கர்ப்பமாக இருப்பவரிடம் நடந்து கொள்ளும் முறைகள்

வணக்கம் தோழிகளே... புதுசா ஒரு விஷயத்தை பற்றி பேச வந்திருக்கேன். :) இவளுக்கு வேறு வேளையே இல்லையான்னு கேக்குறீங்க... கேட்டுடுச்சு. என்ன செய்ய... சில நேரத்தில் யாராவது எதையாவது படிச்சு மாத்திக மாட்டாங்களான்னு ஒரு ஆசை... அதான் இப்படிலாம். படிச்சு பார்த்து உங்க கருத்தையும் சொல்லுங்கோ.

ஏன் உங்களுக்கு acidity problem? Antacid எதாச்சும் குடித்து பார்க்கலாமே? ஆனா உங்க கண்டிஷன் காரணமா டாக்டர் கிட்ட கேட்டுத்தான் செய்யணும். ஒரு வேளை ரொம்ப வெய்யில் காரணமா அப்படி இருக்கோ? எனக்கு தெரியலயேம்மா. ஊருக்கு அம்மா கிட்ட போன் பண்ணி கேட்டு பாருங்க. ஏதானும் கை வைத்தியம் சொல்லுவாங்க. வெய்யிலுக்கு குளிர்ச்சியா சாப்பிடனும் போல இருக்கும். ஆனா அதுதான் ஜலதோஷத்துல கொண்டு விட்டுடும். செப்டம்பர்ல due வா? இன்னும் 2 மாசம்தான் இருக்கு!! குட்டி பாப்பா வந்துடும் :)

ரீமா குட்டி நல்லா இருக்கான்னு கேட்டு சந்தோஷமா இருக்கு :) அவளே உங்க குட்டி பாப்பாவை வளர்த்துடுவா கவலைபடாதீங்க :) Girls are quite mature in this aspect.

எனக்கு ஒண்ணும் special விசேஷம்லாம் இல்லப்பா. work is very busy and taxing! பையன் 6th படிக்கறான். அடுத்த வருஷம் high school போகணும். இப்போதான் பிறந்து என் பக்கத்துல படுத்துட்டு விளையாடிட்டு இருந்த மாதிரி இருக்கு :) Time indeed flies!

Keep me posted as to how you're progressing. உடம்பை பார்த்துக்கோங்க. ரீமா குட்டிக்கு என் அன்பு முத்தங்கள் :)

அன்புடன்
உமா

எல்லோருக்கும் எதெதுவோ ப்ரச்சனை போல எனக்கு இது போல..என் மகளை கர்பமாக இருக்கப்பவும் இருந்தது ஆனால் இந்தளவுக்கு கொடுமையா இருக்கல முதல் சில மாதம் இருந்து போனது ஆனால் இது போன பின் திரும்ப வந்திருக்கு..பாவம் ஆசிட் ரிஃப்லக்ஸ் ப்ரச்சனை உள்ள குழந்தைக இப்படி தானே கஷ்டப்படும் என்று நினைக்கையில் சங்கடமா இருக்கு.
அம்மாட்ட இதுவரை எதுவும் சொன்னதில்ல..சொன்னா அதை நெனச்சு வருத்தப்படலாம்.இன்னைக்கு நிறைய தூரம் வாக்கிங் போனேன் அசிடிடி ப்ராப்லம் காணோம்:-)..ஆறாவது படிக்கும் பைய்யனா ஆஹா..ஆமாம் சொல்வது ரொம்ப சரி என் மகளே இப்ப இந்தளவு வளர்ந்துடுச்சேன்னு சமயத்துல எனக்கு சங்கடமா கூட இருக்கும்...அப்பப்ப பழைய புகைப்படங்களை புரட்டி பார்ப்பேன் அய்யோ மிஸ் பன்றோமேன்னு இருக்கும்..இப்படியே போனா கல்யாணம் பன்னி கொடுக வேண்டி வருமேன்னு கூட சமயத்துல பயமா இருக்கு..அதுக்கு தான் நிறைய நிதி சேத்துட்டு ஒரு மாப்பிள்ளையை வீட்டோட வாங்கிடலாம்னு என் கணவர் சமாதானம் பண்ணி வச்சிருக்கார்;-)
யாரது தூரமா சாட்டைவாரோட ஓடி வர்ரது??அய்யோ நம்ப வனிதா தான் ஓடிடுங்க

உமா... வாங்க. மிக்க நன்றி. பட்டிமன்றத்திலேயே உங்களை காணோம் என்று நினைத்திருந்தேன். இங்க உங்க பதிவை பார்த்ததில் மகிழ்ச்சி. :) நம்ம ஊரில் முக்கவாசி டாக்டர்கள் இப்படி தான்... கேட்டா ஒரு நாளைக்கு அவங்க உங்களை மாதிரி எத்தனை பேரை பார்க்கிறாங்க, அதான் பொறுமை இல்லாம போகுதுன்னு சொல்லுவாங்க. ஒரு பெண்ணே பெண்ணுக்கு தைரியம் குடுக்காம போறது வருத்தமான விஷயம் தான். அது சரி... கொடுமை செய்யும் மாமியாரும் பெண் தானே.... உறவுகளே அப்படி இருக்கும் போது அவங்க வெறும் டாக்டர் தானே...

தளிகா... நீங்க சொன்ன மாமியார் போல் ஒரு மாமியாரை நான் என் ப்ரெக்னன்சி செக்கப் போனப்போ பார்த்தேன்... கணவர் பெண்ணை சேர்த்த பின் உள்ளூரில் இருந்த கணவரில் அப்பா, அம்மா வந்தாங்க. வேறு யாரும் இல்லை அங்கு. அப்பா, அம்மா வரும் முன் கணவர் பெண்ணின் தாய் வீட்டுக்கு போன் செய்தார். அவர்கள் உடனே வருவதாக சொனார்கள் போலும். மாமியார் வந்ததும் யாரை கேட்டு போன் பண்ண??? யார் அதுங்களுக்கு வடிச்ஹ்cஉ போடுறது, வேலை பார்க்கிறது? வந்து அதுங்க ஒன்னும் கிழிக்க போறதில்லை, வர வேண்டாம்'னு உடனே போன் பண்ணி சொல்லு.... பிள்ளை பெற்று வீட்டுக்கு போனதும் வேலை அதிகமா இருக்கும், அப்போ வர சொல்லு'னு கத்த (படித்தவர் போலும் ஆங்கிலத்தில் தான் பாதி திட்டு), உடனே மகனும் சரி சரி என்று போன் செய்து விட்டார். மாமனார் தான் "இல்லம்ம நீ பண்றது தப்பு, இப்போ அவளுக்கு அவங்க அம்ம கூட இருக்கனும்"னு சொன்னார்... பலனில்லை, அவர் பேச்சுக்கு அங்கு பவரும் இல்லை.

தளிகா... அசிடிட்டி பிரெச்சனை பலருக்கும் இன்நேரத்தில் வருவது தான். பசிக்க மருந்து தருவாங்க, டாக்டரிடம் சொல்லுங்கோ. எனக்கும் இருந்துச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளிகா

ஆமா அதுவும் சரிதான். இந்த மாதிரி நேரத்துல உங்க பக்கத்துல இருக்க முடியலேன்னு ஏற்கனவே அவங்களுக்கு வருத்தமா இருக்கும். இதுல போய் உடம்பு சரி இல்லன்னு சொன்ன பயந்துடுவாங்கதான். வனி சொல்ற மாதிரி டாக்டர் கிட்ட consult பண்ணுங்க. பயப்படாதீங்க. ஹா ஹா வீட்டோட மாப்பிள்ளை வேணுமா அவருக்கு? :) பெண்ணை பிரிய அப்பாவால் முடியாதுதான் :) என் அப்பா இவ்வளவு வருடங்கள் ஆனா பின்னும் ஒவ்வொரு முறை இந்தியா போயிட்டு வரும்போதும் அழுவாங்க :) My mother is a lot stronger than my dad. Dads are such wuzzes when it comes to their precious daughters :)

