ஸ்டாக்கிங் துணியை கொண்டு செயற்கையான பூங்கொத்து (பொக்கே) செய்வது எப்படி?

தேதி: July 2, 2009

5
Average: 5 (3 votes)

இந்த அழகிய, செயற்கையான பூங்கொத்து செய்முறையை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர், திருமதி. ஜீவா மோகன் அவர்கள். சமையலில் தீவிர ஆர்வம் கொண்ட இவர். உணவுச் சத்துக்கள் குறித்து ஏராளமாக படித்தவர். சமையலில் மட்டுமல்லாது பின்னல் வேலைகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல் இவை அனைத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர்.

 

மூங்கில் கூடை
ஸ்டாக்கிங் துணி - விரும்பிய நிறங்கள்
அலுமினிய கம்பி
கம் டேப்
நூல்
காட்டன் பஞ்சு
கட்டு கம்பி(திக்கான கம்பி)
கத்திரிக்கோல்

 

கொடுத்திருக்கும் அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் பெரிய பூக்கள் செய்வதற்கு அலுமினிய கம்பியை 19 செ.மீ அளவில் 3 கம்பிகள் வெட்டிக் கொள்ளவும். நடுத்தர அளவில் பூக்கள் செய்வதற்கு 13 செ.மீ அளவில் 3 கம்பிகளும், சிறிய பூக்கள் செய்வதற்கு 11 செ.மீ அளவில் 6 கம்பிகளும் வெட்டிக் கொள்ளவும். இந்த அளவுகள் ஒரு பூங்கொத்து செய்வதற்கு மட்டும்.
வெட்டி வைத்திருக்கும் கம்பிகளில் ஒரு கம்பியை எடுத்து இதழ் போல சமமாக வளைத்துக் கொள்ளவும். பிறகு வளைத்த கம்பியை ஸ்டாக்கிங் துணியின் ஒரு முனையில் வைத்து கம்பி முழுவதும் மறையும் படி வைத்து இரண்டு முனையும் இணையும் இடத்தில் இறுக்கமாக பிடித்துக் கொள்ளவும்.
பிறகு நூலால் பூ தொடுப்பது போல் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். நன்கு இறுக்கமாக இருக்க இரண்டு அல்லது மூன்று முடிச்சு போட்டுக் கொள்ளவும். அதன் பின்னர் கத்திரிக்கோலால் மீதி துணியை வெட்டி விடவும்.
இதைப் போல் எல்லா நிறங்களிலும் உள்ள ஸ்டாக்கிங் துணியிலும் மற்றும் வெட்டி வைத்திருக்கும் கம்பிகளை கொண்டு இதழ்கள் செய்து வைத்துக் கொள்ளவும்.
சிறிதளவு பஞ்சை எடுத்துக் கொண்டு கையில் வைத்து நீளவாக்கில் தேய்க்கவும். (எந்த அளவுக்கு மொக்கு வேண்டுமோ அந்த அளவிற்கு பஞ்சை எடுத்துக் கொள்ளவும்). பஞ்சை திரித்த பிறகு மேலே கம் டேப்பை நுனியிலிருந்து வைத்து நெருக்கமாக சுற்றவும். பஞ்சு முழுவதும் சுற்றிய பிறகு அடியில் டேப்பை வெட்டி விடவும். தேவையான அளவு மொக்குகள் செய்துக் கொள்ளவும்.
6 செ.மீ அளவில் ஒரு கம்பியை எடுத்துக் கொண்டு, அதை ஒரு இதழின் அடியில் முடிச்சு போட்டிருக்கும் இடத்தில் விட்டு சிறிதளவு வளைத்துக் கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ளது போல் மற்றொரு இதழை அதன் அடியில் வைத்து பூத்தொடுப்பதுப் போல் தொடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் மற்றொரு இதழையும் இரண்டாவது இதழுக்கு பின் வைத்து நன்கு முடிச்சு போட்டு நூலை வெட்டி எடுத்து விடவும். பிறகு பூவின் அடிப்பகுதியிலிருந்து கம்பியின் நுனிவரை கம் டேப்பை சுற்றவும்.
