பட்டிமன்றம்2:அதிசந்தோசம் ஆண்களா?பெண்களா?

நம் அறுசுவையின் மூத்த சகோதரி திருமதி.அதிரா அவர்களின் தலைப்பிலிருந்து ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் தேர்ந்தெடுத்த தலைப்பு இதோ உங்களுக்காக:-

" இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது “ - ஆண்களா? பெண்களா?

வாழ்க்கையில் எல்லாரும் விரும்புவது நம் முன்னாள் நடுவர் சொன்னதுபோல் :D,

நிம்மதியாய்,சந்தோசமாய் வாழ்வதற்கே :)

இந்த சந்தோசத்தை இன்று அதிகமாய் அனுபவித்துகொண்டிருப்பவர்கள் ஆண்களா?

பெண்களா? என்ற அலசலுக்கு உங்கள் கருத்துகணைகளோடு தயாராகுங்கள்

அன்புடன்
இளவரசி

ஹாய் சுபா,வனிதா,
வந்தாச்சா?வணக்கம்
//இப்பொதெல்லாம் பெண்கள் கூட இது தான் படிப்பேன், இவரை தான் கல்யானம் பண்ணிப்பேனு சொல்லி வீட்டை விட்டு கூட வெளியே வந்து அவங்க வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள் நீங்கள் கூறும் ஆண்களை போல்!!.//

சுபா….நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க…..!!
ஆமா நீங்களும் சந்தனாவும் 90%,10% இன்னும் விட மாட்டீங்க போலிருக்கு…அதுக்காக என்ன எதுவும் கேள்வி கேட்டுடாதீங்க……எனக்கு கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும்.பதில்……..தெரியாது?:)

//என்னை டென்ஷன் பண்ணிட்டு ஒன்னு நிம்மதியா உட்கார்ந்திருக்கு பாருன்னு.//

வாங்க வனிதா………மேலே ஏதோ சொல்லியிருக்கிங்களே”டென்ஷன்” அப்படின்னா என்ன..?:)
ஓ…இந்த ஒன்சன்,டூசன்…………..நைன்சன் ..சொல்லுவாங்களே..
அதுல வரதா? இப்ப புரிஞ்சுருச்சு..ஹி..ஹி..

என்ன ரொம்ப வலிச்சுருச்சா……அதுக்கும் அவர டென்ஷன் பண்ணிடாதீங்க…:)
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆஹா... இளவரசி.... தீர்ப்பு பார்க்கலாம்'னு ஓடி வந்தேன்.... இன்னும் நீங்க வரலயா... சரி நான் வெளிய போறேன், போய் வந்தே பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

" இன்று வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்" - ஆண்களா? பெண்களா?

முகந்தெரியா முல்லைப்பூக்களுக்கு மீண்டும் என் வணக்கம்.:-
இரண்டு அணிகளுமே அருமையாய் இரண்டு பக்க நியாயங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..:-

நீங்கள் சொல்லிய முத்து முத்து கருத்துக்களை கோர்த்து பார்த்ததில் உருவான தீர்ப்பு மாலைதான் இது.

சிகரங்களும் வாதாடிய மன்றத்தில்……ஒரு சிட்டுக்குருவியின் தீர்ப்பு…..

ஆதாம்,ஏவாள் காலம்தொட்டு ஆணும் பெண்ணும் ஒருவரை சார்ந்து ஒருவர் வாழ்ந்து வருகிறோம்.
ஒருவருக்கொருவர் பல வித உறவுகள் மூலம் சந்தோசப் பரிமாற்றம் செய்கிறோம்.
தனக்குதானே சந்தோசத்தை அனுபவிக்கவும் செய்கிறோம்.

இதில் யார் சந்தோசத்தை அதிகம் அனுபவிக்கிறோம்…??

படிப்பை முடித்தவுடன் ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் கட்டாயம்/நெருக்கடி ஆணுக்குத்தான் அதிகம்..இந்த நெருக்கடி பெண்களுக்கு குறைவு என்பதால்
………>>இங்கு பெண்கள்தான் அதிகம் சந்தோசமாய் இருக்கிறார்கள்

. ஆண்கள் பொருள் ஈட்டுவதில் அதிகம் போராட/ரிஸ்க் எடுத்து தோல்வியை பல சமயம் சந்திக்கும் நிர்ப்பந்தம் …இந்த கட்டாயம் பெண்ணுக்கு பல சமயம் இருப்பதில்லை..
….>> இங்கே பெண் ஆணைவிட சந்தோசமிழக்காமலிருக்கிறாள்.

சமுதாயத்தில் பெற்றோரை ஆண்கள்தான் கடைசிவரை பார்த்துகொள்கிறார்கள். மேலும் திருமணம்,குழந்தைகள் என்று வரும்போது ஆணின் பொறுப்புச்சுமை கூடிபோவதால், அவன் சம்பாதிக்கும் இயந்திரமாய் மாறிபோகிறான். சந்தோசம்….??????

குடும்ப தேவைகளை பெண்கள் பட்டியல் போடும்போதே ஆண்களுக்கு மனப்பளு அதிகமாகும். அதை பூர்த்திசெய்யும் வரை பல ஆண்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகிறார்கள். சம்பாதிப்பது ஆணென்றாலும் அதைவைத்து அதிக சந்தோசம் அனுபவிப்பது பெண்கள்தான்.

மேலும் ஒரு ஆணின்(மகன்) வெற்றியை பார்த்து ஒரு பெண்(தாய் )எவ்வளவு பெருமகிழ்ச்சி அடைகிறாள் என்பதை வள்ளுவரே(ஆண்) புரிந்து கொண்டிருக்கிறார்.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.”
அதைபோலத்தான்..ஒரு கணவனின் வெற்றியை பார்த்தும் பெருமகிழ்ச்சியடையாத ஒரு மனைவிகூட இருக்க முடியாது…..

இந்த சந்தோசம் ஒரு மனைவியின் வெற்றியை பார்த்து கணவன் அடையும் சந்தோசத்தைவிட பல மடங்கு அதிகம்…!!!!

பெரும் சதவீதம் ஆண்கள் பெண்களின் வெற்றியை பார்த்து ,உள்ளுக்குள் இந்த வெற்றியால் இவள் தன்னையும் மிஞ்சிவிட்டாலோ..?? தன்னை இனி மதிக்கமாட்டாளோ ,?என சங்கடப்பட்டு கொண்டு
முகத்தில் மட்டும் சந்தோச நிறத்தை அப்பி கொண்டு போலியாக புன்னகைக்கும்போது, இவர்களால்
பெண்களைப்போல் சந்தோசத்தை அதிகமென்ன அனுபவிக்கவே முடிவதில்லை…என்பதில் உண்மையிருக்கிறது அல்லவா?:-.

சரிங்க ..நம்ம கால கடிகாரத்தை கொஞ்சம் பின்னோக்கி சுழற்றி பார்க்கலாமா!!

அன்றைய நிலை(1970கள் வரை)
சம்பாதிக்கப் பிறந்தவர்கள்
ஆண்கள் ,…!!!
சமைக்க பிறந்தவர்கள்
பெண்கள்தான்…!!!
என்பது எழுதப்படாத சட்டமா இருந்தது.

இன்று
சம்பாதிக்கப் பிறந்தவர்கள்
இருவரும்..!!:))

ஆனால்
சமைக்க பிறந்தவர்கள்
பெண்கள்…தான்!!! (ஹோட்டல்களை விட்டு விட்டு பார்த்தால்:))
--என்றிருக்கிறது…..இந்த மாறுதல் பெண்களின் சுமையை இரட்டிப்பாக்கி ஆண்களின் சுமையை பாதியாய் குறைத்திருப்பதால்……இங்கே :):
----------> பெண்களைவிட ஆண்களின் சந்தோசம் அதிகரித்துள்ளது

ஆசை ஆசையாய் அறுசுவை உணவு
ஆண்களுக்கு பரிமாறும் பெண்கள்
தனக்கு மட்டும் நேற்றைய மீதியையும்
அன்றைய மீதியையும்
அவசர அவசரமாய்
அள்ளிப்போட்டு கொள்வது………
பெரும்பாலான குடும்பங்களில்
இன்றும் நடக்கிறது……
………………….>> இங்கே ..சாப்பாட்டை சந்தோசமாய் அதிகம் அனுபவித்து சாப்பிடுவதும் ஆண்கள்தான்.

மேலும்
பெண்களுக்கான சில இயற்கை வேதனைகள்,அது இயற்கைதான் என்றாலும்….விதிவிலக்கு
என்று அவற்றை ஒதுக்கி விட முடியாது……அது எல்லா பெண்களுக்கும் உண்டு…அதை ஆண்கள் பகிர்ந்து கொள்ள முடியாது……அந்த வேதனைகளோடும்
-----பெண்கள் ஆண்களின் சந்தோசத்திற்கு குறைவு வராமல் பார்த்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆண்களுக்கே ஒரு காய்ச்சல்/தலைவலி என்றால் அந்த நேரத்தில் ஆதரவாய் தொட்டு பார்க்கும் தாயின் /மனைவியின் ஸ்பரிசம் அவனுக்கு
----இதமான மகிழ்ச்சிதான்.

ஒரு மகனுக்கு தந்தையின்
பரிவைவிட…..
தாயின் அன்புதான்
மிகவும் சந்தோசம் ……என்பதால் தானோ….
பல ஆண்கள் அவசர அவசரமாய்
மனைவியின் மறைவுக்கு பின்/முன்
மறுமணம் செய்து
தன் சந்தோசத்தையும்
இரட்டிப்பாக்கி கொள்கிறார்கள்…..:)
……………….இதுபோன்ற சூழ்நிலை வரும்போதும் *ஆணின் சந்தோசம்* சரிந்து விடாமல் சமுதாயம் சரிகட்ட முன் வருகிறது……..

விமானம் ஓட்டுவதிலிருந்து,விண்வெளி செல்வதுவரை பெண்களின் சாதனை மகிழ்ச்சிதான்…ஆனால்
ஒரு சாதனையால் கிடைக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் ஆணைவிட பெண் அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

பெண்ணைவிட எளிதில் கிடைக்கும் வெற்றி ஒரு ஆணுக்கு சந்தோசம் தானே?

உதாரணத்திற்கு ஒரு ஆண் எழுத்தாளர் எழுத உட்கார வேண்டுமென்றால்,அவன் மனைவியிடம் என்னை யாரும் தொந்தரவு செய்ய அனுமதிக்காமல் ,எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொள்
என உத்தரவு போட்டுவிட்டு நிம்மதியாய் எழுத உட்காரலாம்.
ஆனால் பெண் என்றால் எல்லா வீட்டு பொறுப்புகளையும் நீ பார்த்துக்கொள் என கணவனுக்கு உத்தரவு போட்டு விட்டு ஹாய்யாக உட்கார்ந்து எழுத முடியாதல்லவா..? வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து, ஓய்ந்த நேரத்தில் தான் எழுத முடியும்..

சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் எழுத முடியாமல் கூட போய்விடும்.

அதுபோன்ற சில/பல தருணங்களில் பெண்களின் சாதனையும் சந்தோசமும், குடும்பத்திற்காக காணாமல் போகிறதல்லவா?

ஆண்/பெண் சமம் என வெளியில் ஆயிரம் கருத்துக்கள் சொன்னாலும்,உண்மையிலேயே…பெண்கள் தனக்கு போட்டியாக,ஒன்றை செய்ய வரும்போது வேலைபார்க்கும் நிறுவனங்களில் கூட எல்லா ஆண்களின் மனதிலும் ஒரு ஓரத்திலாவது இவள் பெண்தானே என்ற இரண்டாந்தர பார்வையிருக்கும். அங்கே பெண்கள் ஆண்களின் முதல்மதிப்பீட்டை பெற ஆண்களைவிட அதிகம் சிரமப்படும்போது …..சந்தோசப்படுவது ஆண்கள்தான்..!.

மற்றொன்று, ஆண்களின் ஸ்போர்டிவ்வான மனநிலையும் அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணம்.
அதிகம் சிரிப்பது ஆண்களா... பெண்களா என்று அமெரிக்கன் ஸ்டான்ட் போர்டு பல்கலைக்கழகம் ஒரு
ஆய்வு நடத்தியது..
அந்த ஆய்வில்.....
"பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் கார்ட்டூன்களை பெண்களிடம் காட்டிய
போது, அவர்கள் முகத்தில் பெரிதாக எந்த மாறுதலும் இல்லை.....
அதே கார்ட்டூன்களை ஆண்களிடம் காட்டிய போது, விழுந்து விழுந்து சிரித்தார்கள்."

