தேங்காய் கேக்

தேதி: July 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா மாவு - 2 கப்
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - ஒரு கப்
பால் - ஒரு கப்
முட்டை - 3
உப்பு - ஒரு சிட்டிகை
வென்னிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி


 

மைதாவை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் எல்லாவற்றையும் போட்டு ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் மாவுடன் வெண்ணெயை சேர்த்து கலந்து வைக்கவும்.
முட்டையை அடித்து, அதில் பால், வென்னிலா எஸன்ஸ் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியில் தேங்காய் துருவலையும் இந்த மாவு கலவையில் சேர்க்கவும்.
பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 F முற்சூடு செய்த அவனில் 30 - 40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சாஃப்டான சுவையான தேங்காய் கேக் தயார். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

vanitha ....very nice to c ur cake..good receipe
congrats...
I too always interested to try for variety of cakes
my tamil font not activating now...more to u later

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மிக்க நன்றி இளவரசி. :) செய்து பார்த்து குழந்தைகளுக்கு பிடித்ததா என்று சொல்லுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றாக இருக்கு இந்த கேக்.
பார்க்க பார்க்க பசியெடுக்குது.
கண்டிப்பாக விரைவில் செய்து சாப்பிடுவோம்.
இந்த குறிப்பு கொடுத்ததற்கு நன்றி.

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

ஷாஹீலா

மிக்க நன்றி. :) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சூப்பரான கேக் ரெசிபி குடுத்திருக்கீங்க.ஊருக்கு போய்விட்டுவந்து கண்டிப்பாக செய்துபார்த்து சொல்கிறேன்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

பார்க்கவே சூப்பர்.இளநீர் சீவி வைத்தது போல் நடுவில் என்ன வனிதா?அப்புறம் இந்த கலர் காம்பினேஷன்,வைத்த கண்ணை எடுக்க முடியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நல்ல ரெசிப்பி. எனக்கு கேக் செய்ய ரொம்ப பிடிக்கும். இதை பார்த்தவுடன் உடனே செய்யனும் போல் இருக்கு. எல்லா பொருட்களும் வாங்கியவுடன் அவசியம் செய்துவிட்டு சொல்கிறேன்.

ஹாய் வனிதா நலமாக இருக்கின்றீர்களா?காலையிலிருந்து பிஸியாகி விட்டேன்.இப்போதுதான் பார்த்தேன்.சூப்பர் கேக் கொடுத்து அசத்தி விட்டீங்க.பார்க்க அழகா இருக்கு.இன்னும் இரண்டு நாளில் ஊருக்கு போவதால் உடனே செய்து பார்க்க முடியாது.வந்துதான் செய்து பார்க்கணும்.அதான் வருத்தம்.வனிதாவுக்கு என் வாழ்த்தும்,பாராட்டும்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வனிதா,
தேங்காய், உடனே துருவியதா அல்லது கடையில் வாங்கிய உலர்ந்த துருவலா? எதனைச் சேர்த்தீர்கள் என்று தெரிந்தால் செய்து பார்க்கிறேன். படங்கள் அழகாக இருக்கிறது. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

பார்க்கும் போதே சுவைக்க தூண்டுது. எல்லாம் கொஞ்சம் கிராம் அளவில் சொல்லுங்களேன். இந்த கப் அளவு ஒருசில நேரங்களில் எனக்கு சரியாக வருவதில்லை. முடிந்தால் சொல்லுங்க இல்லைனா கப்பில் ட்ரை பண்ணுகிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

செல்வி நலமா? அவசியம் செய்து பாருங்க. மகள் நலம் என மெயில் இப்போது தான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி ஆசியா. அது செர்ரி பழம் தான். இப்போ சீசன் இங்க.

மிக்க நன்றி விஜி, செய்து பார்த்து பிடிச்சிதான்னு சொல்லுங்க.

மிக்க நன்றி அப்சரா... நான் நலம். நீங்க நலமா? நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க.

மிக்க நன்றி இமா.... நான் சேர்த்தது வாங்கியது தான். ஆனால் உங்களுக்கு ப்ரெஷ் கிடைச்சா துருவி சேருங்க, நல்ல சுவையா இருக்கும். இப்போ இங்க தேங்காய் சீஸன் கிடையாது. செய்துட்டு சொல்லுங்க. ட்ரை தேங்காய் என்றால் செய்ததும் சீக்கிரம் முடிச்சிடனும், இல்லன்னா கேக் சாப்ட்னஸ் சீக்கிரம் போயிடும்.

மிக்க நன்றி தனிஷா... எனக்கு கிராம் கணக்கில் தெரியலயே.... :( நான் எப்பவும் அளவுக்கு எலெக்ட்ரிக் குக்கரில் வரும் 200ml கப் தான் பயன்படுத்தறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பரவாயில்லை. நான் செய்து பார்க்கிறேன். ரொம்ப ஆசையா இருக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வனிதா இப்பத்தான் பார்க்கிறேன், அழகான சுவையான, ஈசியான கேக். இது கேக் பீற்றரால் அடிக்கத் தேவையில்லையா? சும்மா கலந்து வைத்தால் போதுமா?
தனிஷா, என்னை நினைத்துக்கொண்டா என் பெயரும் போட்டீங்கள்:)? நீங்கள் பெயர் போட்டதால்தான் நான் இதைப்பார்த்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா... உங்க பதிவுக்கு நன்றி உங்களுக்கு சொல்றதா, தனிஷா'கு சொல்றதா??? ;) கேக் பீட்டரெல்லாம் வேண்டாம், சாதாரண தேக்கரண்டி கொண்டு ஒரே பக்கமாக கலந்தாலே போதும். செய்துட்டு சொல்லுங்கோ. :) உங்களுக்கும் தனிஷா'கும் மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா