கீரை சூப்

தேதி: July 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முளைக்கீரை - ஒரு கட்டு
நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - மிகக்குறைந்த அளவு


 

கீரையை ஆய்ந்து கழுவி அரிந்து அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை குறைத்து கீரை வேகும் வரை(சுமார் 10 நிமிடம்) வைத்திருந்து இறக்கி பின் உப்பு லேசாக தூவி பரிமாறவும்.


கீரை அதிகம் வேகாமல் இருந்தால் சத்து வீணாகாது உப்பும் தூவி சாப்பிட்டால் போதும். இதிலேயே இன்னும் சுவையாக வேண்டுமென்றால் தேங்காய்ப்பால் கலந்து செய்வார்கள். முருங்கைக்கீரையிலும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். பச்சை மிளகாய் நீக்கி சாப்பிட கஷ்டம் என்றால் சிகப்பு மிளகாய் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்