தக்காளி பாத்

தேதி: July 14, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

1) சாதம் - 1 கப் அரிசியில் வடித்தது (உதிரியாக வடிக்கவும்)
2) நன்கு பழுத்த தக்காளி - 5
3) பெரிய வெங்காயம் - 2
4) உப்பு - தேவைகேற்ப
5) எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
6) கடுகு - 1/2 டீஸ்பூன்
7) உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
8) கடலைப் பருப்பு - 3/4 டீஸ்பூன்

அரைக்க:-
1) சின்ன வெங்காயம் - 10
2) தேங்காய்த் துருவல் - 5 டேபிள் ஸ்பூன்
3) பூண்டு - 6
4) இஞ்சி - ஒரு சிறிய துண்டு
5) பச்சை மிளகாய் - 4 (தேவைகேற்ப)
6) ஏலக்காய் - 1
7) இலவங்கம் - 2
8) பட்டை - சிறு துண்டு

அலங்கரிக்க:-
1) கறிவேப்பிலை - சிறிதளவு
2) கொத்தமல்லி - சிறிதளவு


 

வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.
சாதத்தை ஆற வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
தாளித்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியுடன் தக்காளியை போட்டு குலைந்து ஈரம் வற்றும் வரை வதக்கவும்.
இறுதியாக அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து மிதமான அணலில் வதக்கவும்.
இந்த கலவையிலேயே உப்பை போட்டுக் கலக்கவும்.
இப்போ இந்த கலவையை சாதத்தில் கொட்டி நன்றாக கிளறவும்.
நன்கு கலந்த சாதத்தை மிதமான் அணலில் வைத்து சாதம் சூடாகும் வரை கிளறவும்.
நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா இன்று உங்களேட தக்காளிபாத் பண்ணினேன்.ரெம்ப நல்லா இருந்தது.நன்றி.

இன்று மதியத்திற்கு தக்காளி சாதம் செய்தேன், சூப்பரா இருந்தது. செய்வதும் மிகவும் எளிதாக இருந்தது.

மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மிக்க நன்றி ஹயிஸ் அண்ணா.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

தக்காளி பாத்.

ஜெயராஜி.
ரொம்ப யோசித்து தான் செய்தேன், அரைத்து ஊற்றினால் சரியா வருமா என்றூ சும்மா சொல்லக்கூடாது சுவை பிரமாதம்.

ரொம்ப நல்ல இருந்தது. ஏம்பா இத்தனை மிலகாய். நான் முன்று தான் போட்டேன். நீங்க என்ன ஆந்திரா சைடா?

அப்படியானால் இவ்வள்வு காரம் சாப்பிட்டா இது கூட வேற என்ன தொட்டு சாப்பிடுவீங்க, அதுக்கு ஈக்வல் ஆகுற போல‌

Jaleelakamal

ஜலீலா அக்கா தங்கள் பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

என் சொந்த ஊர் மதுரை. இப்போது வசிப்பது ஹைதராபாத். சில சமயங்களில் இங்கே மிளகாய்களில் காரம் உரைப்பது இல்லை. எனவே தான் மிளகாய் கூடுதலாக போட்டேன்.

பார்க்கிறேன் போயி குறிப்பில் காரத்தின் அளவில் மாற்றம் செய்கிறேன்.

இதற்கு வெள்ளை வெங்காயத்தில் வதக்கி செய்யும் தயிர் பச்சடி அருமையாக இருக்கும். காரத்தின் சூட்டை வெள்ளை வெங்காயம் குளிர்ச்சி தணிக்கும்.

உங்கள் பதிவில் மிக்க மகிழ்ச்சி. மறுபடியும் நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த தக்காளி பாத்தின் படம்

<img src="files/pictures/aa359.jpg" alt="picture" />

சுபா, தக்காளி பாத் நல்ல மணத்துடன் சூப்பராக இருந்தது. வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. நன்றி உங்களுக்கு. நான் மிளகாய் கம்மியாகவும், தேங்காய் சேர்க்காமலும் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.

மிக்க நன்றி வானதி அக்கா. நான் இங்க இருக்கிற காரத்திற்கேற்ப மிளகாய் போட்டேன். ஏற்கனவே ஜலீலா அக்காவும் சொன்னங்க காரம் அதிகம்னு. மிளகாயை குறைத்தது நல்லது.