பட்டாணிக்கடலை குழம்பு

வழங்கியவர் : thalika
தேதி : வியாழன், 02/07/2009 - 02:34
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- காய்ந்த பட்டாணிக்கடலை - 1.5 கப்
- கறிவேப்பிலை - 2 இணுக்கு
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
- தக்காளி - ஒன்று
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
- கறிமசாலா தூள் - 1.5 ஸ்பூன்
- சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - ஒரு ஸ்பூன்
- முதலில் பட்டாணிக்கடலையை முதல் நாள் இரவே ஊற போட்டு விடவும்.
- மறுநாள் குக்கரில் அரை கப் தண்ணீர் விட்டு கடலை மற்றும் உப்பு சேர்த்து ஒரே விசில் மிதமான தீயில் வேகவிடவும்.
- பிறகு வேறு கடாயில் சிறிது எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை நன்கு வதக்கி ஆறவைத்துக் கொள்ளவும். ஆறின பின் அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு மீதமுள்ள எண்ணெயை காயவைத்து இஞ்சி பூண்டு விழுதினை வதக்கி பச்சை வாடை போனதும் தக்காளி மற்றும் இதர பொடிகளும் அரைத்த வெங்காய விழுது மற்றும் வேகவைத்த பட்டாணிக்கடலையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு குறைந்த தீயில் கிளறி மூடி விடவும்.
- 15 நிமிடத்தில் கெட்டியான கிரேவியாக வந்தபின் தீயை அணைத்து விட்டு பரிமாறவும்.
Note:
சப்பாத்தி, பூரி, பரோட்டா முதலியவற்றிக்கு அருமையாக இருக்கும். இதற்கு வெங்காயத்தை சிறிது அதிகமாகவும் வதக்கி அரைத்தும் சேர்த்தால் சுவை கூடும். கவனிக்க வேண்டியது கடலை அளவாக வெந்திருக்க வேண்டும். இரண்டு விசில் தெரியாமல் வந்துவிட்டால் ப்ரெஷரை எடுத்து விட வேண்டும் இல்லையென்றால் அதிகப்படியாக வெந்த கடலைக்கு குழம்பு சுவை தராது.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
45 sec முன்பு
4 நிமிடங்கள் 54 sec முன்பு
8 நிமிடங்கள் 5 sec முன்பு
8 நிமிடங்கள் 16 sec முன்பு
13 நிமிடங்கள் 46 sec முன்பு
24 நிமிடங்கள் 37 sec முன்பு
31 நிமிடங்கள் 39 sec முன்பு
35 நிமிடங்கள் 15 sec முன்பு
32 நிமிடங்கள் 47 sec முன்பு
40 நிமிடங்கள் 3 sec முன்பு