வனி

உங்க டாபிக் பேசறது விட்டுட்டு நான் என்னென்னமோ கதைலாம் பேசிட்டு இருக்கேன். பட்டி மன்றத்தில பங்கேற்க நெனச்சேன். ஆனா நான் அங்க வந்து பாக்கற போது almost 50 பதிவுகள் ஆகிட்டது. சரி we missed the flow. அடுத்த முறை பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன் :)

நீங்க சொல்ற மாதிரி நெறைய மாமியார்கள் இருக்காங்க. ஏன்? என்னையே எடுத்துக்கோங்க. என் கணவரும் என் கூட அப்போ இல்லை. இங்கே ஆஸ்திரேலியா வில் இருந்தார். என் நாத்தனாரிடம் எனக்கு ஒரு சின்ன மனவருத்தம். பெரிய விஷயம்லாம் இல்ல. அதை காரணமாய் வைத்து என்னையும் என் குழந்தையையும் பார்க்கவே அவர் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. I was at the hospital for more than 10 days due to complications. No one even called to say hello or ask how i was.

நான் அவர்களிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்து இருந்தேன். But due to parental pressure, நான்தான் போன் செய்து வீட்டுக்கு வந்து விட்டேன் என்று கூறி அவர்களை வர சொன்னேன். Psst அதெல்லாம் கசப்பான அனுபவங்கள். ஆனால் என் மாமியார் இறக்கும் சமயத்தில் என் co sister இடம் இந்த விஷயத்தை சொல்லி வருந்தி இருக்கிறார். அந்த விஷயத்தினால் தான் உமா எங்களை விட்டு மனதளவில் விலகி விட்டாள் என்று. என்ன பிரயோஜனம்? என் அம்மா அப்பாவை அவமதித்தது மாறுமா? வீட்டிற்கு அழைக்கும் நிகழ்ச்சிக்கு தமிழில் என்ன பெயர்? புண்ணிய வசனம்? அதற்கு ஊரே திரண்டு வந்தது. என் புகுந்த வீட்டை தவிர. அப்பா அப்போது மிக பெரிய பதவியில் இருந்தார். எவ்வளவு அவமானம். I have never forgiven them for what they did to me, my parents or to my little boy.

சரி விடுங்க. சொந்த கதை சோக கதை :) மீண்டும் பேசுவோம்.

அன்புடன்
உமா

உமா... எல்லார் வாழ்விலும் உண்மை கொஞ்சம் கசப்பா தான் இருக்கும். நீங்க மட்டுமில்லை எந்த பொண்ணும் இது மாதிரி ஆளுங்களை மன்னிக்க மாட்டா... என் அம்மா இன்னும் அவங்க மாமியார் மேல கோவமா தான் இருக்காங்க... ஆனாலும் அவங்களுகு செய்ய வேண்டியதை சரியா செய்துடுவாங்க. மாமியார் மேல ஏன் கோவம் தெரியுமா??? மாமியருக்கு இரண்டும் பொண்ணா பெத்துட்டான்னு மருமக மேல (என் அம்மா மேல) கோவம்.... அதனால் பார்க்க வரல... குழந்தைக்கு செய்ய வேண்டிய எதையும் செய்யல.... இன்னைக்கு வரைக்கும் உங்க மேல அன்பா இல்லை'னு சொல்லி வருத்த படுவாங்க. :)

எங்க பாட்டி அப்படி தான்... எனக்கு பொண்ணு பொறந்துடுச்சுன்னு கூட தங்கை கல்யாணத்துக்கு வந்தப்போ பார்த்துட்டு (இதுகுன்னு யாரும் வந்து பார்க்கல... கல்யாணத்துக்கு வந்தப்போ அப்படியே குழந்தையை பார்த்துட்டு போனாங்க.) ரொம்ப வருத்தமா சொன்னங்க எங்க பாட்டி. ஏன் நாங்களாம் பொண்ணா பிறந்து என்ன கெட்டு போச்சு இப்போ.... கிளம்பு என் பொண்ண வளர்க்க எனக்கு தெரியும்'னு சொல்லிட்டேன். ;)

