ரைஸ் க்ரிஸ்பி கட்லெட்

வழங்கியவர் : jayaraje
தேதி : செவ்வாய், 30/06/2009 - 11:43
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 30 mins
பரிமாறும் அளவு :
- 1) சாதம் - 1 கப்
- 2) வேர்க்கடலை (வறுத்துப் பொடித்தது) - 1/2 கப்
- 3) உருளைக் கிழங்கு (வேக வைத்தது) - 1 (நடுத்தர அளவு)
- 4) இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
- 5) மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- 6) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- 7) கொத்தமல்லித் தழை - சிறிதளவு
- 8) உப்பு - தேவையான அளவு
- 9) எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- வேர்க்கடலைப் பொடி, உருளைக் கிழங்கு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
- வேக வைத்த உருளைக்கிழங்கை தனியாக நன்றாக மசித்துக் கொள்ளவும். இதையும் அந்த கலவையுடன் நன்றாகக் கலக்கவும்.
- அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்தவுடன் சின்ன சின்ன சதுரங்களாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
- தட்டியதை வேர்கடலைப் பொடியில் புரட்டி எடுக்கவும்.
- எண்ணெயை காய வைத்து, மிதமான தீயில், புரட்டி எடுத்ததைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
10 நிமிடங்கள் 27 sec முன்பு
15 நிமிடங்கள் 50 sec முன்பு
ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு
6 மணிநேரம் 1 min முன்பு
6 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு