பன்னீர் மசாலா

தேதி: July 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (14 votes)

 

பன்னீர் -200கிராம்
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
தக்காளி 1
தயிர் -4ஸ்பூன்
கரம் மசாலா -1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணை -2ஸ்பூன்
நெய் -1ஸ்பூன்
இஞ்சி -1துண்டு
ஏலக்காய் -1
கொத்தமல்லிதழை -சிறிது


 

பன்னீரை நீளமாக கட்பண்ணவும்.
வெங்காயம்,மிளகாய்,இஞ்சி,தக்காளி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி ஏலக்காய் போட்டு வெங்காயம்,இஞ்சி ,மிளகாய்,தக்காளி போட்டு வதக்கவும்.தயிர் சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அதே வாணலியில் மீதி எண்ணை ஊற்றி அரைத்ததை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
மஞ்சள்தூள்,கரம்மசாலா,உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி பன்னீரை வறுக்கவும்.வறுத்த பன்னீரை கொதிக்கும் மசாலாவில் போட்டு கொத்தமல்லிதூவி இறக்கவும்.


சப்பாத்தி,புலாவ்,பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்