ரவா கேசரி

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவா - கால் கிலோ
சீனி - 400 கிராம்
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
கேசரிபவுடர் - ஒரு சிட்டிகை
நெய் - 150 கிராம்


 

ரவையை வாணலியில் 50 கிராம் நெய் விட்டு கொஞ்சம் சிவக்க வறுத்து எடுக்கவும்.
முந்திரியையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் என்ற அளவில் ஊற்றி, சூடேறியதும் அதில் ரவையை கொட்டி, சிறுதீயில் கட்டிபடாமல் கிளறிய வண்ணம் இருக்கவும்.
அத்துடன் கேசரி பவுடரை கரைத்து தேவையான அளவு அதில் விட்டு, நெய் 100 கிராமையும் அதில் விட்டு கிளற வேண்டும்.
பிறகு சீனி சேர்த்து, ஏலப்பொடி வறுத்த முந்திரியையும் போட்டு கிளறி பாத்திரத்தில் நெய் தடவி, அதில் கேசரியை எடுத்து வைக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்