சிக்கன் நூடுல்ஸ்

தேதி: July 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

கோழி - ஒன்று
நூடுல்ஸ் - 500 கிராம்
காரட் - 2
லீக்ஸ் - ஒன்று
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 4
முட்டை - 4
மிளகாய்த்தூள் - 2 மேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் கோழியை முழுதாக உப்பு சேர்த்து வேக வைக்கவும். கோழி வெந்ததும் எடுத்து ஆற விடவும்.
பிறகு தோல், எலும்பை நீக்கி விட்டு தசையை மட்டும் எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த சிக்கினுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி அரை மணிநேரம் வைக்கவும். காரட்டை துருவிக் கொள்ளவும். லீக்ஸ்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி வைத்துள்ள சிக்கினை போட்டு சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காரட் மற்றும் லீக்ஸினை உப்பு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
நூடுல்ஸை தயாராக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வரும் போது பச்சை மிளகாய், முட்டையை அடித்து ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வேக வைத்து தயாராக வைத்துள்ள நூடுல்ஸின் மேல் பொரித்த சிக்கன், வதக்கிய காரட், வறுத்த முட்டை வெங்காயக் கலவையைப் போட்டு நன்றாக பிரட்டிக் கலந்து கொள்ளவும்.
சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயார். சூடாகப் பரிமாறவும். இந்த சிக்கன் நூடுல்ஸ் குறிப்பினை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வற்சலா அருமையான சிக்கன் நூடுல்ஸ், ஒரு முழுகோழிய களத்தி இரக்கி செய்து இருக்கீஙக,

Jaleelakamal

ஹாய் வத்சலா
சிக்கன் நூடுல்ஸ் சூப்பர்.நான் எல்லாம் பொரித்து போடுவேன். இது நல்லா முறை செய்து பாத்திற்று சொல்கிறேன் குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?