ராகி பக்கோடா

தேதி: July 8, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

1) ராகி மாவு - 100 கிராம்
2) கடலை மாவு - 50 கிராம்
3) பெரிய வெங்காயம் - 2
4) பச்சை மிளகாய் - 3
5) இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
6) நெய் - 2 டீஸ்பூன்
7) உப்பு - தேவைகேற்ப
8) எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


 

வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயையும் சின்ன சின்னதாக நறுக்கவும்.
ராகி மாவுடன் கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நெய் விட்டு கலக்கவும்.
தேவைகேற்ப சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து சின்ன சின்ன பக்கோடாவாக போட்டு எடுக்கவும்.
சத்தான ராகி பக்கோடா தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பான சுபா!
ராகி பகோடா வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருந்தது. நிறம்தான் கொஞ்சம் பிறவுணாக இருந்தது. அதற்கு ராகிமாவின் நிறம்தான் காரணம். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருந்தது. குறிப்பிற்கு மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

நீங்கள் சொல்வது சரி தான் இளமதி அக்கா. ராகியின் நிறம் தானே அதன் பக்கோடாவிலும் வரும்!!!!!!!

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.