மசால் பொரி

வழங்கியவர் : jayaraje
தேதி : செவ்வாய், 07/07/2009 - 11:57
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- 1) முட்டைப் பொரி - 200 கிராம்
- 2) வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
- 3) பொட்டுக்கடலை - 25 கிராம்
- 4) மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
- 5) மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- 6) மசாலாத் தூள் - 1/2 ஸ்பூன்
- 7) பெருங்காயத் தூள் - சிறிதளவு
- 8) கடுகு - 1 ஸ்பூன்
- 9) கறிவேப்பிலை - சிறிதளவு
- 10) உப்பு - தேவைக்கேற்ப
- 11) தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும்.
- அதோடு வேர்கடலையும், பொட்டுக்கடலையையும் போட்டு சிறிது வறுக்கவும்.
- பின் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மசாலாத் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை பொட்டு நன்கு கலக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ஒரு மூடியுள்ள டப்பாவில் பொரி, தேவைகேற்ப உப்பு போடவும்.
- இதனுடன் அடுப்பிலிருந்து இறக்கிய கலவையையும் சேர்த்து கொட்டி அந்த டப்பாவை நன்கு குலுக்கவும்.
- இவ்வாறாக மூடி வைத்திருந்தால் ஒரு வாரத்திற்கு கரகரப்பு குறையாமல் இருக்கும்.
- மேலும் சாப்பிட உபயோகிக்கும் போது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, துறுவிய கேரட், சிறிது மசாலாத் தூள் சேர்த்து சாப்பிட்டால் ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
18 நிமிடங்கள் 11 sec முன்பு
32 நிமிடங்கள் 50 sec முன்பு
38 நிமிடங்கள் 50 sec முன்பு
47 நிமிடங்கள் 1 sec முன்பு
56 நிமிடங்கள் 58 sec முன்பு
ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் முன்பு