அறுசுவை - காணாதவர் பக்கம் - 3

யாராவது காணாம போயிட்டாங்களா?!
யாராவது காணாம போக போறாங்களா??!!
யாராவது காணாம போய் வந்திருக்காங்களா???
யாராவது காணாம போக போறேன்னு சொன்னாங்களா???

- இப்படி பட்ட விஷயத்துக்கு தான் இந்த பக்கம். ;)

சொல்லாமல் போவது நல்லவர்க்கு அழகு இப்படின்னு யாரோ சொன்னாங்க...
இங்க சொல்லாம போன மாதிரி இந்தியாலவும் சொல்லாம வந்திட்டேன்.. சமயம் பார்த்து கைபேசி வேலை செய்யலை. யாருப்பா அது ஆலமரத்தடியில .. இப்ப எல்லாம் ஊரில ஒரு பூனை கூட கைபேசி இல்லாம இருப்பதில்லை... இன்னும் ஒன்னு ரெண்டு நாள் ஆகும் நான் ரெடியாக..

மாறாதது! - இந்தியாவில்
கோவில் பூசை/பாட்டுகள் அதிகாலையில்
5.20க்கு மசூதியில் பாங்கு சத்தம்
மாதா கோவில் மணியோசை...
மண்வாசனை
மாறாத விருந்தோம்பல் - கிராமத்தில முக்கியமா
குழாய் சண்டை
கொத்து பரோட்டா - சாலையோர விடுதியில்
அங்கண்ணன் கடை பிரியாணி
மருதமலை முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம்/ இலந்த வடை

மீண்டும் வருவேன்...வரட்டா...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கும்......

இலா அக்கா இந்தியாவில் இருந்து எப்ப வந்திங்க.....? நலமா இருக்கிங்கலா? ஊரில் அனைவரும் நலமாக்கா?

கதீஜா அக்கா நீங்க இன்னும் இதியாவில் தான் இருக்கிங்க்லா? நான் நிங்க ஜப்பான் வந்துட்டிங்கன்னு நினைச்சேன்....... நான் நலம்ககா.... விசாரித்துக்கு என்னுடைய நன்றிக்கா....

அதிரா பாட்டிய கானும்ன்னு சாந்தனா சென்னாங்கன்னு நினைக்கிரேன்... அதனால் நானும் பார்த்த செல்லுங்கப்பான்னு சென்னன்... அதனால்ல் தான்ப்பா கேட்டேன்......
//// ?:).... நான் சொன்னேன், நான் காணாமல் போனால் ஒரு பூனையும் தேடாதென்று:) //// எல்லரும் தேடிக்குட்டுதான் இருக்கெம்ப்பா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இலா... வாங்கோ வாங்கோ...மீண்டும் உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷம்.:)

கதீஜா... நலமா? குழந்தை பிறந்து விட்டதா அல்லது இனி தானா??

பூனை ஒன்று ஒலிந்து கொண்டு மற்ற பூனை எல்லாம் தன்னை தேடுதான்னு பார்க்குதாம். பாவம் வயசான பூனை.... அதனால் ரொம்ப நேரம் ஒலிஞ்சுக்க விடாதிங்கோ.... ;) அதிரா.... நலமா? நம்மலாம் காணாம போனா அறுசுவை காணாம போயிடுச்சுன்னு அர்த்தம். அதனால் அப்படி ஏதும் ஆயிடாம இருக்க பாபு அண்ணா, செண்பகா இரண்டு பேரும் வேண்டிகிட்டு இருக்காங்கலாம். எங்கையும் போயிடாதிங்க.... வந்து சிரிக்க சிரிக்க பதிவு போடுங்கோ. எல்லா பூனையும் உங்களை தேடிக்கிட்டு தான் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூனை என்றதும் வராமல் போக மனமே இல்லை:)
வனிதா... நான் எங்கேயும் போகமாட்டேனே:)... இங்குதான் எங்கேயும் சுத்திக்கொண்டே இருப்பேன்... ஒரு பழமொழி இருக்கு... "சுற்றியே சுற்றினாலும் சுப்பரின் கொல்லைக்குள்தானாம்" அப்படித்தான்.. ஒழித்தாலும் அது அறுசுவைக்குள்தான் ஒழிப்பேன் வெளியிலல்ல.

