பட்டிமன்றம்2:அதிசந்தோசம் ஆண்களா?பெண்களா?

நம் அறுசுவையின் மூத்த சகோதரி திருமதி.அதிரா அவர்களின் தலைப்பிலிருந்து ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் தேர்ந்தெடுத்த தலைப்பு இதோ உங்களுக்காக:-

" இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது “ - ஆண்களா? பெண்களா?

வாழ்க்கையில் எல்லாரும் விரும்புவது நம் முன்னாள் நடுவர் சொன்னதுபோல் :D,

நிம்மதியாய்,சந்தோசமாய் வாழ்வதற்கே :)

இந்த சந்தோசத்தை இன்று அதிகமாய் அனுபவித்துகொண்டிருப்பவர்கள் ஆண்களா?

பெண்களா? என்ற அலசலுக்கு உங்கள் கருத்துகணைகளோடு தயாராகுங்கள்

அன்புடன்
இளவரசி

வின்னி.... 2 நாளா இந்த பக்கம் வர முடியாம போச்சு. நீங்க நடுவர் தேடி கவலை படாதிங்க. உங்க தலைப்பை ஆரம்பிங்க, நம்ம அதுகுள்ள ஒருத்தரை நிச்சயம் பிடிச்சிடலாம். :) உங்க தலைப்புக்காக ஆசையாக காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிடைச்சிட்டார்... அடுத்த நடுவர், ஆ...ஆ.. சிங்கம்போல:)...
வனிதா, வின்னி கவலையே வேண்டாம். வின்னிக்கு அடுத்து, எங்கள் அறுசுவையின் அட்மின் தான் நடுவர், இதுக்கு அவர் மறுப்புச் சொல்லமாட்டார் என்றே நம்புகிறேன். எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஓடிவந்து அழைத்தால், அவர் நிட்சயம் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். ஓகஸ்ட் 10 நடக்கப்போகும் பட்டிமன்றத்துக்கு. எமக்கும் அவரை நடுவராக்கிப் பார்க்கும் ஆசை இருக்கிறதுதானே. வனிதா, முன்புதான் பிளேன், இப்போ கிட்டப் போயிற்றீங்கள்தானே, நல்ல ஒரு "ஏசி வான்" அனுப்பிக் கூப்பிட்டு மேடையில் ஏத்திவிடுங்கோ:) மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்ளலாம்:).

ஓகஸ்ட் 24 நடக்கவிருப்பதற்கு, என்னால் முடியும் என்றே நம்புகிறேன். முடியாதுவிட்டால் பின்னர் சொல்லலாம்தானே. இதேபோல் ஏனைய தோழிகளும் வந்து எப்போ உங்களால் முடியும் என்று சொல்லுங்கோ. முடியாதுவிட்டால் சொல்லிவிடலாம், ஆனால் போனால் பிடித்துவிடுவார்கள் என நினைத்துப் பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளாமல் மாத்திரம் இருந்திடாதீங்கோ. (முன்பு நானும் அப்படித்தான் நினைத்துப் பயந்தேன்:)).

///உங்க தலைப்பை ஆரம்பிங்க, நம்ம அதுகுள்ள ஒருத்தரை நிச்சயம் பிடிச்சிடலாம். :) /// வனிதா, என்ன இது, ஆமிக்காரர் ரவுண்டப்பில் பிடிக்கிறமாதிரி, பிடிச்சிரலாம் எனப் போட்டிருக்கிறீங்கள்:), இதைப் பார்த்ததும், என் கால்களும் ஓடப் பார்க்குது:) பிடித்துவிடுவார்களோ என்று:).

///வனி, என்னதிது. ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன். இன்னும் அடுத்தடுத்த நடுவர் முடிவாகவில்லையே;-0/// வின்னி, அடிக்கடி வந்து பார்க்கிற எங்களுக்கே ஒரு முடிவு தெரியேல்லை:), 2 நாள் கழித்து வந்த உங்களுக்கு எப்படித் தெரியும்:).

பி.கு:
இதென்ன இது, முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் கதையாக இருக்கே:),
///நம்ம எல்லோரோட வேலையே அதானே.... நீங்க 'சகோதரர் ஹைஷ் மனைவி' புதிதாய் இணைந்தவர்கள்ல வந்ததும் கண்டுபிடிச்சு உடனே கேட்டீங்களே.. அத விடவா... :)///
அதைக் கண்டுபிடித்துக் கேட்டது நான் இல்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வானதி நல்லாயிருக்கீங்களா. விபா, வினீத் நலமா? உங்களுக்கு அடுத்து என்னை நடுவராக்கி இருக்கீங்க. எனக்கு நல்ல கூட பேச வராது வானதி. நான் போய் எப்படி நடுவராக இருக்க முடியும். ஏதோ எனக்கும் பேச தெரியும்னு இதில் பேசிட்டு இருக்கேன். வனி, இளவரசி இன்னும் நிறைய பேர் தீர்ப்பை படிக்கும் போதே சூப்பரா இருந்தது. ஒவ்வொரு பாயிண்ட்சும் அப்படி ஒரு அருமை. தளி சொல்வது போல் ஒரு வருஷம் உக்கார்ந்து யோசிச்சாலும் என்னால் இப்படி பேச முடியுமானு தெரியல.

தலைவர் பதவிய மறுக்க கூடாதுனு சொல்லியிருக்கீங்க. இந்த எல் போர்டுதான் தலைவரா வேணும்னு நீங்க நினைச்சீங்கன்னா நான் மறுக்கவில்லை (உங்க தலையெழுத்து தாங்கிதான் ஆகவேண்டும்). கவிசீவா, இஷானி, அதிரா, ஆசியாக்கா, போன்ற சீனியர்ஸ முதலில் கூப்பிடுங்க வானதி. இன்னும் சாதிக்கா அக்கா நல்ல எழுத்தாளர். அவர்களையும் கூப்பிடுங்க. இப்போ சந்தனாவும் நல்ல பேசுறாங்க வானு. இவங்களோட டர்ண் முடிந்தவுடன் நான் வரட்டுமா. இறுதி முடிவு உங்களுடையதுதான் வானதி. அதற்கு நான் கட்டுப்படுகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அதிரா.... நடக்கற விஷயமா சொல்லுங்கோ.... அண்ணா மாட்டேன்னு சொல்லாம எஸ்கேப் ஆயிடுவார். விவரமான ஆளாச்சே. ;) வந்தா எல்லாருக்கும் சந்தோஷம் தான். பார்ப்போம்.

தனிஷா.... உங்க மேல நம்பிக்கை வைக்காமலா வின்னி கூப்பிடுறாங்க.... எங்க எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கு.... அதனால் நீங்களே அடுத்த நடுவரா இருங்க ப்ளீஸ். எங்களுக்காக வாங்க... பொறுப்பு ஏத்துக்கங்க.

வின்னி.... உங்களுக்கு இப்போ நிம்மதியா இருக்கா?? பாருங்க தேடி வந்து குடுத்த பொறுப்பை ஏத்துக்கிட்டு உங்களுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் சந்தோஷத்தை குடுத்துட்டாங்க நம்ம தனிஷா. :) வந்து வெற்றிகரமா ஒரு தலைப்பை துவக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள வானதிக்கு,
பட்டிமன்ற நடுவர் வானதிக்கு வாழ்த்துக்கள்.இதில் பங்கு/பார்வை கொள்ளப்போகும் எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

புதிய தலைப்பை அறிய ஆவலாக உள்ளது.:)

இனி வரும் மாதங்களில் பொறுப்பேற்கப்போகும் நடுவர்களுக்கும் என் வாழ்த்தும் வணக்கமும்.

எப்போதும் போல் எனது ஆதரவையும்,பதிவையும் வரும் அக்டோபரிலிருந்து தொடருகிறேன்.

