வெண்டைக்காய் வறுவல்

தேதி: July 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

வெண்டைக்காய் - கால் கிலோ
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை (விரும்பினால்)
உள்ளே வைக்க:
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - சுவைக்கு
அம்சூர் பொடி - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (வறுத்து பொடித்தது) - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)


 

வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
வெண்டைக்காயின் ஏதேனும் ஒரு பகுதியில் கத்தியால் கீறி விடவும்.
அதில் கலந்து வைத்திருக்கும் பொடியை உள்ளே வைத்து மூடவும்.
இதைப் போலவே எல்லா வெண்டைகாயிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
இதில் வெண்டைக்காய்களை போட்டு மூடி மிதமான தீயில் வைத்து வெந்ததும் எடுக்கவும்.
சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி. காய்கள் கலர் மாறாமல் பார்த்துக் கொள்ளவும். தயிர் சாததுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.

விரும்பினால் தாளிக்கும்போது சிறிது தேங்காய் துருவல் சேர்க்கலாம். முத்தாத காய் உபயோகிப்பது நல்ல சுவை தரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு எனது நன்றிகள். அனைவரும் நலமா? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு அழக்காக இருக்கு. அதுக்காக அதிகம் துள்ளப்படாது தெரியுமோ:)... பட்டிமன்றத்தில் பட்டாசெல்லாம் கேட்கிறது... இதோ வருகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்தக் குறிப்பு வித்தியாசமாக அழகாக இருக்கிறது.அம்சூர்ப் பொடி என்றால் என்ன? நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து சொல்கிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் வனிதா! வெண்டக்காய் வறுவல் இது புதுசாக இருக்கின்றது. நான் இது வரை இப்படி ஒரு வறுவல் செய்ததில்லை. செய்து பார்த்துவிட்டு சொல்லுகின்றேன்.அம்சூர் பொடி என்றால் மாங்காய் வற்றல் பவுடர் தானே? நன்றி இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வத்சலா அக்கா,

நலமா? அம்சூர்ப் பொடி என்பது மாங்காய் தூள் அக்கா.

நன்றி

சுபா

நானும் இதுபோல்தான் செய்வேன்.சுவை நன்றாக இருக்கும்.ஆனால் அம்சூர் பொடி சேர்த்தது இல்லை.பின்பு ஒருநாள் சேர்த்து செய்து பார்க்கிறேன்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

அருமையான குறிப்பு,அதனை zigzag -ஆக அடுக்கி இருப்பது பார்க்க அழகாக உள்ளது.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி அதிரா.... துள்ளவே இல்லை.... பயணம் வந்த அசதி போகல, எங்க துள்ளுறது?! ;)

மிக்க நன்றி வத்சலா.... அம்சூர்'னா மாங்காய் பொடி தான். அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. அம்சூர் இல்லன்னா எலுமிச்சை சாறு சில துளி விடுங்க.

மிக்க நன்றி யோகராணி. அவசியம் செய்துட்டு சொல்லுங்கோ, மாங்காய் பொடியே தான். :)

சந்தேகத்தை தீர்த்து வய்த்ததுக்கு ரொம்ப நன்றி சுபா... :)

மிக்க நன்றி செல்வி... செய்து பார்த்து சொல்லுங்கோ மறக்காம. :)

மிக்க நன்றி ஆசியா. செய்துட்டு சொல்ல வேணும் சரியா? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா! இன்று வெண்டக்காய் வறுவல் செய்தேன், மிகவும் நன்றாக வந்தது. நன்றி
இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மிக்க நன்றி ராணி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா