காலிஃப்ளவர் குருமா

தேதி: July 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

காலிப்ளவர் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - கால் கப்
பட்டாணி - கால் கப்
வெங்காயம் - 1 1/2 கப்
தக்காளி - 1 1/2 கப்
பூண்டு - மூன்று பல்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய் வற்றல் - ஏழு
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்துக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பட்டாணி, காலிப்ளவர், உருளை மூன்றையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். அதனுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுதை ஊற்றி உப்பு சேர்க்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது நீர் விட்டு கிளறவும்.
இந்த கலவை கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்தவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான எளிதில் தயாரிக்க கூடிய காலிப்ளவர் குருமா ரெடி. அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. அம்மு மது </b> அவர்கள் வழங்கியுள்ள குறிப்பு இது. நீங்களும் இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும். இதைப் போல் இன்னும் பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள உள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெசிப்பி ஈசியாக இருக்கு,காரம் வேண்டுமானால் சிறிது குறைத்து செய்து பார்க்கலாம் என்று உள்ளேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியா ,

மிக்க நன்றி.கண்டிப்பாக செய்து பாருங்கள்.நான் கொஞ்சம் காரம் அதிகம் சேர்த்துக்கொள்வேன்.நீங்கள் ஒரு நான்கு மிளகாய் மட்டும் வைத்து உபயோகித்து பாருங்கள்.

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

ஹாய் உங்க காலிபிளவர் குருமா செய்தான் சப்பாத்தி & தோசயுடன் சாப்பிட ரொம்ப நல்லா இருந்தது