ஆக நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு வேடிக்கையான நிகழ்ச்சிகளைக் கூட ஆண்கள் சுவாரஸ்யமாக எடுத்துக்கொள்கிறார்கள்..

பெண்கள் எதையும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க பழகியவர்கள்.

அதாவது சொன்ன விஷயத்தில் உண்மை இருக்கிறதா என்று தோண்டிக் கொண்டே இருப்பார்களே தவிர, உடனே சிரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றுவதில்லை.
இந்த ஆராய்ச்சியை அவர்கள் முடிப்பதற்குள் ஆண்கள் சிரித்து முடித்துவிடுகிறார்கள்..:-

ஒரு சில நேரங்களில் சிரிப்பவர் எல்லாம் சந்தோசம் உள்ளவர்கள் கிடையாது என்பது உண்மையென்றாலும்,பல தருணங்களில் அதிக சந்தோசத்தில் இருப்பவர்கள்.....அதை அனுபவித்து சிரிக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

ஆக, நகைச்சுவை உணர்வின் சந்தோஷத்தையும் அதிகம் அனுபவிப்பது ஆண்கள் தான்.:):)

வாழ்வின் நிறைகளைவிட குறைகளை பற்றி பேசியே பெரும்பாலான பெண்களின் பாதி சந்தோசம் தொலைந்து போகிறது.

. தான் மறக்க நினைக்கும்
குறைகளை பேசி பேசியே
அவள் நினைக்க மறந்தது
நிறைகளை மட்டுமல்ல..
நிகழ்கால சந்தோசங்களையும் தான்..!

சந்தோசம் தரும் விசயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில நேரங்களில் வித்தியாசப்படுகிறது உதாரணத்திற்கு,
ஒரு குடும்பத்தில் கணவன், அவன் மனைவி அவனுக்கு தரும் மதிப்பிலும் ,மரியாதையிலும் முழுமையான சந்தோசத்தை உணர்கிறான்.

நம் கலாச்சாரபடி...பெரும்பாலான பெண்கள் அந்த சந்தோசத்தை நிஜமாகவே கணவனுக்கு தருகிறார்கள்.
ஒரு சில சமயங்களில் போலியாகவாவது :) அந்த மரியாதை/மதிப்பை கொடுத்து கணவனை சந்தோசப்படுத்துகிறார்கள்.
ஆனால்
ஒரு மனைவியின் சந்தோசம் தன் கணவன் தன்னை எந்த அளவு நேசிக்கிறான் என்பதை பொறுத்து அமைகிறது.

எல்லா கணவர்களும் மனைவியை சும்மாவாவது(நேசிக்கிறார்கள் என நம்புவோம்.:)

நம் தோழிகள் ஏற்கனவே சொல்லியுள்ளதுபோல,ஆண்களுக்கு இயற்கையிலேயே எதையும் வெளிப்படுத்த
தெரியாததால், தங்கள் அன்பையும் வெளிப்படுத்த நேரமோ, பொறுமையோ இல்லாமல் அல்லது இதையெல்லாம்
எதற்கு சொல்லி கொண்டு என்ற அலட்சியத்திலோ, நடைமுறையில் வெளிப்படுத்த தவறிவிடுகின்ற
காரணத்தால்,பெண்களுக்கே உரிய பச்சாதாப உணர்வில் அந்த அலட்சியம் சில நேரங்களில் பல குடும்பங்களில்பெண்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி சந்தோசத்தை.ஓரங்கட்டுகிறது.

இங்கே கணவன் என்ற ஆணால் ஒரு மனைவியாகிய பெண்ணை அவளைப்போல் சந்தோசப்படுத்த முடிவதில்லை.

திருமண பந்தத்திலும் பெற்றோர் பிரிவு, புகுந்தவீட்டின் புது சூழல் இரண்டும் சேர்வதால்,,அந்த புதுமையான சந்தோசத்தையும் ஆண்கள்தான் எந்த இழப்புமின்றி இரட்டிப்பாய் உணர்கிறார்கள்.
சம்பாதிக்க வேண்டிய 25- 40 களில் ஆண்கள் கொஞ்சம் சிரமப்பட்டாலும் 40 தொடும்போது
கடமைகளை முடித்த தன்னிறைவில் ஆண்கள்தான் வாழ்க்கையை அனுபவித்து அதிகம் சந்தோசப்படுகிறார்கள்.

