வடகம் எவ்வளவு நாள் வைத்து இருக்கலாம்

ஹாய் தோழிஸ் எனக்கு வடகம் பற்றி தெரிய வேண்டும்......

வடகம் எத்தனை நாள் வைத்து உபயோகிக்கலாம். கெஞ்சம் ஈரம் இருக்கிரது. ( உடைத்தால் உடைந்துவிடும்)

நன்கு காய்ந்தும் இருக்கிரது. ( கையால் உடைப்பது கடினம். )

என்னிடம் 2 விதமாக இருக்கிரது. எவ்வளவு நாள் வைத்து இருக்கலாம்...

எவை முதலில் காலி செய்ய வேண்டும். செல்லுங்கள் பிலீஸ்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் தயவு செய்து பதில் தாருங்கள் பிலீஸ்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வடகம் எளிதாக உதிர்க்கும்படியாக இருந்தாலும் சரி, கடினமாக இருந்தாலும் சரி, கை படாமல் சுத்தமான டப்பாவில் பாதுகாத்து வைத்திருந்தால் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அவ்வப்போது ஒரு சிறிய டப்பாவில் ஒன்றிரண்டு உருண்டைகளை உதிர்த்துப்போட்டு வைத்துக் கொள்ளலாம். அதிலிருந்து எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். வாசனையோ,ருசியோ நாலைந்து வருடங்கள் ஆனாலும் மாறாது.

ஹாய் மனோ அம்மா நல்லா இருக்கிங்கலா? உங்க உடம்பு நல்லா ஆயிடுச்சா....... உங்க முட்டி வலி எப்படி இருக்குமா........ ரொம்ப நாள் கழிச்சு உங்க கிட்ட பேசுரது சந்தோஷமா இருக்குமா.........

உங்கள் பதிலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிம்மா.........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மனோ மேடம்...!! எப்படி இருக்கீங்க? நலமா? செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று கேட்டிருந்தேன். உங்களிடமிருந்து செய்முறை விளக்கம் வரும் என்று காத்திருந்தேன். உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களுடைய கறிவேப்பிலை குழம்பு செய்தேன். நன்றாக இருந்தது. வித்தியாசமான டேஸ்ட்டுடன்............
நான் கொஞ்சம் அதிகமாகவே கறிவேப்பிலை வைத்து அரைத்துக்கொண்டேன்.

உங்கள் அன்பான நலம் விசாரித்தல் என்னை நெகிழச் செய்தது. நான் நலம்தான். இங்கு அடிக்கடி அறுசுவை கிடைப்பதில்லை.கிடைக்கும்போது கணினி பக்கம் என்னால் வர முடிவதில்லை. அதுதான் அடிக்கடி நான் அறுசுவைக்கு வரமுடியாததன் காரணம். வேறு எதுவும் காரணம் இல்லை.

அன்புள்ள மாலதி!

நலமாக இருக்கிறீர்களா? செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை பற்றி என்னிடம் கேட்டிருந்தீர்களா? எப்படி நான் கவனிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. மன்னியுங்கள். அடிக்கடி எனக்கு அறுசுவை கிடைக்காமல் போவதால் என்னால் தொடர்ச்சியாக அறுசுவையைப் பார்வையிட முடியாத நிலைமையில் நீங்கள் எழுதியிருந்ததை கவனிக்கவில்லையோ என்று தெரியவில்லை.

செவ்வாய்பிள்ளையார் கொழுக்கட்டை பக்குவம் பற்றி சரியாக எனக்குத்தெரியவில்லை. பிள்ளையார்ப்பட்டி கொழுக்கட்டை[இனிப்பு], உப்புக் கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை[இனிப்பு] இப்படி சில வகைகள் தெரியும். நீங்கள் எழுதியுள்ளது காரமா அல்லது இனிப்பா? விசாரித்து அது பற்றி எழுதுகிறேன்.

பொதுவாக எங்கள் ஊரில் பச்சரிசியை ஊற வைத்து அரைத்து ஊறவைத்த பாசிப்பருப்பு அதில் கலந்து கடுகு உ.பருப்பு, வரமிளகாய்த் தாளிதம் செய்து இந்த மாவை அதில் ஊற்றி கெட்டியாகும் வரை கிளறி பின்னர் உருண்டை பிடித்து ஆவியில் வேகவைப்பார்கள். இதை பிள்ளையார் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என்பார்கள்.
நீங்கள் கூறும் கொழுக்கட்டையில் என்னென்ன பொருள்கள் இருக்கும்?

கறிவேப்பிலைக் குழம்பு நன்றாக வந்தது என்ற பின்னூட்டத்திற்கு என் அன்பான நன்றி!!

u have to rinse the rice thrice and drain the water and dry it in a white cotton cloth inside the house do not keep it in the sun and after an hour grind the rice to a caorse powder in the blender and then add a coconut water and coconut(thurivina coconut) make dough to a consistency which u can roll it as a ball then u can make it into a diffrent shapes like fruit basket ,coconut and steam it in idli steamer for about 15 -20 minutes in a medium to high flame but keep checking it dont burn it when u pop a tooth pick in the centre of the kozhukatai it should come out without sticking to the kozhukztzi.No need to add salt if u add salt to it it will be like regular kozhukatai u will fell the sweetness from the coconut water and cocnut. its ready to eat.

KEEP SMILING ALWAYS

hi malathi i have replied for ur sevva pillaiyar kozhukatai have u seen it?

KEEP SMILING ALWAYS

ஹாய் தோழிஸ் அனைவரும் காலை வணக்கம்.... அனைவரும் நலமா?

ஹாய் மனோ அம்மா உங்கள் பதில் பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா........ உங்கள் பதிலுக்கு என்னுடைய நன்றிக்கள்........

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை நானும் செய்து பார்க்கிரேன்..

நீங்கள் என்றும் நலமுடன் இருக்க நான் இறைவனை வேண்டிக் கொள்கிரேன்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

திவ்யா..!! நன்றி. நீங்கள் சொல்லி இருப்பது சரிதான். நேற்று ஒரு வயதான பாட்டியிடம் கேட்டதில் கிட்டதட்ட இந்த முறையில்தான் சொன்னார்கள். ஆனால் வேக வைக்கும் முறைதான் மாறுபட்டிருந்தது. கொழுக்கட்டைகளை பல உருவங்களில் செய்து ஒரு அகலமான பாத்திரத்தின் உள்ளேயும், அந்த பாத்திரத்தின் உட்புற சுவரிலும் ஒட்டினாற்போல் வைக்கவேண்டும். இப்போது இந்த பாத்திரத்தை அப்படியே தூக்கி இட்லி பானையில் வைத்து வேக விடவேண்டும். கொழுக்கட்டைகளை பாத்திரத்தில் ஒட்டி வைப்பது முக்கியம் என்று அந்த பாட்டி சொன்னார்கள். மற்றபடி நீங்கள் கூறி இருப்பது போலதான் செய்யவேண்டும் என்று தெரிகிறது. நன்றி திவ்யா.

பரவாயில்லையே திவ்யா..!! யூ. எஸ் போனாலும் நம்ம ஊர் பாரம்பரியமான பழங்காலத்து உணவை மறக்காமல் இருக்கிறீர்களே...!!! சமையலில் ஒரு வருட அனுபவம் என்று எழுதி இருக்கிறீர்கள் ஸோ, குறைவான வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் எங்களை போன்ற பாட்டிகள் காலத்து ரெஸிப்பியை கொடுத்தற்கு மீண்டும் நன்றி..!!

மேலும் சில பதிவுகள்