இதைப்போல் ஒவ்வொரு பூ செய்வதற்கும் மூன்று இதழ்கள் என்ற கணக்கில் சிறிய இதழ்களிலிருந்து பெரிய இதழ் வரைக்கும் எல்லா அளவுகளிலும் பூக்கள் செய்துக் வைத்துக் கொள்ளவும். இதேப் போல் மற்ற ஸ்டாக்கிங் நிற துணியிலும் செய்துக் கொள்ளவும்.
மேலே சொல்லியிருக்கும் முறைப்படி கம்பிகளை கொண்டு ஒரு இதழ் செய்துக் கொண்டு அதன் நடுவில் சிறிதளவு பஞ்சை வைத்து இதழை இரண்டாக மடித்து விடவும். அடியில் கம் டேப்பை சுற்றி விடவும். இதைப் போல் எல்லா நிறங்களிலும் உள்ள துணியிலும் பூவின் மொக்குகள் செய்துக் கொள்ளவும். (பூவின் மொக்கு செய்வதற்கு தனியே 11 செ.மீ அளவில் உள்ள கம்பிகளை பயன்படுத்தவும்.)
பிறகு தடிமனான கட்டுக் கம்பியை ஒரு அடி அளவில் எடுத்துக் கொள்ளவும். அல்லது அலுமினிய கம்பி நன்கு தடிமனாக இருக்க கம்பியை இரண்டு அல்லது மூன்றாக சேர்த்து முறுக்கிக் கொள்ளவும். முறுக்கிய கம்பி ஒரு அடி அளவில் இருக்கவேண்டும்.
கட்டு கம்பியின் நுனியில் முதலில் பச்சைநிற கம் டேப்பை சுற்றவும். பிறகு செய்து வைத்திருக்கும் பச்சைநிற மொக்குகளை கம்பியின் நுனியில் வைத்து கம் டேப்பால் சுற்றவும். அந்த மொக்குப் பகுதிக்கு ஒரு இன்ச் கீழே இறக்கி மற்றொரு பச்சைநிற மொக்குகளை சுற்றவும். இதேப் போல் அடுத்து ஒரு இன்ச் விட்டு இன்னொரு மொக்குகளை வைத்து சுற்றிக் கொள்ளவும். அதற்கும் அடியில் துணியில் செய்து வைத்திருக்கும் பூவின் மொக்குகளை வைத்து கம் டேப்பை கொண்டு சுற்றவும்.
அதன் பிறகு வெவ்வேறான வடிவங்களில் இருக்கும் பூக்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து கம் டேப்பால் சுற்றவும் (சிறியதிலிருந்து பெரியது). பின்னர் கம்பியின் நுனிவரை கம் டேப்பை சுற்றி விடவும். இதைப் போல மற்ற எல்லாவகை ஸ்டாக்கிங் துணியின் நிறங்களிலும் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய காம்பிற்கு ஒரே நிறத்திலான பூக்கள் - 4, பச்சைமொக்கு - 3, பூக்களின் நிறத்திற்கு - 3 மொக்குகள் வேண்டும். உங்கள் விருப்பம் போல் பூக்களின் நிறங்களை மாறி மாறி வைத்து செய்துக் கொள்ளலாம்.
முதலில் மூங்கில் கூடையில் செயற்கை புல்லை பரப்பி வைத்து விட்டு அதன் மேல் செய்து வைத்திருக்கும் பூங்கொத்துக்களை ஒவ்வொன்றாக, அழகாக இடத்திற்கு ஏற்றவாறு அடுக்கவும். இப்போது செயற்கையான அழகிய பூங்கொத்து தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பூக்கள் அழகாக இருக்கின்றன. சிறிய பூக்கள் & பச்சை மொட்டுக்கள் செய்துள்ள விதம் நன்றாக இருக்கிறது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta