முட்டை அவியல் கறி

தேதி: July 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள், திருமதி. கவிசிவா அவர்களின் குறிப்பினை பார்த்து சில மாற்றங்களுடன் செய்த முட்டை அவியல் கறி இது.

 

முட்டை - 4
தேங்காய்ப்பூ - 7 மேசைக்கரண்டி
வெங்காயம் - 30 கிராம்
நற்சீரகம் - அரை தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம் புளி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு நெட்டு
புதினா இலைகள் - 10


 

வெங்காயத்தை தோல் உரித்து அரைக்க தேவைப்படும் அளவு போக மீதியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து எடுத்து நீளத்துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய்ப்பூ, மிளகாய் வற்றல், நற்சீரகம், மஞ்சள்தூள், 1/3 பங்கு வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்கவும். தேவைப்படின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதினை போட்டு சிறிது வதக்கி 250 மி.லி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் முட்டையினை மஞ்சள் கரு கீழே இருக்குமாறு அடுக்கி மீண்டும் கொதிக்க விடவும்.
அதிக நேரம் வேக தேவையில்லை, கறிவேப்பிலை/புதினா இலைகளைத் தூவி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதிகம் கிளறாமல், மெதுவாக முட்டைத் துண்டுகளைப் பிரட்டி விடவும்.
சுவையான முட்டை அவியல் கறி தயார். தேவைக்கேற்ப மிளகாயின் அளவைக் கூட்டியோ குறைத்தோ சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் அதிரா...இப்பவே செய்ய தூண்டுது..கவிசிவாவின் எந்த குறிப்பையும் தைரியமாக செய்யலாம் சுவையாக இருக்கும்..நிச்சயம் செய்து பார்த்து சொல்கிறேன்.சரியா அழகான ப்ரெசென்டேஷன் அதிரா

அதிரா....மற்றவர் குறிப்பை செது பார்த்து படம்/பின்னூட்டம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.குரிப்பினை செய்ய தூண்டிய கவிசிவாவிற்கும்,செது காட்டிய உங்களுக்கும் நன்றி.என் மாமியார் இதுபோல்தான் செய்வார்...இதோடுகூட முருங்கைக்காயும் சேர்த்து செய்வார்.நல்ல குறிப்பு
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அதிரா....மற்றவர் குறிப்பை செது பார்த்து படம்/பின்னூட்டம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.குறிப்பினை செய்ய தூண்டிய கவிசிவாவிற்கும்,செது காட்டிய உங்களுக்கும் நன்றி.என் மாமியார் இதுபோல்தான் செய்வார்...இதோடுகூட முருங்கைக்காயும் சேர்த்து செய்வார்.நல்ல குறிப்பு
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அதிரா....மற்றவர் குறிப்பை செது பார்த்து படம்/பின்னூட்டம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.குறிப்பினை செய்ய தூண்டிய கவிசிவாவிற்கும்,செது காட்டிய உங்களுக்கும் நன்றி.என் மாமியார் இதுபோல்தான் செய்வார்...இதோடுகூட முருங்கைக்காயும் சேர்த்து செய்வார்.நல்ல குறிப்பு
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அதிரா....மற்றவர் குறிப்பை செது பார்த்து படம்/பின்னூட்டம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.குறிப்பினை செய்ய தூண்டிய கவிசிவாவிற்கும்,செய்து காட்டிய உங்களுக்கும் நன்றி.என் மாமியார் இதுபோல்தான் செய்வார்...இதோடுகூட முருங்கைக்காயும் சேர்த்து செய்வார்.நல்ல குறிப்பு
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தளிகா மிக்க நன்றி. உண்மைதான், கவிசிவாவின் குறிப்புக்கள் அதிகமாக அரைத்து அரைத்துச் செய்யச் சொல்லியிருப்பா, ஆனால் கொஞ்சம் மினக்கெட்டு செய்தால் சுவையே சுவைதான். தளிகா இருமல் என பார்த்தேன், எங்கு பதில் போடவென்று தெரியாமல் விட்டுவிட்டேன். இப்போ நலமோ. எல்லாத்துக்கும் நற்சீரகம் சிறந்த மருந்து. விரும்பினால் கொஞ்சம் கற்கண்டும் சேர்த்துக் குடிக்கலாம்.

இளவரசி 4 தடவைகள்(பதிவுகள்) வாழ்த்தியிருக்கிறீங்கள் மிக்க நன்றி. முடிந்தவரை ஒவ்வொரு ரெயினுக்கும் ஒவ்வொரு குறிப்பாவது படங்களோடு செய்துள்ளேன். சிலநேரங்களில் முடியாமல் விட்டும் விட்டேன். இப்போ நினைக்க மனவருத்தமாகவும் இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அவர்க,

இதனுடன் தக்காலியும், செர்கலாமா

very nice receipe

அதிரா அவர்க,

இதனுடன் தக்காலியும், செர்கலாமா

very nice receipe

மிக்க நன்றி அதிரா. என் குறிப்பையும் யாரும் சமைக்கலாமில் பார்க்கும் போது மிக சந்தோஷமாக இருக்கிறது. படமெடுத்த உங்களுக்கும் வெளியிட்ட அட்மினுக்கும் மிக்க நன்றி.
நீங்கள் சொன்ன சின்ன சின்ன மாற்றங்களுடன் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.நிச்சயம் சுவையகத்தான் இருக்கும்.
எனது குறிப்புகளுக்கு கியாரண்டி கொடுத்த தளிகாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தளி ஆஃப்லைன் மெசேஜ் போட்டிருந்தேனே.பார்க்கலியா? இன்னிகு மெயில் அனுப்பறேன்
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இன்று மதியத்திற்கு இந்த குறிப்பில் உள்ள அளவுகளோடு செய்தேன் (இரவுக்கும் சேர்த்துதான்) சூப்பர், வயிற்றுக்கு வாய் இல்லை பாராட்ட. நன்றி

