மீல்மேக்கர் பிரியாணி

தேதி: July 4, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மீல்மேக்கர் - ஒரு கப்
அரிசி - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
காரட் - ஒன்று
பீன்ஸ் - 25 கிராம்
பச்சை பட்டாணி - 25 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
லவங்கம் - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய்/வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

மீல்மேக்கருடன் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி அரிசியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர் மற்றும் நெய்/வெண்ணெய் சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
பின்பு மூடியை திறந்து வேகவைத்த மீல்மேக்கர், நறுக்கிய காரட், பீன்ஸ், பட்டாணி அனைத்து பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மீண்டும் வேக வைக்க வேண்டும். வெந்ததும் ரைத்தாவுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மிஸஸ் மூர்த்தி அவர்களுக்கு வணக்கம்.மீல்மேக்கர் என்பது என்ன?தவறாக நினைக்க வேண்டாம்.எனக்கு தெரிய வில்லை அதான்..தெரிந்தவுடன் செய்து பார்ப்பேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நான் குறிபிட்டுள்ள மீல்மேக்கர் என்பது சொயவினால் ஆனது .மீல்மேக்கர் என்பது ஒரு "brand" கடைகளில் வேறு "brand" கூட கிடைக்கும். அதனுடைய பொது பெயர் "soya chunks" . நம்ப "xerox" madiri. இதில் தப்பாக நினைக்க ஒன்றுமே இல்லை. மேலும் சந்தேகம் இருந்தால் தாராளாமாக கேளுங்க....
Ms.Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!