உள்ளி தீயல்

தேதி: July 4, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

உள்ளி (சின்ன வெங்காயம்) - 10 அல்லது 15
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு
தேங்காய் துருவியது - கால் கப்
காய்ந்த மிளகாய் - 7
கொத்தமல்லி விதை - ஒரு தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வெந்தய பொடி - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு சிட்டிகை (தேவையென்றால்)
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

உள்ளியை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும். புளியை ஊறவைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
தேங்காயை நன்கு பொன்னிறமாக ஆகும் வரை வறுக்க வேண்டும்.
மிளகாய் (5), மல்லி, மிளகு மற்றும் சீரகத்தை வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.
ஆறியபின் வறுத்தவைகளை அரைத்து கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் (2), பெருங்காயம், வெந்தயபொடி சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய உள்ளியை சேர்த்து சிவக்க வதக்கவும். பின்பு கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
சுவையான உள்ளி தீயல் சுடு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா,
இன்று உள்ளி தீயல் செய்ய நினைத்தேன், பின்னர் சந்தேகமாக இருந்ததால் விட்டுவிட்டேன். தீர்த்துவைத்தால் நாளை செய்கிறேன்.

இங்கு உள்ளி என்று எதைச் சொல்கிறீங்கள்? சின்னவெங்காயம் வேறு உள்ளி வேறல்லவா? உள்ளி என்றால் பூண்டுதானே. சின்ன வெங்காயத்தைத்தான் சொன்னனீங்கள் என்றால், அதுக்குப் பதில் பெரிய வெங்காயம் பாவிக்கலாமோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உள்ளி அதிரா! திருநெல்வேலி பக்கத்தில ஷாலட்ஸ் - உள்ளி என்டு சொல்வார்கள்...
instead try using big onion ( pink/red onion is sweet if you have yellow/white then it will be nice)
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா அப்படியா சங்கதி. நாளை முயன்று பார்க்கிறேன் மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா...

நாங்கள் சின்ன வெங்காயத்தை தான் உள்ளி என்று சொல்லுவோம். பூண்டை வெள்ளதுல்லி என்று சொல்லுவோம். சின்ன வெங்காயத்தில் செய்வது தான் சிறப்பு. நான் இது வரை பெரிய வெங்காயத்தில் செய்ததில்லை. சுவை மாறலாம் என்று நினைக்கிறன். செய்து விட்டு வந்து பின்னூட்டம் கொடுங்கள்.

இலா ரொம்பவே கரெக்ட்.....

லாவண்யா

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Tried it First Time and came Super Good.

Thank You for Sharing the Information :-)

Life is a Magic