அறுசுவை - காணாதவர் பக்கம் - 3

யாராவது காணாம போயிட்டாங்களா?!
யாராவது காணாம போக போறாங்களா??!!
யாராவது காணாம போய் வந்திருக்காங்களா???
யாராவது காணாம போக போறேன்னு சொன்னாங்களா???

- இப்படி பட்ட விஷயத்துக்கு தான் இந்த பக்கம். ;)

ஹாய் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க. என்னை நியாபகம் இருக்கா இல்லை மறந்துட்டீங்களா. நீண்ட இடவெளிக்கு பிறகு இன்று தான் அறுசுவைக்கு வந்தேன். எல்லாரையும் தனி தனியாக விசாரிக்க ஆசை ஆனால் யார் பெயரவது விட்டுவிட்டால் என்ன செய்வது என்று மொத்தமாக விசாரித்துக்கொள்கிறேன். நிறைய பேர் புதியவர்கள் எல்லாருக்கும் ஒரு ஹாய்.

அன்புடன் கதீஜா.

இரண்டு முறை பதிவாகிவிட்டது

ஹாய் கதீஜா நலமா இருக்கிங்க்லா? உங்க குழந்தை எப்படி இருக்கு..? என்ன பெயர் வெச்சு இருக்கிங்க....... இப்பதான் டைம் கிடச்சுதாப்பா.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நலம்.நலமா?

நான் இரண்டு மாதங்கள்(ஆகஸ்ட்,செப்டம்பர்) காணாமல் போகிறேன்.இந்தியா செல்லும் இறுதி வாரத்தில் இருப்பதால் ...அதிகம் அறுசுவைக்கு வரமுடியவில்லை..வரும் அக்டோபரிலிருந்து என் பதிவுகள் தொடரும்.
அனைவருக்கும் என் அன்பும்,வணக்கமும்.
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பத்திரமா வந்து போங்க இளவரசி. :) எஞ்சாய்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிஸ் இவங்கலை எல்லம் கானும்:

சாய்கீதாக்கா, தனிஷா, ஆசியா அக்கா, உத்ரா அக்கா, உத்தமி அக்கா, நாச்சியார் அம்மா, மனோ அம்மா, தேவா அக்கா, மனோகரி அம்மா, இலா அக்கா, தாளிக்கா அக்கா, சிங்கப்பூர் பிரியா, ஜெயஸ்ரீ, ஸ்ரீதேவி, கவிச்வா, சுசிச்த்திரா, உமா ராஜ், அதிரா , கதீஜா அக்கா, சீனா மஹா, இளவரசி அக்கா...... இன்னும் நிரைய பேர் கானும்.....

யாருனா ஒலிஞ்சுக்கிட்டு இருந்தா வந்து பதில் போடுங்கபா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

எப்படி இருக்கீங்க.நான் இங்கதான் இருக்கேன்.காணாமல் போகலப்பா என்ன விஷயம் சொல்லுங்க.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா அக்கா நலமா இருக்கிங்கலா? உங்க குழந்தைகள் நல்லா இருக்காங்கலா?

பெரிய விஷயம் இல்லைக்கா.......

உங்க கிட்டா பேசி கொஞ்ச நாள் ஆச்சு அதான் கேட்டேன்...... சாப்பிடாசா....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நான் நல்லா இருக்கேன்பா.குழந்தைகளும் நல்லா இருக்காங்க.நீங்க எப்படி இருக்கீங்க. இல்லைப்பா இங்க மணி 8 தானே ஆகுது நான் டெலிவரிக்கு வந்தேன் இந்தியால தான் இருக்கேன்.

அன்புடன் கதீஜா.

சோனியா.. வந்துவிட்டேன் என்றது மட்டும்தான் தெரியுது:) ஆனால் ஆளைக் காணவில்லையே....

கதீஜா... வந்தாச்சோ.... மிக்க சந்தோஷம். உடனேயே வரவேற்று பதில் போட நினைத்தும் நேரம் கிடைக்காமல் விட்டுவிட்டேன்... மன்னிக்கவும். இனிமேல் தொடர்ந்து வருவீங்கதானே..

இளவரசி நல்லபடி போய்வர என் வாழ்த்துக்கள்.

பிரபாதாமு..... என்னையும் காணாமல் போனோர் லிஸ்டில் சேர்த்திட்டீங்களோ?:).... நான் சொன்னேன், நான் காணாமல் போனால் ஒரு பூனையும் தேடாதென்று:) ஆனால் நான் இருக்கும்போதே.. என்னைத்தேடியிருக்கிறீங்க:).. மிக்க சந்தோஷம்.

வனிதா... நீங்களும் நானும் காணாமல் போகமாட்டோம் போலிருக்கே:):)..

இருந்தாலும் இங்கே ஒருவர் "அடிக்கடி" காணாமல் போவதும் தேடுவதும் எமக்குத் தொழிலாப்போச்சு:)... அவரின் பெயர்கூட மறந்துபோச்செனக்கு:) "டச்சு விட்டுப்போச்சு:)"... முடிந்தால் கண்டுபிடித்துக்கூட்டிவாங்கோ.... செங்கம்பள வரவேற்பை மீண்டும் கொடுப்போம்:)...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்