டோக்ளா

image

வழங்கியவர் : asiya omar

தேதி : வியாழன், 09/07/2009 - 08:16

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் : 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • கொண்டைக்கடலை - 1 கப்
  • காய்ந்த பட்டாணி - அரை கப்
  • பேக்கிங் சோடா - அரை-முக்கால் டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - சிறு துண்டு
  • கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது
  • பெருங்காயத்தூள் - 2 பின்ச்
  • தேங்காய் துருவியது - 1 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு - அரைஸ்பூன்
  • வற்றல் - 2
  • உப்பு - தேவைக்கு

 

  • கொண்டைக்கடலை, பட்டாணியை இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து வைக்கவும்.
  • மிக்ஸியில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பட்டாணியுடன் இஞ்சி, மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும். பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும்.
  • இதனை எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரில் ஸ்டீமரில் எண்ணெய் தடவி பரத்தி 20-30 நிமிடம் வேக வைக்கவும். அல்லது தட்டில் வைத்து குக்கரில் அல்லது இட்லி பாத்திரத்தில் அவித்து எடுக்கலாம்.
  • பின்பு ஆற வைக்கவும். சிறிய சதுர துண்டுகளாக கட் செய்யவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் டோக்ளா மீது கொட்டவும். மல்லி இலை, தேங்காய் துருவல் தூவி பரிமாறவும். விருப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.