காலிப்ளவர் குருமா

தேதி: July 9, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (5 votes)

 

1) காலிப்ளவர் - 1 (பெரியது)
2) பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
3) தக்காளி- 3 (நடுத்தர அளவு)
4) இஞ்சி, பூணடு விழுது - 1 டீஸ்பூன்
5) சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
6) பட்டை - 2
7) இலவஙம் - 3
8) ஏலக்காய் - 2
9) மிளகாய்த் தூள் - 3/4 டீஸ்பூன்
10) தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
11)பச்சை மிளகாய் - 1
12) எண்ணெய் - தேவைக்கேற்ப
13) கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க


 

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலுடன் 1 டேபிள் ஸ்பூன் சோம்பையும் சேர்த்து மைய அரைக்கவும்.
வெங்காயத்தை பொடி பொடியாகவும், தக்காளியை சுமாராகவும் அரிந்து கொள்ளவும்.
தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து, காலிப்ளவரை சின்ன சின்ன பூக்களாகப் பிரித்து அந்த தண்ணீரில் போடவும்.
15 நிமிடம் ஊறிய பின்பு அதை நன்றாகக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமிருக்கும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு கலக்கவும்.
அடுத்து வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.
மேலும் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இதனுடன் ஊறிய காலி ப்ளவரை போட்டு மிருதுவாகும் வரை வதக்கவும்.
இப்போது தேங்காய் - சோம்பு அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
முடியைப் போட்டு மூடி குறைந்த தீயில், காலி ப்ளவர் வெந்து, குருமா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
வெந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்