முள்ளங்கி பருப்பு குழம்பு

தேதி: July 2, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளங்கி - 2 கப் (நறுக்கியது)
துவரம் பருப்பு - 1 கப்(வேக வைத்தது)
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 2 பழுத்தது
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தூள் - 1 அரை தேக்கரண்டி
புளி விழுது - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி


 

கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்க்கவும்.
அதில் வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். அதில் முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் சேர்த்து லேசாக வதக்கி 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து நன்கு வேக வைக்கவும்.
அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின் புளி விழுது சேர்த்து கொதிக்க வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.


அனைத்து வகையான காய்கள், கீரைகள் கொண்டு இம்முறையில் குழம்பு செய்யலாம். கறிவேப்பிலைக்கு பதில் துளசியும் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு நெய் சேர்த்து கொடுக்கலாம். துளசி சேர்ப்பதால் சளி தொல்லைக்கு நல்லது

மேலும் சில குறிப்புகள்