பட்டிமன்றம்2:அதிசந்தோசம் ஆண்களா?பெண்களா?

நம் அறுசுவையின் மூத்த சகோதரி திருமதி.அதிரா அவர்களின் தலைப்பிலிருந்து ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் தேர்ந்தெடுத்த தலைப்பு இதோ உங்களுக்காக:-

" இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது “ - ஆண்களா? பெண்களா?

வாழ்க்கையில் எல்லாரும் விரும்புவது நம் முன்னாள் நடுவர் சொன்னதுபோல் :D,

நிம்மதியாய்,சந்தோசமாய் வாழ்வதற்கே :)

இந்த சந்தோசத்தை இன்று அதிகமாய் அனுபவித்துகொண்டிருப்பவர்கள் ஆண்களா?

பெண்களா? என்ற அலசலுக்கு உங்கள் கருத்துகணைகளோடு தயாராகுங்கள்

அன்புடன்
இளவரசி

இளவரசி.... மற்ற நடுவர்களில் இருந்து நீங்களாவது கொஞ்சம் வித்தியாசமா இருப்பீங்கன்னு நினைச்சேன்.... இல்லை நானும் அப்படி தான்னு சொல்லிபுட்டீங்க. :(( என்னான்னு பாக்கறீங்களா??? தீர்ப்பை தான் சொல்றேன்... இதுவரை நான் வாதாடிய எந்த பட்டிமன்றத்திலும் நான் வாதாடிய கட்சிக்கு ஸப்போர்ட் பண்ணி யாரும் தீர்ப்பு சொன்னதே இல்லை. நீங்களும் அதே மாதிரி எதிர் அணிக்கே ஓட்டு போட்டுட்டீங்க. சரி பரவாயில்லை.... நல்ல விதமா அதை விளக்கி சொன்னதால விட்டுடுறேன். வாழ்த்துக்கள். கவிதை நடை போல பல வரிகளோடு அழகான தீர்ப்பு சொன்னமைக்கு. :)

வாதாடிய அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.

அதிரா.... கவுத்துட்டாய்ங்க அதிரா.... ஒரு ரீ குடுங்க. அடுத்த பட்டிமன்றமாவது நமக்கு சாதகமா தீர்ப்பாகுதா பார்ப்போம். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயாராஜி, இளவரசி, சுகா மிக்க நன்றி.இளவரசி, நல்ல தீர்ப்பை, அழக்காகச் சொல்லிப்போட்டுப் பயப்படலாமோ? இந்தாங்கோ ஒரு கப் ஜிஞ்சர் ரீ...ஸ்ரெடியாக இருங்கோ..

///அதிரா.... கவுத்துட்டாய்ங்க அதிரா.... ஒரு ரீ குடுங்க. அடுத்த பட்டிமன்றமாவது நமக்கு சாதகமா தீர்ப்பாகுதா பார்ப்போம். :(/// ::::: வனிதா... வனிதா... ரீ மட்டும் போதுமோ?:) கைக்குட்டை வேண்டாமோ:)?, என்னுடையது நனைந்து இடமேயில்லாமல் ஈரமாப்போச்சு:),,, இந்தாங்கோ புதுசு:).....

விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது:):):)......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் விளக்கமான தீர்ப்புக்கு நன்றி :-) என் (பெண்கள்) அணியில் வாதாடின அனைத்து தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள் & நன்றிகள்.

எதிர் அணிக்கு எனது வாழ்த்துக்கள்.

அடுத்த பட்டிமன்றத்தில் மீண்டும் சந்திப்போம் & சிந்திப்போம் :-)

அன்புடன்
உமா

நல்ல அருமையான தீர்ப்பு இது. உங்க தீர்ப்பை படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. உங்கள் தீர்ப்புக்கு நன்றி. இங்கு பங்கு கொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள், நன்றி.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நல்ல தீர்ப்பை வழங்கிய நடுவர் இளவரசி அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும், உரையில் ரிப்பிடேஷனைச் சற்று குறைத்திருந்தால் இன்னும் அது சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து. பங்கு பெற்ற இரு அணியினருக்கும் என் வாழ்த்துக்கள்,மற்றும் பார்வையாளர் அனைவருக்கும் என் நன்றி.

ஆண்களே அணிக்கு ஆதரவாய் பதிவு போட்ட திருமதி.தளிகா அவர்களுக்கும் என் நன்றி(மன்னிக்கவும் தளிகா.பெயர் விட்டுவிட்டேன்)
வாழ்த்து சொன்ன சுகா,வனிதா,உமா,தனிஷா அனைவருக்கும் என் நன்றி.
மற்றும் எனக்கு வாழ்த்தும்,*கருத்தும்* சொன்ன சகோதரி மனோகரி மேடத்திற்கு என் பணிவான நன்றி.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி, ரொம்ப நல்லா தீர்ப்பு சொல்லிட்டீங்க. பட்டிமன்றத்தையும் மிகவும் நன்றாக நடத்தி விட்டீர்கள். இப்படி நீங்கள்லாம் தீர்ப்பு சொல்வதை பார்க்கும்போது எனக்கு பயம் பயம்மா வருது:)

அதிரா நாமெல்லாம் இப்படி கண் கலங்கலாமா? நாம்தான் வருத்தப்படாத பெண்கள் சங்கத்தில் இருக்கோமே:)

வனி, எனக்கு அடுத்த நடுவர் யார்? இதுதான் இப்போ என் தலையாய ப்ரச்சனை:)

இதில் பங்குபெற்ற அனைவருக்கும் மற்றும் நடுவர் இளவரசிக்கும் மிக்க நன்றி.

ஹலோ இளவரசி மேடம்,
நலம்தானே.வாழ்த்துக்கள் மேடம் .உங்க பட்டிமன்ற தீர்ப்பு அருமை.வாதங்கள் எதயும் நான் படிக்கவில்லை(மன்னிக்கவும்).தலைப்பு மட்டும்தான் பார்த்தேன்.ஆனால் உங்களின் தீர்ப்பை படிக்கும்போது வாதங்கள் எப்படி இருந்திருக்கும் என புரிகிறது.நீங்கள் தீர்ப்பு சொன்னவிதம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. கவித்துவமான வரிகள் அருமை. அடுத்த பட்டிமன்றதில் பங்குபெற விருப்பம் இருக்கிறது,நேரம் இருக்குமா என தெரியவில்லை.மீண்டும் பேசுவோம்.நன்றி..
அன்புடன்
கலா

Kalai

நடுவர் இளவரசி, விரிவான விளக்கத்துடன் அழகாக தீர்ப்பு கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். பட்டிமன்றத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

ஹாய் இளவரசி அக்கா நல்ல தீர்ப்பை வழங்கிய உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்........

இதில் பங்கு பொற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்