கோதுமை பாதாம் பர்ஃபி

தேதி: July 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

கோதுமையில் கால்சியம், இரும்பு மற்றும் நார்சத்து உள்ளது. பாதாமிலும் புரோட்டின், கால்சியம், நார்சத்து, ஆண்டிஆக்சிடெண்ட்(anti-oxidant) மற்றும் பல சத்துக்கள் உள்ளது. இது நம் கெட்ட கொழுப்பு சத்தை(LDL) குறைத்து நல்ல கொழுப்பு சத்தை (HDL) அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆகவே நாமும் சாப்பிடுவோம் நாளொரு பாதாம்.

 

கோதுமை மாவு - 100 கிராம்
பாதாம் தூள் – 50 கிராம்
சர்க்கரை - 125 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி


 

முதலில் பர்ஃபி செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி, கோதுமை மாவை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.
அதனுடன் பாதாம் தூளை போட்டு இடையிடையே நெய்யை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை 3 நிமிடங்கள் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
கிளறிய மாவு நன்றாக வறுப்பட்டதும் (பார்ப்பதற்கு தயிர் தன்மை வரும் வரை) கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
அதே நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு சர்க்கரையை போட்டு கிளறி மிதமான தீயில் கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
கம்பி பாகு வந்ததும் உடனே மாவு கலவையில் கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
ஓரிரு நிமிடங்களில் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆரம்பிக்கும்.
பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.
சுவையான சாஃப்டான கோதுமை பாதாம் பர்ஃபி ரெடி. மேற்சொன்ன அளவுகளில் செய்தால் கிட்டதட்ட 20 துண்டுகள் போடலாம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்தால் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் எளிதாக செய்து நிறைய பேருக்கு கொடுக்கலாம். இதில் பாகு பதம், கொட்டும் பக்குவம் மட்டும் சரியாக பார்த்து கொண்டால் பத்தே நிமிடங்களில் அருமையான சாப்டான பர்பி ரெடி.
குழந்தைகளுக்கான எளிதில் தயாரிக்கக் கூடிய குறிப்புகள் மற்றும் வித்தியாசமான குறிப்புகளை நமது அறுசுவை நேயர்களுக்காக வழங்கிக் கொண்டிருக்கும் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள் வழங்கிய மற்றுமொரு சுவையான குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எவ்வளவு ஈசியான சூப்பர் ஸ்வீட் ரெசிப்பி.நன்றி இளவரசி.கீதாச்சல் என்ற தோழி அறுசுவையில் இப்படி தான் கிட்ஸ் வெரைட்டி நிறைய கொடுப்பாங்க,அவங்களை கொஞ்ச நாளாக காணோம்,அதை ஈடுக்கட்ட உங்கள் ரெசிப்பி வந்து கொண்டிருக்கிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம் ....மகிழ்ச்சி...உங்கள் பின்னூட்டம் என் பர்பியைவிட சுவை கூடுதல்:))
நன்றி....ஆனால் கீதாமேடம் is Great.. அந்த அளவுக்கு இல்ல நான்.....நீங்களே cooking expert..உங்களுக்கெல்லாம் முன்னால் நான் சும்மா ஒன்றுமே இல்லை...வாய் வார்த்தைக்காக இல்லப்பா..நெஜமாத்தான்
நன்றி...
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி,பார்க்கவே ரொம்ப நன்றாகயிருக்கிறது...எனக்கு இதில் நிறைய சந்தேகம்.

1)கோதுமை மாவை வறுத்து நெய் சேர்க்கும் பொழுது கட்டிகளாகிவிடாதா?
2)ஏன் சர்க்கரையை தனியே காய்ச்ச வேண்டும் ?
3)எத்த‌னை நாள் கெடாம‌லிருக்கும்?
4)எந்த‌ கோதுமை மாவு சிற‌ந்த‌து?
5)எனக்கு இந்த அளவுகள் வேற சரியாக எடுக்க தெரியாது...

டீச்ச‌ர்,என‌க்கு கொஞ்ச‌ம் ப‌தில் சொல்லுங்க‌ளேன்...நான் ஹோல் வீட் மாவில்‌ ட்ரை ப‌ண்ணிண‌ போது க‌ட்டிக‌ளாகி விட்ட‌து.