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தனீ ஆஹா இதுக்குத்தானே நாங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோம்:) இங்கு அனைவரும் நலம். நீங்களும் அஃப்ரா குட்டியும் நலம்தானே.கவிசிவா ஊருக்குப் போயிருக்காங்க. அதிரா ஆகஸ்ட்டில் நடுவரா இருப்பாங்க. இஷானியும், சந்தனாவும் வருங்கால நடுவர்கள்:) ஆசியா எப்ப மாட்டுவாங்கன்னுதான் தெரியல:) எஸ்கேப் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள்:)

உங்க வாக்குவாதங்களைத்தான் நாங்க பார்க்கிறோமே. பயப்படாமல் வாங்க. நீங்கதான் அடுத்த நடுவர். உங்களுக்கு பயமே வேண்டாம். நான் தான் நடுவரா இருக்கப் போறோமில்ல. அதைப் பார்த்து உங்க பயமெல்லாம் தெளிஞ்சுடும் பாருங்க:)

இப்படி எல்லாரும் அடுத்த தலைப்புக்கு ஆவலாக இருப்பதைப் பார்த்தால் ஒரே நடுக்கமா இருக்கே:) நாளை தலைப்புடன் வருகிறேன் வனி.

அதிரா கேட்க ரொம்ப நல்லாத்தான் இருக்கு. வனி சொல்வதுபோல் அவர் எஸ்கேப் ஆகிவிடுவார்

இளவரசி ஊருக்குச் செல்கிறீர்களா? நல்லபடியாக போய் வாருங்கள். நன்றாக எஞ்சாய் பண்ணுங்கள்.

தனிஷா
வாழ்த்துக்கள். வின்னிக்கு அடுத்து நீங்கள்தான் நடுவர். எவ்வளவு அழகாக வாதடுறீங்கள் (என்னாலே அப்படி வாதாட முடிவதில்லை), உங்களுக்கா முடியாது. நான் யாரும் எதுவும் சொல்லாததால், எங்கள் அட்மினை சீண்டிப் பார்த்தேன்:).

தனிஷாவைப் போல் எல்லோரும் வந்து சொன்னால், உங்கள் வசதிப்படி திகதியைக் குறிக்கலாம் இல்லையா வனிதா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நடுவர் வின்னி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என் பெயரையும் நடுவர் பதவிக்கு போட்ட வின்னி அக்காவிற்கு நன்றி.

நான் முந்தைய பட்டிமன்றத்தில் வனிதா அக்காவிடம் சொன்னது போல மூத்த உறுப்பினர்கள் முடிக்கட்டும் என்று காத்திருக்கிறேன். அதேசமயம் உங்கள் அனைவரின் வாதங்கள் பார்க்கும் போது தீர்ப்பளிக்கும் பதவிக்கு நான் வரத்தகுமோ என்று கூட பயம் இருக்கிறது.

ஏதோ எனக்கு தெரிந்ததை பேசிக்கொண்டிருந்த எனக்கு நடுவர் பதவி என்றால் அதற்கு நான் தகுதியா என்று பயம் எனக்குள் இருக்கிறது. எனினும் தேவைப்படும் பட்சத்தில் தட்டிக்கழிக்காமல் அப்பொது இந்த பொறுப்பை எற்றுக் கொள்ள நான் சம்மதிக்கிறேன்

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அப்போ முடிவே பண்ணீடீங்களா நாந்தானு. இப்பவே நெஞ்சுக்குள்ள பயம் வந்துருச்சு.(கடவுளே எங்கிட்ட இருந்து இந்த பிள்ளைகளை எல்லாம் நல்ல படியா காப்பாத்து) வானதி நீங்கலாம் சூப்பரா கலக்குவீங்க. எடுத்துக்காட்டுக்கு உங்க நகைச்சுவை கெட் டூ கெதர் ஒன்னு மட்டுமே போதுமே. அப்புறம் என்ன உங்க தலைப்பை நாளைக்கு எதிர்நோக்கி இருக்கேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வாழ்த்துக்கள் இளவரசி. அருமையான நல்ல விளக்கங்களோட தீர்ப்பு சொல்லியிருக்கீங்க. அதுவும் எங்க அணிக்கு சாதகமான தீர்ப்பாக அமைந்ததில் இரட்டிப்பு சந்தோஷம்( நான் பெரும்பாலும் தோற்கிற அணிதான் ஹி ஹி).

அடுத்த நடுவரா வின்னியா? வாழ்த்துக்கள் வின்னி வந்து கலக்குங்க. கண்டிப்பா கலந்துக்குவேன்.

ஹையா அடுத்த நடுவரும் ரெடியா? வாழ்த்துக்கள் தனிஷா. உங்கள் வாதங்களே அருமையாக இருக்கும் போது நடுவர் வேலையை நிச்சயம் சிறப்பாக செய்வீங்க.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்