பீட்ரூட் கறி

தேதி: July 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

சுத்தம் செய்த பீட்ரூட் - 450 கிராம்
வெங்காயம் - 15 கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பற்கள்
கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
எலுமிச்சம்புளி - 1 1/2 தேக்கரண்டி


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட், வெங்காயம் இரண்டையும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பூண்டை தட்டி நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்த்து பிரட்டி விடவும்.
பீட்ரூட்டிற்கு மேலே நிற்கக்கூடிய அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மிதமான தீயில் வைத்து நீண்ட நேரம் வேக விடவும்.
பாதியளவு நீர் வற்றி அவிந்து வந்ததும், கறித்தூளை சேர்த்து, மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.
பீட்ரூட் ஓரளவிற்கு வெந்து பிரட்டலானதும் கறிவேப்பிலை, கரம்மசாலா தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
நன்கு வெந்ததும் இறக்கி வைத்து மேலே எலுமிச்சம்புளி சேர்த்து பிரட்டவும்.
சுவையான ஸ்பைஸி பீட்ரூட் கறி தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல சத்துள்ள காய் ரெசிப்பி. எங்க வீட்டில் நான் அடிக்கடி செய்து சாப்பிடும் கறி. நான் லெமன் சேர்க்க மாட்டேன் மற்றபடி உங்க குறிப்பே தான்.
அடுத்த தடவை லெமன் சேர்த்து செய்கிறேன்.

அசத்தி இருக்கிங்க அதிரா, படமும் நல்ல தெளிவாய் இருக்கு. செய்முறை விளக்கமும் சுப்பர். வாழ்த்துக்கள் மேடம்.நான் அதிகம் பிட்டூட் சம்பல் அல்லது பால் கறி செய்வேன். உறைப்பு கறி புதுசாக இருக்கின்றது. செய்து பார்த்துவிட்டு மீண்டும் வருவேன். அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் அதிரா
பீட்ரூட் கறி நல்லா வடிவை படம் எடுத்திருக்கிரிங்கள் வாழ்த்துக்கள் .நானும் இப்படிதான் செய்யிரனணன்.•கரம் மசாலா தான் சேர்க்கிறது இல்லை.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

விஜி, ராணி, சுகா மிக்க மிக்க நன்றிகள். நான் பீற்றூட்டில் இக்கறி மட்டுமே செய்வேன், இம்முறை விஜி உங்களின் டம்பிளிங்ஸ் செய்தேன், படமும் எடுத்துள்ளேன்.. இன்னும் அனுப்பவுமில்லை, பின்னூட்டமும் தரவில்லை.. விரைவில் தருகிறேன்.

///அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்/// இதைப் பார்த்துப் பார்த்து அதிராக்கு போரடித்துவிட்டது:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா,
இந்த வாரம் ஒரு நாள் உங்க பீற்றூட் கறி செய்திருந்தேன். கிட்டத்தட்ட நானும் இதுப்போலதான் செய்வேன், ஆனால் எலுமிச்சை, கரம் மசாலா சேர்ப்பது இதுவே முதல்முறை. நல்ல காரமாக சாதத்துடன் சாப்பிட ரொம்ப டேஸ்டியாக நன்றாக இருந்தது. சுவையான இந்த குறிப்புக்கு நன்றி அதிரா.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