மட்டன் கடாய் வறுவல்

தேதி: July 1, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன்(எலும்பில்லாதது) - 1/2 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு அரைத்தவிழுது - 3 ஸ்பூன்
பட்டை - ஒரு அங்குல அளவு
ஏலக்காய் - 2
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 9 ஸ்பூன் (50ml)
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப


 

மட்டனை நன்கு சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் இஞ்சி,பூண்டு அரவை, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து கிளறி அது வேகும் அளவிற்கு (முக்கால் டம்ளர்) தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பில் வைத்து மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் டைம் பார்த்து பின் இறக்கவும்.
மூடியை திறந்து தண்ணீர் விட்டிருந்தால், அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட செய்யவும்.
தண்ணீர் சுண்டியதும், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
சூடு வந்ததும் பட்டை, ஏலக்காய் போட்டு பின் மட்டன் கலவையை அதில் சேர்க்கவும்.
மூன்று நிமிடத்திற்க்கு ஒரு முறை கிளறவும்.
நன்கு சுருண்டு வந்ததும், அடுப்பை லேசாக வைத்து கிளறிக்கொண்டு இருக்கவும்.
பதினைந்து நிமிடத்திற்கு பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.


எவ்வளவு நேரம் அடுப்பில் வைத்திருக்கின்றோமோ அவ்வளவு வறுவலாக இருக்கும். டேஸ்ட்டும் அலாதியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்