புடலங்காய் குழம்பு

வழங்கியவர் : Mrs vathsala Na...
தேதி : செவ்வாய், 07/07/2009 - 13:02
ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
- புடலங்காய் - 1
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 3
- பூண்டு - 4 பல்
- தக்காளிப்பழம் - 1
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- பால் - 1 கப்
- மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு நெட்டு
- புடலங்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு புடலங்காயைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- அதில் புளிக்கரைசலை ஊற்றி ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
- மிளகாய்த்தூளின் பச்சை வாசனை போனதும் பாலை விடவும்.
- ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்த புடலங்காயைப் போடவும்.
- குழம்பு தடிப்பாக வந்ததும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
- இது சோறு, புட்டு, இடியப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
hai friends
pudalakai kulabuku pal utra vadum endru erukuthula athu etha pal udra vadum endru thareyala. pl explanin friends