இது அங்கோடு முடிவதில்லை... என் மாமியார் கூட "நீ ஒரு நல்ல பொண்ணா இருந்தா ஆண் பிள்ளை பொறக்கனும்'னு வேண்டிகிட்டு இருக்கணும்"னு என்கிட்ட சண்டை போட்டாங்க.... நம்மலாம் லேசு பட்ட ஆளா??? பொண்ணு பிறக்கனும்'னு தவமிருந்து பெத்தேனே.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் உமா
எனக்கு உங்கள் மனநிலை நன்கு புரிகிறது ஏனென்றால் எனக்கும் உங்களைப் போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது ஒன்றல்ல இரண்டு முறை.
எனக்கு இரண்டு முறை miscarriage ஆனபோதும் எனது கணவர் வீட்டினர் ஒருவர் கூட என்னை வந்து பாக்கவில்லை.ஏன் ஒரு phone call கூட செய்யவில்லை.இத்தனைக்கும் எங்களுக்கு திருமணமான புதிதில் எனது நாத்திநாருக்கு இதே போன்று பிரச்சனை ஆனபோது நான் ஒரு வாரம் அவருடன் இருந்து கவனித்துக்கொண்டேன்.எனினும் அவருக்குக்கூட என்னை வந்து பார்க்க மனமில்லை. எனது நாத்திநாருக்கு 25 வயது தான் ஆகிறது. நன்கு படித்த இளம் தலைமுறையினரே இப்படி என்றால் பெரியவர்களிடம் எதை எதிர்பார்ப்பது?.இப்படி நிறைய ஜென்மங்கள் இந்த உலகில் உள்ளனர். என்ன செய்வது கடவுள் தான் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
நான் மனதளவில் அவர்களை விட்டு வெகு தூரம் விலகிவிட்டேன்.பெயரளவில் தான் உறவு. ஆனால் என் கணவர் எங்கு சென்றாலும் அது வேண்டும் இது வேண்டும் என்று list போடுவதில் ஒன்றும் குறைச்சலே இல்லை.எல்லாத்தையும் நான் தான் கூட இருந்து வாங்க வேண்டியிருக்கு.எல்லாம் தலை விதி (வலி).

திவ்யா

உமா எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் எழுதி அழித்து விட்டேன் .விட்டு தள்ளுங்க சிலர் அப்படி தான்.
தெரிந்த ஒரு கர்பிணி பெண்ணிடம் பேசினேன் இன்று.அவரும் நானும் ஒரே ஹாஸ்பிடலுக்கு போகிறோம்..அப்பொழுது பேச்சு வந்து வந்து அங்குள்ள மேல் கைனகாலஜிஸ்ட் பற்றி பேச்சு வந்தது..நானும் அய்யோ நினைக்கையில் கூச்சமா இருக்கு என்று விட்டு விட்டேன்..அந்த பெண் வாய் கூசாமல் அந்த கைனகாலஜிஸ்டிடம் போகும் பெண்களெல்லாம் மோசமான எண்ணத்தில் போகிறவர்களாக இருப்பார்கள் இல்லையென்றால் பெண் கைனலாலஜிஸ்டிடம் தான் போவார்கள் என்றதும் எனக்கு நாக்கு உள்ளே போய் விட்டது..பேசாமல் எழுந்து வந்து விட்டேன் பிறகு மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
ஒரு பெண்ணே மற்ற பெண்களை பற்றி இப்படி தவறாக பேசலாமா?என்னென்னவோ காரணத்துக்காக அவரிடம் வந்திருக்கலாம்..வரிசையாக அவரை காண குடும்பப்பெண்கள் இருந்தார்கள்..அவர்களின் முகத்தை பார்த்து அப்படி அவளால் எப்படி சொல்ல முடிந்தது என்று எண்ணி வியந்தேன்..பெண் தான் பெண்ணுக்கு எதிரி

ரொம்ப ரொம்ப சாரி பா. இப்போதான் உங்க பதிவுகளை படித்தேன்.