ச‌ர்க்க‌ரை பாகும் என‌க்கு ச‌ரியான‌ ப‌த‌ம் ச‌ரியாக‌ தெரிய‌வில்லை.என‌க்கு விள‌க்க‌மாக‌ சொல்லுங்க‌ளேன்.மிக‌வும் ஈஸியாக‌ செய்ய‌த்தூண்டுது உங்க‌ ரெஸிப்பி...

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம்

நீங்க ஏன் தலைப்பில் உங்க பெயரை சேர்த்து போடறீங்க? நான் பல முறை அதை பார்த்து குழம்பிவிட்டேன்.......

அய்யய்யோ! என்னை அடிக்க ஓடிவராதீங்க!! உமா எஸ்கேப்!!!

அன்புட‌ன்
உமா.

நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு
சும்மா கலாய்க்க கேட்கறீங்களா?இல்ல நிஜமா கேட்கறீங்களா...:)) நனு தெரியலை.
இருந்தாலும் சொல்றேன்.
//கோதுமை மாவை வறுத்து நெய் சேர்க்கும் பொழுது கட்டிகளாகிவிடாதா?//
கட்டிகள் ஆகாது..கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லியுள்ள அளவு நெய் விட்டு கிளறும்போது கட்டிகள் வராது.
//2)ஏன் சர்க்கரையை தனியே காய்ச்ச வேண்டும் ?//
பாகு காய்ச்சாமல் அப்படியே சர்க்கரை சேர்த்தும் செய்யலாம் அப்படி செய்யும்போது நிறைய நேரமாகும் பதம் கெட்டியாக.
//3)எத்த‌னை நாள் கெடாம‌லிருக்கும்?//
10 நாட்கள் வரை கூட இருக்கும்(airtight containerl)போட்டு வைத்தால்.ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் ஓரிரு நாட்களில் காலியாகிவிடும்
//4)எந்த‌ கோதுமை மாவு சிற‌ந்த‌து?//
நான் billsberry atta use பண்ணுகிறேன்.அதுதான் கிடைக்கிறது.எல்லா கோதுமை மாவும் யூஸ் பண்ணலாம்.கோதுமை மாவுக்கு பதிலாக மைதா/கடலை மாவில் கூட செய்யலாம்.பாதாம் தூளுக்கு பதில் முந்திரி தூள் சேர்த்து செய்தாலும் சுவை நன்றாக இருக்கும்.
//5)எனக்கு இந்த அளவுகள் வேற சரியாக எடுக்க தெரியாது.//
கப் அளவு வைத்து செய்யுங்கள்.
சந்தேகம் தீர்ந்ததா? .....இங்கு இரவு 9.30pm.
தூங்கபோகிறேன் ..bye
anbudan
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நான் கலாய்க்க கேள்வி கேட்கல...நிஜமாவே என் சந்தேகத்தை தீர்த்து வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி.நான் இது வரை ஏதாவது உங்க கிட்டே தவறா நடந்திருந்தா என்னை மன்னித்து விடுங்கள்.

உமா.

ஹாய் இளவரசி நலமா? சூப்பரா ஈசியா ஸ்வீட் செஞ்சி காம்பிச்சுட்டிங்கப்பா..... பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.

உங்கள் சேவயை தொடரட்டும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உமா,
நீங்க சொன்னது எதுவும் நான் தவறாக நினைக்கவில்லை.
உங்கள் பெயரில் ஒரு தோழி இந்தியாவில் இருப்பதால் உங்களை பழகிய தோழியாகவே நான் நினைக்கிறேன்..அதனால மன்னிப்பு எல்லாம் எதுக்குப்பா? சின்ன சின்ன காயப்படுத்தாத சீண்டல்கள் நல்ல நட்பிற்கு சுவாரசியம்தானே?

I won't mistake u ever.I like ur sense of humour by all means.அதனால உங்க சாரிய (sareeya,'coz I wear sudi only))நீங்களே வச்சுக்கங்க..சரியா:))

-இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிப்பா.
நீங்க டோஸ்டர்ல கேக் செய்யறது பட்தி கேட்டிருந்தீங்க இல்லியாப்பா?அது முடியாதுப்பா?
உங்ககிட்ட cooking range irundhaa அதுலெசெய்யலாம்ப்பா..அங்கலாம் அதுதானே நிறய வீட்டில இருக்கும்..சரிப்பா.அரட்டையில் பதிவு போடறேன்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி இளவரசி.

very nice receipe