சிக்கன் பிரியாணி

தேதி: July 6, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கோழிக்கால் - 1 கிலோ
பாசுமதி அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
புதினா இலை - 1 கட்டு
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
தக்காளி - 1
பூண்டு - 1 (முழுப்பூண்டு)
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கரம்மசாலா பேஸ்ட் - 1 தேக்கரண்டி
எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பிரியாணி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
தக்காளிப் பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
கறுவா (பட்டை) - 1 துண்டு
கிராம்பு - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
வெண்ணெய் அல்லது நெய் - 1 மேசைக்கரண்டி


 

கோழிக்காலை 4 துண்டுகளாக வெட்டவும்.
பாசுமதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும். பின்பு அரிசியை முக்கால் பதத்திற்கு சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய், தக்காளியை வெட்டி வைக்கவும். புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
பூண்டு, இஞ்சியின் தோலை நீக்கி வைக்கவும்.
பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லியை மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பெருஞ்சீரகம், போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கோழியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். உப்பு, தக்காளிப்பழம் சேர்த்து கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும்.
அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கவும். தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் கரம்மசாலா பேஸ்ட், பிரியாணி பேஸ்ட், எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் சேர்த்து மூடி வேக விடவும்.
கோழி வெந்ததும் குழம்பாகவே இறக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் விடவும். அது உருகியதும் முதலில் சாதத்தைப் போடவும், அதன் மேல் கறியை விடவும். பின்பு சாதத்தைப் போடவும், கறியை விடவும். இப்படியே மாறிமாறி செய்யவும். ஒரு முறை கிளறி மூடி அடுப்பை சிம்மில் விடவும். 5 நிமிடத்தின் பின்பு இறக்கவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
முட்டை, ஏதாவது ஒரு பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


மாற்று முறை: மேலே குறிப்பிட்டது போல் கறியை வைத்து எல்லாப் பேஸ்ட்டுக்களும் சேர்த்த பின்பு அரிசியைப் போட்டு மூடி வேக வைத்தும் சமைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்