கதிஜாக்கு பெண்குழந்தை கிடைத்து நீண்ட நாளாகிவிட்டது வனிதா.

இலா இலா.... மல்லிகைப்பூ இட்லி என்னாச்சு?.. சொல்லாமல் போனவர்களை நாம் தேடமாட்டோம்:).. சொல்லிவிட்டுப் போனவர்களை விடவே மாட்டோம்:),
இலா வாங்கோ... உங்கட "பூஸ்"(பூமி)... வசனம்தான் என்னை இன்னும் உயிரோடு வச்சுக்கொண்டிருக்கு:)

பிரபாதாமு... இப்ப பாட்டிப் பட்டமும் தந்திட்டாங்களோ:)? அப்போ இனி டக்கென்று என் பெயரை மாத்திட வேண்டியதுதான்..:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

போட்டு குடுத்துட்டனே... அதிரா.... அதிரா.... இலா'ட போட்டு குடுத்துட்டனே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அதிரா நான் உங்கலை பாட்டின்னு செல்லலைப்பா.... சந்தனாதான் சொன்னாங்க..... அதனால் நானும் சொன்னேன்...... ( அப்படா சந்தனாவ மாட்ட விட்டுடேன் நிம்மதி).

பெயர மாத்தாதிங்கப்பா... இந்த பெயர் நல்ல இருக்கு.... நான் சும்மாதான் சொன்னேன்...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

"ந‌ல்லவர்க்கு அழகு சொல்லாமல், பறையாமல் போவதாம்"

அதனால் சொல்லாமல் போய், வந்தும் விட்டேன்!! ஆனால் கொஞ்ச நாள் அடிக்கடி வர மாட்டேன். (அதிரா, நிம்மதிப் பெருமூச்சு கேக்குது!!)

ஊருக்குப் போய் பல சிரமங்கள் பட்டதால் விடுமுறையை அனுபவிக்க முடியவில்லை. நினைத்த காரியங்கள் நடக்கவில்லை. என்றாலும் எல்லோரையும் பார்த்து வந்தது நிறைவு.

நேரம் கிடைக்கும்போது சில நிகழ்வுகளைப் பகிர இருக்கிறேன். மற்றவர்கள் நான் அடைந்த சிரமங்கள் அடையாமல் தவிர்க்க உதவும்.

வாங்க மிசஸ் ஹுசைன்... ஒரு வழியா வந்துட்டீங்களா. மாட்டிகிட்டோம் நாங்க எல்லாம்... என்ன செய்ய?! :( இருந்தாலும் வருக வருகன்னு கூப்பிடும் நல்ல மனசு எங்களுக்கு. ஹிஹிஹீ.

சந்தனா... உங்க தோஸ்த் வந்துட்டாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

///ந‌ல்லவர்க்கு அழகு சொல்லாமல், பறையாமல் போவதாம்"/// எனக்கு எங்கட ரீச்சர் வேற மாதிரியல்லோ சொல்லித்தந்தவ:)
"நல்லவர்க்கு அழகாம், சொல்லாமல், பறையாமல் போனவர்களைத் தேடாமல் இருத்தல்:)".

///இருந்தாலும் வருக வருகன்னு கூப்பிடும் நல்ல மனசு எங்களுக்கு. ஹிஹிஹீ./// அதே.. அதே.... வாங்க திருமதி ஹூசைன்... நன்றி... வனிதா...(இலாவிடம் நான் இன்னும் மாட்டுப்படவில்லை, அவதான் ஒழித்துவிட்டா:))

அப்படியா பிரபாதாமு... இதோ காற்றாய் போகிறேன்.. சந்தனக்காற்றிடம்.....:),

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனி, அதிரா, வரவேற்புக்கு நன்றி!! பள்ளியில் இன்ஸ்பெக் ஷன் ஆஃபிஸரை நடுக்கத்துடன் வரவேற்கும் ஆசிரியையின் பயம் தெரிகிறது உங்களின் வரவேற்பில்!!

அதிரா, நீங்கள் பாடம் படித்த அழகைத்தான் இவ்வளவு நாளாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!! இதில் ரீச்சரை ஏன் குறை சொல்றீங்க?? (இமா இல்லையே உங்கள் ரீச்சர்??)

மேலும் சில பதிவுகள்