ராகிப்புட்டு பயறு

image

வழங்கியவர் : asiya omar

தேதி : வியாழன், 09/07/2009 - 12:43

ஆயத்த நேரம் : 15 நிமிடம்

சமைக்கும் நேரம் : 10 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

3
1 vote
Your rating: None
 

 

  • ராகிமாவு - கால் கிலோ
  • தண்ணீர் - 250 மில்லி
  • பாசிப்பயறு - கால் கிலோ
  • தேங்காய் - ஒன்று (சிறியது)
  • உப்பு - தேவைக்கு

 

  • முதலில் தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.
  • விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.
  • மாவை மிக்ஸியில் பெரிய கப்பில் போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். இதைப் போல் மாவு முழுவதையும் மூன்று முறையாக சுற்றி எடுக்கவும். இப்பொழுது மாவு பூப்போல ஆகிவிடும்.
  • பாசிப்பயறை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • புட்டுக்குழலில் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிரப்பவும். அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிரப்பவும்.
  • குக்கரில் தண்ணீர் வைத்து கொதிவந்ததும் அதில் புட்டுக்குழலை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையான, சத்தான ராகிபுட்டு தயார். இதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் பரிமாறவும். சீனி மற்றும் தேங்காய் துருவலுடன் சாப்பிடலாம். சீனி விரும்பாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.

Note:

பாசிப்பயறை வேக வைக்க, புட்டு வேக வைக்கும் குக்கரில் கூட ஒரு செட் புட்டு அவிக்க ஆகும் நேரம் வைத்து வேக வைத்து எடுக்கலாம். பயறு குழைந்து விடாமல் பக்குவமாக அவிக்க வேண்டும். பயறை விருப்பப்பட்டால் தாளித்து, மசாலா போல் செய்தும் பரிமாறலாம்.