வேப்பம்பூ துவையல்

தேதி: June 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1) வேப்பம்பூ - 1/4 கப்
2) உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
3) காய்ந்த மிளகாய் - 6 (காரத்திற்கேற்ப)
4) புளி - ஒரு சிறிய கோலி அளவு
5) உப்பு - தேவையான அளவு
6) எண்ணெய் - தேவையான அளவு


 

சிறிது எண்ணெயில் வேப்பம்பூவை போட்டு கருப்பாகும் வரை வறுத்துத் தனியே வைத்துக்கொள்ளவும்.
மேலும் சிறிது எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பிறகு உப்பு, புளியுடன் அனைத்தையும் சேர்த்து மைய அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்