காகிதத்தில் வாத்து வடிவம் செய்வது எப்படி? - காகித வேலை - அறுசுவை கைவினை


காகிதத்தில் வாத்து வடிவம் செய்வது எப்படி?

வியாழன், 09/07/2009 - 12:46
Difficulty level : Medium
5
4 votes
Your rating: None

குழந்தைகள் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரிகாமி க்ராஃப்ட் இது. இதற்கு சதுரவடிவமான பேப்பர் மட்டுமே தேவையானது. அறுசுவை நேயர்களுக்காக இந்த காகிதத்தை கொண்டு அழகிய வாத்து வடிவத்தை செய்து காட்டியவர் திருமதி. செபா அவர்கள். 73 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. கைவேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.

அறுசுவையில் ஆர்வமுடன் பங்களித்து வரும் திருமதி. இமா அவர்களின் தாயார் இவர் என்பது எவரும் அறியாத ஒரு ரகசியம். :-)

 

  • ஒரிகாமி பேப்பர்
  • பேப்பர் சர்வியட் (paper serviettes)

 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் சதுரமாக உள்ள ஒரிகாமி பேப்பரை எடுத்து மூலைவிட்டத்தின் வழியாக பாதியாக மடித்துக் கொள்ளவும்.

இப்பொழுது பேப்பர் மடித்த ஓரத்தின் ஒரு மூலையை மறுப்பக்கத்திற்கு கொண்டு வர மூன்றில் ஒரு பங்கு என்ற கணக்கில் பிடித்து கொண்டு ஒரு மடிப்பு மடித்துக் கொள்ளவும்.

மற்றொரு பக்கமும் திருப்பி இதேப் போல் மடித்துக் கொள்ளவும்.

மூலைவிட்ட மடிப்பு மீண்டும் முதலில் மடித்த மடிப்போடு வரும்படி ஒரு பக்கத்தைத் திருப்பி மடித்துக் கொள்ளவும்

மற்றொரு பக்கத்தையும் திருப்பி ஒத்த விதமாக மடிக்க வேண்டும்.

இனி ஒரு பக்கம் மீதம் உள்ள துண்டை மூலைவிட்ட மடிப்போடு பொருந்தி வருமாறு மடித்துக் கொள்ளவும்.

இதேப் போல் மறுப்பக்கத்தையும் மடித்துக் கொள்ளவும். இது பார்க்க பேப்பர் ராக்கெட் போன்று இருக்கும்.

பிறகு மடித்து வைத்திருக்கும் முழுநீள பேப்பரின் பாதி அளவு வருமாறு, கூரான பக்கத்தைப் பிடித்து படத்தில் காட்டியுள்ளபடி உட்புறமாக மடித்துக் கொள்ளவும். இவ்வாறு மடிக்கும் பொழுது பறவையின் கழுத்துப் பகுதியாக வரப் போகிற பாகத்தின் நடுமடிப்பு உட்புறம், வெளிப்புறமாக மாறி வரவேண்டும். முதல் முதலாக மடித்த மடிப்பு பறவையின் அடிவயிறாக வர வேண்டும். மடிப்புகளை ஒரு முறை அழுத்தி விடவும்

அடுத்து இதேப் போன்று பறவையின் அலகையும் கீழ் நோக்கி மடிக்க வேண்டும். இப்பொழுது நடுமடிப்பு மீண்டும் உட்பக்கம் வெளியே மாறி வர வேண்டும். அலகை சீராக அழுத்தி விடவும்.

பறவையின் இருபுறமும் கண்களை வரைந்து கொள்ளவும். பறவையின் நெஞ்சுப்பகுதியை சேர்த்துப் பிடித்துக் கொண்டு உடற்பகுதியை விசிறி போன்று விரித்து விட்டால் அழகான வாத்து கிடைக்கும்.

பேப்பர் சர்வியட்களில் செய்கிற போது அவற்றில் ஏற்கனவே உள்ள மடிப்பைப் பிரிக்காமல் ஒவ்வொரு சர்வியட்டையும் ஒரு சதுரம் எனக் கொண்டு செய்ய வேண்டும். மடிப்புகள் பேப்பரில் வந்தது போன்று அழுத்தமாக வராது. ஆனால் பறவை அழகாக வரும். கண் வரைவதானால் நீரில் கரைய முடியாத மைப் பேனாவைப் பயன்படுத்தவும். இதுப் போன்று பேப்பர் சர்வியட்கள் (paper serviettes) செய்து பார்ட்டியின் போது பரிமாறும் சாப்பாட்டு மேசைகளில் வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..சூப்பர்!!