வனிதா எனக்கும் பெண் குழந்தைனா ரொம்ப ரொம்ப ஆசை :) நான் ப்ரெக்னன்ட் ஆக இருந்தபோது பெண்தான் நிச்சயம் பிறக்கும் என்று அவ்வளவு ஆவலோடு இருந்தேன். எனக்கு சர்ஜரி முடித்து recovery ரூமில் உமா எழுந்துரு அப்படின்னு என் டாக்டர் எழுப்பினார்கள். முதல் கேள்வி எனக்கு பெண்தானே என்றேன். இல்லை ரோஜாப்பூ மாதிரி பையன் என்றார். அப்படி ஒரு disappointment :) அவ்வளவுதான். இரவு தான் மயக்கம் தெளிந்து என் தங்க மகனை பார்த்தேன். என்னை கண்களை விரித்து பார்த்து செப்பு வாயால் கொட்டாவி விட்டான். அப்போது மயங்கியவள் தான் (இது வேறு மயக்கம்) :) ஆனால் எனக்கு பெண்தான் என்ற ஆசையில் pink frock pink this pink that என்று வாங்கி அடுக்கி வைத்து இருந்தேன். இப்போதுகூட என் பையன் அந்த போட்டோ எல்லாம் பார்த்தால் aargh mom why did you do this to me? என்று கேட்பான் :)

திவ்யாஸ்ரீ நீங்கள் எழுதியதை படித்து மனது கஷ்டப்பட்டது. :( ஏன்தான் இவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களோ? இதை எல்லாம் நினைக்கும்போது நம் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி கல்யாணம் ஆனா பிறகு நிச்சயமாக நம் மருமகள்களை மகளாக பார்த்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புதான் அதிகம் வருகிறது. இவர்களை எல்லாம் நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை திவ்யா. நம் கையே நமக்கு உதவி என்றுதான் இருக்க வேண்டும். மகள் என்றால் ஒரு மாதிரி treatment மருமகள் என்றால் வேறு மாதிரி. என்ன செய்வது. நம் society எப்போதுதான் மாறுமோ?

தளிகா பெண்ணுக்கு பெண்தான் எதிரி :) எந்த மாமனாரவது மருமகளோடு குடுமி பிடி சண்டை போடுகிறாரா? ஒருவரைப்பற்றி கீழ்த்தரமாக பேச சிலருக்கு சிறுதும் தயக்கம் இருப்பதில்லை. They think its their god given right to speak so low of other people! நீங்கள் செய்ததைதான் நானும் செய்வேன். அவர்களோடு வாக்குவாதம் செய்யாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன். இவர்களோடு சண்டை போட்டால் நம்மை பற்றி மற்றவரிடன் கீழ்த்தரமாக பேசுவர். உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது தங்கையே? இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றது இல்லையா? :) ரீமா குட்டி எப்படி இருக்கிறாள்?

ஒன்று சொல்லவேண்டும் தளிகா. யார் எதாவது கேட்டாலும் உங்களுக்கு தெரிந்த விஷயமாக இருந்தால் உடனே பதில் போடுகிறீர்கள் :) குழந்தையை வைத்து கொண்டு எவ்வளவு வேலை இருக்கும். ஆனாலும் இப்படி உடனே பதில் கொடுத்து விடுவது கண்டு நான் வியப்பதுண்டு :) உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
உமா

பத்தி பத்தியா எழுதலாம் இல்லை ஒருவரியிலும் சொல்லலாம் இவங்கள பற்றி!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

யாரை சொல்லுகிறீர்கள்? பக்கி என்றால் என்ன? படித்த பக்கி என்றால் படித்த முட்டாள் என்று அர்த்தமா?

உமா

மேலும் சில பதிவுகள்