முள்ளங்கி சட்னி

தேதி: June 29, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

முள்ளங்கி - 1 கப்
எண்ணெய் - சிறிது
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 3
புளி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 8
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - சிறிது


 

கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி, புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் முள்ளங்கியை சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் தெளித்து விட்டு மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
பிறகு தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.


சாதத்தில் நல்லெண்ணெயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் உங்க முள்ளங்கி சட்னி ரொம்ப நல்லா இருந்தது முள்ளங்கி வாடையே தெரியல மிக்க நன்றி

சகோதரி உங்களின் சட்னி வித்தியாசமான ருசியில் இருந்தது.என் மகள் முள்ளங்கியே சாப்பிட மாட்டாள். இன்று என்ன சட்னிம்மா நல்லாயிருக்குன்னா. நன்றிப்பா.

காந்திசீதா அக்கா உங்களுடைய குறிப்பில் முள்ளங்கி சட்னி மிகமிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்
,

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி....
Be Happy

Be Happy