஸையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து (தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து) கெட்டியான கலவையாக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

சுவையான நூடுல்ஸ் அப்பம் ரெடி. மேலே பாதாம் பருப்பை வைத்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Comments
வாழ்த்துக்கள் இளவரசி
இளவரசி,
கலக்குங்கோ...கலக்குங்கோ....புது ரெசிபியா இருக்கு..
அன்புடன்,
அம்மு.
அன்புடன்,
அம்மு.
இளவரசி
இளவரசி,
வித்தியாசமாக இருக்கிறதே, கட்டாயம் செய்து பார்க்க வேண்டும். விடுமுறையில் பார்க்கலாம். :)
இமா
- இமா க்றிஸ்
நூடில்ஸ் அப்பம்
ஹாய் இளவரசி! என்ன இந்தமுறை அப்பமோ, பார்க்க நல்லாவே இருக்கு. இந்த அப்பம் (birthday )பாட்டிகளுக்கும் செய்து பரிமாறலாமா? எதற்கும் ஒரு முறை செய்து பார்க்கிறேன்.நன்றி மீண்டும் வருவேன்.
ராணி
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நன்றி அம்மு,இமா,யோகா
இதை பார்த்த தோழிகள்,பின்னூட்டம் கொடுத்த அம்மு,இமா,யோகாவிற்கு என் நன்றி.
யோகராணி...இது செய்து ஒரு வாரம் வரைகூட சாப்பிடலாம்.சுவைமாறாது. என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்....பார்ட்டிகளுக்கு கொடுக்கலாம்.ஆனால் பாட்டிகளுக்கு(!!!!) கொடுப்பதுயோசிக்கவேண்டிய விசயம்...தான்:O)
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இளவரசி
இளவரசி உங்க ரெசிப்பியெல்லாம் வித்தியசமாகவும்,நல்லாவும் இருக்கு.
கிட்ஸ் நூடுல்ஸ் அப்பம் ஈஸியா இருக்கு, செய்து பாத்துட்டு சொல்றேன்.
பதிவு போட நேரமே இல்லை...
பதிவு போட நேரமே இல்லை
இளவரசி நூடில்ஸ் அப்பம் நன்றாக இருக்கு. பக்கோடா மாதிரி, பார்த்ததும் சாப்பிடத் தூண்டுகிறது. எதற்குப் பதில் போடுவது எதை விடுவதென்றே தெரியாமல் நேரத்தோடு போராட வேண்டி இருக்கு. இதில் பாவித்திருப்பது எந்த நூடில்ஸ்? உடனடி நூடில்ஸா? அல்லது சாதாரணமாக அவித்தெடுக்கும் நூடில்சோ?
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
கோதுமை
இங்க நீங்க சொல்லீக்ற கோதுமை இலங்கையின் ஆட்டா மாவையா?
சஃப்னா
இலங்கை ஆட்டாமாவுன்னு எத சொல்லுவாங்கன்னு எனக்கு தெரியலங்க...
நான் சொல்லியிருப்பது சப்பாத்திக்கு பயன்படுத்தும் முழுகோதுமை மாவு(whole wheat flour)
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
கோதுமை
இந்தியால கோதுமை ஐ மைதானும்,ஆட்டா மாவை கோதுமைனும் சொல்வாகனு arusuvai ல பார்த்தேன்.அதான் doubt.normala நாங்க இப்பிடி பொரிக்க கோதுமை தான் பாவிக்கிற.நீக மைதானு போடல அதான் கேடன்.
சிரமம் பாராது பதில் தந்ததுக்கு மிக்க நன்றி!நீங்க இந்தியா தானே?இந்தியாக்கு வர மிச்சம் ஆசை!
thanks ilavarasi
சுவை நன்றாக இருந்தது...