முளைக்கட்டிய பச்சபயறு அல்வா

தேதி: July 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைக்கட்டிய பச்சபயறு - 1/2 கப்
வெல்லம் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
வாழைப்பழம் - 1
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - தேவைக்கேற்ப
கடலைமாவு - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
முந்திரித்தூள் - 5 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - சிறிது


 

வேக வைத்த பயறை நன்கு மிக்ஸியில் மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த பயறு, வெல்லம்(ஊற வைத்து கரைத்து வடிகட்டியது) அல்லது சர்க்கரை, வாழைப்பழம், ஏலக்காய் தூள், நெய், கடலைமாவு, தேங்காய் துருவல், முந்திரி தூள் சேர்த்து நன்கு பிசையவும்.
நாண் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு மசித்தவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
சுருண்டு வந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து ஆறியவுடன் பரிமாறவும்.


கடாயில் வதக்கும் போது நெய் சிறிது சிறிதாக நடுவில் சேர்த்து வதக்கவும். இதே வகையில் அனைத்து வகை பருப்பு கொண்டும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

காந்திசீதா அக்கா உங்களுடைய குறிப்பில் முளைகட்டிய பச்சபயறு அல்வா மிகமிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி....
Be Happy

Be Happy

காந்திசீதா,
வணக்கம். தங்கள் குறிப்பைப் பார்த்து முளைக்கட்டிய பச்சைப் பயிறு அல்வா செய்ய ஆசை. என்னிடம் பச்சைபயறு தான் இருந்தது. வெள்ளை கொண்டைக்கடலையில் செய்யலாமா என திடீரென தோன்ற தாங்கள் கூறியபடியே எல்லாப் பொருட்களும் பயன்படுத்தி, ஆனால் முளைக்கட்டிய பச்சை பயிறுக்குப் பதில், வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைத்து, செய்தேன்.. மிகவும் அருமையாய் இருந்தது...வெள்ளை கொண்டைக்கடலை அல்வா எங்களுக்கு பிடித்து விட்டது.. வெளிர் ப்ரௌன் நிறத்தில் கடைசியில் இருக்கிறது..சுவை அருமை... மிக்க நன்றி..

அன்புடன்,
ஆயிஸ்ரீ