ஆனால் இந்த வயதிலும் பெண்களின்,மெனொபாஸ் போன்ற உடலியல் சிரமங்கள் அவர்களின் சந்தோச தருணங்களை மனரீதியாகவும் முழுமையாய் அனுபவிக்க விடுவதில்லை....

ஆக வாழ்வின் அதிகமான காலகட்டங்களில் இளமை(25 வரை),முதுமை(40க்குமேல்) பெண்ணைவிட ஆண்தான் அதிகம் மகிழ்ச்சியாயிருக்கிறான். .

இடைப்பட்ட (25-40) காலத்தில் வீட்டிலிருக்கும் வேலைக்கு போகாத இல்லத்தரசிகளை வைத்து பார்த்தாலும் இருவரின் சந்தோசமும் 50- 50 சதவீதம்தான் ஏறக்குறைய….
.
எனவே .வாழ்வின் அதிகமான காலகட்டங்களில்,….ஆண்கள்தான் பெண்களைவிட சந்தோசத்தை அதிகம் அனுபவிக்கிறார்கள்...என்பது என் கருத்து.:-:)

உங்கள் பொன்னான நேரத்தை பொறுமையுடன் செலவழித்து என் தீர்ப்பை வாசித்ததற்கு என் நன்றி.......

பி.கு:இவ்வளவு முழுநீள தீர்ப்பு உங்களுக்கு தேவையில்லைதான்.ஆனால் எதையும் இரத்தினசுருக்கமாய் இரண்டு பத்தியில் சொல்லும் பக்குவம்/புத்திசாலித்தனம் என் சிற்றறிவுக்கு இன்னும் வரவில்லை என்பதால்தான்..
இப்படி......!!:)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவர் இளவரசி அவர்களே! அருமையான தீர்ப்பு சொல்லி அசத்திட்டீங்க!!! நான் கூட முதல் பாதியும் பின்னால் கடைசியில் கொஞ்சமும் தான் படிச்சேன் உங்க தீர்ப்பில்,கோச்சுங்காதீங்க...
இன்று எனக்கு சுத்தமாக உடம்பு முடியல(அவ்ளோ வேலை)...ஆனா உங்க தீர்ப்பை பார்த்து ஒரு 2 வரி எழுதாமலும் இருக்கமுடியல அதனால் ஓடோடி வந்து உங்களுக்கு ஒரு பதில்...

அருமையான நடுவருக்கும் அவரது தீர்ப்புக்கும் வாழ்த்துக்கள்...

நன்றி
பாப்ஸ்...

ஆதரவு அளித்த அட்மின் அண்ணாவுக்கும்,அருமையாக வாதாடிய தோழிகள்/சகோதரிகள்,
ஆண்களே ..!!அணி
(
திருமதி.கவிசிவா,
திருமதிஇஷானி,
திருமதி.ஆசியா மேடம்,
திருமதி.தேவா மேடம்,
திருமதி.மனோகரி மேடம்,
திருமதி.சேகர்(சந்தனா) )
பெண்களே..!!!அணி
(திருமதி.அதிரா,
திருமதி.தனிஷா,
திருமதி.தேன்மொழி,
திருமதி.ஜெயராஜி(சுபா),
திருமதி.உமா,
திருமதி.வனிதா,
பதிவுகள் போட்ட(திருமதி.ஷரொன்,திருமதி,சுகா,திருமதி .உமா(பாப்ஸ்),திருமதி.ஆயிஸ்ரீ,
ஆகிய எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி :-
யார் பெயரேனும் விட்டிருந்தால் மன்னிக்கவும்.
சுகமில்லாத தருணத்தில் கூட வந்து வாழ்த்து சொன்ன
பாப்ஸ்க்கு மிக்க நன்றி!!