அழகாயிருக்கு இந்த காகித வாத்து.நல்லா பொருமையா செய்திருக்கிங்க ஆண்ட்டி!!

அருமை

ரொம்ப அழகாக செய்து இருக்கிறீர்கள் செபா அம்மா. அருமையாக உள்ளது.

சுபா

செபா மேடம்

செபா மேடம் சூப்பராக இருக்கு பறவைகள்.ஓ இமா இப்போ தானே ஒரு ரகசியம் தெரிஞ்சது :-))

Patience is the most beautiful prayer!!

செபா மேம்

ரொம்ப நன்றாக நல்ல தெளிவான படங்களோட நன்றாக இருக்கு. என்னிடம் ஆர்காமி பேப்பர் உள்ளது அவசியம் செய்தபின் சொல்கிறேன்.

என்ன ஒரு

என்ன ஒரு இனிய அதிர்ச்சி !!! இனியது என்றாலும் கடுமையானது தான் :) இந்த செபாவும் இமாவும் ஒருவரா? :) அதாவது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவரா? :) நேரமில்லாததால் பதிவு இன்று எங்கும் பதிவு போட வேண்டாம் என்று நினைத்தேன்.. ஆனால் இதை பார்த்ததும் தலை கால் புரியவில்லை :)

எனக்கு நிறைய விஷயங்கள் இப்போ தான் புரிகின்றன.. :) நேரம் கிடைக்கும் போது செல்லங்கள் இழையை முதலில் இருந்து மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.. :)

இதற்கிடையில், இமா - உங்களுக்கே இது அடுக்குமா?? :) செபாவும் சந்தனாவும் ஒன்றா என்று ஒரு கேள்வி?? :) அதற்க்கு இந்த அப்பாவி பெண் (நாந்தான்) சீரியஸாக ஒரு பதில் வேறு கொடுத்திருந்தார் :) இவர் அவரை துரத்துவாராம்... அவர் ஓடி ஒளிவாராம்... இவர் தேடி கண்டுபிடித்து இழுத்து வருவாராம்.. :)

செபா உங்கள் கைவேலை மிக அழகு.. சிறு வயதில் இது போன்ற முயற்சிகள் செய்ததுண்டு.. மீண்டும் செய்ய தூண்டுகிறீர்கள்..

ஆக, நம் இமாவின் கை மற்றும் கை வேலைகள் இங்கிருந்து தான் ஆரம்பமாகியிருக்கின்றன :) உண்மையாலுமே சந்தோஷமாக இருக்கிறது.. இந்த ராஜா காலத்து கதையில் எல்லாம் கடைசியில் தெரிய வருமே - ஹீரோ தான் உண்மையான இளவரசர் என்று- அது தெரிய வரும் போது வர்ற சந்தோசம் மாதிரி இருக்கு..

இமா, அப்புறம் உங்க வீட்டு ஆமை, ஷார்க் எல்லாம் வேறு பெயரில் இங்கு உலா வருகின்றனவா?? :) சொல்லிப்போடுங்கோ.. :)

செபா.. இமாவை ரொம்ப நாளாச்சு பார்த்து.. நம்ம விஸாரிப்பையெல்லாம் சொல்லிடுங்கோ :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

hi

ஷெபா மேம் எப்படி இருக்கீங்க?ரொம்ப நல்ல இருக்கு உங்களின் காகித பறவை.

நல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை

seba amma

really very nice seba amma.I cant belive this is ur age.old is gold

Kalai

அருமை

அழகா இருக்கு ஆண்டி.
சதாலட்சுமி

சதாலட்சுமி

அனைவருக்கும் என் நன்றிகள்

அன்புள்ள அட்மின் அவர்களுக்கு, எனது குறிப்பை வெளியிட்டமைக்கு எனது நன்றிகள்.

மேனகா,சுபா, கலா, ரமீஷா, சதா, உத்ரா உங்கள் பின்னுட்டங்களுக்கு எனது நன்றிகள்.
விஜி நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்கள். நன்றி.
சந்தனா உங்கள் பதிவுகள் எல்லாவற்றுக்கும் எனது நன்றிகள். உங்கள் கேள்விக்கு இமாவே பதில் எழுதி விட்டா. எனவே நான் எழுத வேண்டாம் என நினைக்கிறேன். முடிகிற போது வேறு ஏதாவது செய்து அனுப்புவேன்.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்.

அன்புள்ள செபா

அழகான வாத்து

மிகவும் நன்றாக இருக்கிறது செபா அன்ரி :) நானும் செய்து போட்டு படம் அனுப்புறன்.
-நர்மதா :)