அன்பு சகோதரன்

பி.கு: ஒரே ஒரு சின்ன சந்தேகம்? முதல் படத்தில் உள்ள முட்டை நாட்டு கோழி முட்டையா? அல்லது கலர் அடித்த முட்டையா? அப்படி உண்மையான நாட்டு கோழி முட்டை என்றால் பிரதானியாபுரம் குளிரில் கோழிகள் எல்லாம் விறைத்துக் கொள்ளாதா? அப்போ அங்கு நாட்டு கோழிகள் இல்லை என்றால் வெளிநாட்டில் இருந்து வந்ததா? தயவு செய்து இந்த சந்தேகங்களை தீர்த்து வைத்து என்னை ”நிம்மதி” யோடு தூங்க வழிசெய்யவும்.

அந்த நாட்டு கோழி முட்டை பக்கத்தில்.. சே வேணாம் அப்புரமா கேட்டுகறேன் :),

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

முட்டையின் நிறம் பார்த்து குழம்பி விட்டீர்களோ? அது நாட்டுக்கோழி முட்டை இல்லை. சாயம் அடித்த முட்டையும் இல்லை. இங்கு கிடைக்கும் முட்டையின் நிறமே அதுதான். ஸ்கோட்லேண்டில் எப்படி என்று தெரியவில்லை. இந்தோனேஷியாவில் சாதாரண முட்டை நம்மூர் நாட்டுக்கோழி முட்டையின் நிறத்திலும், நாட்டுக்கோழி முட்டை வெள்ளையாகவும் இருக்கிறது!. இங்கு வந்த புதிதில் நானும் குழம்பித்தான் போனேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி.
கவிசிவா, அளவில்தான் மாற்றம் செய்தேன் மற்றும்படி உங்கள் முறையேதான். கறியின் அழகே மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும், நல்ல குறிப்பு.

மிக்க நன்றி ஹைஷ் அண்ணன், இப்ப இப்ப நீங்களும் நல்ல "செவ்".. ஆக மாறிக்கொண்டுவருவது தெரியுது. வயிற்றுக்கு வாய் இல்லாமலே இப்படிப் பாராட்டுறீங்கள்? அதற்கும் வாய் இருந்தால் எப்படி இருக்கும்:)?.
பி.கு: ஹைஷ் அண்ணன், நிறம்மாறும் பச்சோந்தி இல்லை என்று என்னைச் சொன்ன நீங்களே:)? இப்போ கலர் அடித்த முட்டையா எனச் சந்தேகப்படலாமோ:)?. இங்கு ஊர்க்கோழி முட்டையும் கிடைக்கிறது. அதாவது organic egg, எனக் கிடைக்கும். இங்கே சிலர் கோழி வளர்க்கிறார்கள், வளர்க்கலாம், ஆனால் அயலவர்களிடம் பெர்மிஷன் வாங்க வேண்டும்... ஏனெனில் காலையில் சேவல் கூவி ஆட்களை எழுப்பிவிடுமென்பதால். ஆனால் தனியே முட்டையிடும் கோழிகளும் கிடைக்குதாம் விசாரிக்கவேண்டும்.
///தயவு செய்து இந்த சந்தேகங்களை தீர்த்து வைத்து என்னை ”நிம்மதி” யோடு தூங்க வழிசெய்யவும்./// இதை... இதையேதான் சொன்னேன்:) ஏனைய தலைப்புக்களில் தேடுவதோ நிம்மதியை என்று:).

கவிசிவா.... 100% உண்மையைச் செப்பிட்டீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா.முட்டை அவியல் சுவையாக இருந்தது..கவிசிவாவுக்கும் அதிராவுக்கும் நன்றி.ஆனா எனக்கொரு சந்தேகம் எப்படி இவ்வளவு அழகா நாலா வெட்டி மஞ்சள் வெளிவராமல் செஞ்சீங்க எனக்கு நிறிய உடஞ்சு போச்சு அதனால் குழம்பில் கலங்கினதால் சுவையும் நன்றாக இருந்தது.

தளிகா
மிக்க நன்றி. நீங்களும் விடாமல் இப்போ என் குறிப்புக்களில் சமைப்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு. முட்டையை நன்கு அவிக்க வேண்டும் அப்போதான் உடையாமல் வெட்டலாம். முட்டையைக் கறியில் போட்டபின், கவிசிவா சொன்னதுபோல் கறண்டி பாவிக்கக்கூடாது, மெதுவாக, மாக் குழைக்கும் தடி... அப்படி ஏதாவதொன்றால் பிரட்டி விடவேண்டும். ஆனாலும் எல்லாம் உடையாமல் இருக்காது, சிலது கரைந்தும் விடும்.

என் சொசேஜ் ரோஸ்ட் செய்தமைக்கும் மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நற்சீரகம் என்றால் சோம்பா.