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி இளவரசி
மிகவும் அருமையான தீர்ப்பு............
நான் பெரிதாகவெல்லாம் வாதாடபோதும் என்னையும் கணக்கில் வைத்ததற்காக நன்றி.
நான் வெறும் சோடா(மிரண்டா) தாங்க குடுத்தேன்(அடிக்க இல்லீங்க குடிக்கத்தான்).
எவ்வளவு பெண்கள் இவ்வளவு திறமையாக இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்.

வெற்றி!! வெற்றி:)... எமக்குத்தான் வெற்றி:)
நடுவர் அவர்களே... தலைப்பைப் பார்த்துப் பயந்திட வேண்டாம்.

நல்ல எடுத்துக்காட்டுக்களைக் கூறி, நன்றாகவே தீர்ப்புச் சொல்லியிருக்கிறீங்கள். வாழ்த்துக்கள். எனக்குக் கூட சந்தேகமாக இருந்தது, இரு பக்கமும் சரிபோலவே இருக்கே.. ஒருவேளை இரண்டிலும் சந்தோஷம் எனச் சொல்டிடப்போறீங்களோ என்று. ஆனால் மிகத் திறமையாக தீர்ப்பைச் சொல்லியிருக்கிறீங்கள்.

வாதாடிய இரு அணியினருக்கும் வாழ்த்துக்கள்.

எமது அணியினரே வெற்றி எமக்குத்தான்? என்ன? புரியாமல் கதைக்கிறேனோ?:) நான் சொல்வது அடுத்த முறை வெற்றி எமக்குத்தான்:):).

"பத்தாவது முறை கீழே விழுந்தவரைப் பார்த்து "பூஸ்" சொல்லியது, 9 முறை எழுந்தவரல்லவா நீங்கள்?:)(நன்றி இலா)"... அதேதான்.... பூஸ் இருக்கக் கவலை ஏன்?:)..... மீண்டும் அடுத்த பட்டிமன்றத்தில் சந்திப்போம்.

(இளவரசி ஒரு நடுவரின் பெயரை அறிவிக்கவேணும் எல்லோ...அடுத்தது வின்னி.. அதன் பின்னர் போட... ).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அருமையான விளக்கத்துடன் அழகாக தீர்ப்பு வழங்கிய எங்கள் பொன்மனச் செம்மல் நடுவர் இளவரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

இந்த பட்டிமன்றத்தில் சந்தோசம் ஆண்களுக்கு தான் என்று கூறி வாதமிட்டு வென்று வெற்றி வாகை சூடியிருக்கும் எங்கள் எதிரணித் தோழிகளுக்கு வாழ்த்துக்கள். சந்தோசமாக கலந்து கொண்டு சந்தோசம் பெண்களுக்கே என்று வாதாடிய எம்மணித் தோழியருக்கும் வாழ்த்துக்கள்.

அசத்தலான தலைப்பைக் கொடுத்த அதிரா அக்காவுக்கு பற்பல நன்றிகள்.

மேலும் இவை அனைத்தையும் சாத்தியமக்கித் தந்த பாபு அண்ணாவிற்கும், மொத்த அறுசுவை குழுவினருக்கும் என் சார்ப்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்..

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அதிரா,
முதலில் வெற்றி..வெற்றி உங்கள் முழக்கத்தை
கேட்டு பயந்துதான் போனேன்...:)

என்னடா...நம்ம தலைப்பையே போட்டுகிட்டு,நமக்கே ஆப்பு வச்சிட்டாங்களேன்னு போர்கொடி தூக்குவீங்கன்னு..நல்லவேளை தப்பித்தேன்..

அருமையான தலைப்பை கொடுத்த உங்களுக்கு என் சிறப்பு நன்றி..!!

சுபா ,தேன்மொழி ,உங்கள் ஆர்வத்திற்கும்,நன்றிக்கும்..
மகிழ்ச்சியும் நன்றியும்....

அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி
நல்லா தீர்பு வழங்கியிருக்கிரிர்கள் வாழ்த்துக்கள் உங்கள் விளக்கம் அருமை.
அதிரா என்னையும் தொடியதற்கு நன்றி நேரம் இன்மை காரணத்தால் என்னால் பட்டிமன்றத்தில் பங்களிக்க முடியவில்லை மன்னிக்கவும்.உங்கள் தலைப்பு சூப்பர்.
இதில் வாதாடிய அனைத்து தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.உங்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் அருமை.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மேலும் சில பதிவுகள்