வெங்காயத் தாள் குழம்பு

தேதி: July 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1) மொட்டான வெங்காயத் தாள் - 1 கட்டு
2) சிறிய வெங்காயம் - 10
3) துவரம் பருப்பு - 3/4 கப்
4) புளி - எலுமிச்சை அளவு
5) தேங்காய்த் துருவல் - 1 1/2 டீஸ்பூன்
6) சோள மாவு ( அல்லது ) அரிசி மாவு - 1 டீஸ்பூன்
7) மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
8) கடுகு - 1 டீஸ்பூன்
9) உப்பு - தேவைக்கேற்ப
10) எண்ணெய் - தேவைக்கேற்ப


 

துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை கெட்டியாக 1/4 கப் அளவிற்கு கரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத் தாளை சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.
புளி கரைசலுடன் சின்ன வெங்காயம், நறுக்கிய வெங்காயத் தாள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும்.
அது வெந்தவுடன் வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து கலக்கவும்.
அரிசி மாவை கரைத்து அதனுடன் கலக்கவும்.
இப்பொது தேங்காய்த் துருவலையும் குழம்பில் சேர்க்கவும்.
கடுகு தாளித்து கொட்டி குழம்பை இறக்கவும்.
சுவையான எளிதான வெங்காயத் தாள் குழம்பு தயார்.

வெங்காயத் தாள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டையும் தணிக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் முறைப்படி வெங்காயத் தாள் குழம்பு மிகவும் நன்றாக இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்