சிறுமிகள் ஆடை சந்தேகம் - தெரிந்த தோழிகள் வ‌ந்து உதவவும், ப்ளீஸ்!

ஹாய் ப்ரெண்ட்ஸ்,
இந்த சந்தேகம், எங்க கேட்கனும்னு தெரியவில்லை. அதனால், இந்த பொது தலைப்புகளில் கேட்கிறேன். உண்மையில் இது சமையலுக்கு சம்பந்தமில்லாத கேள்விதான்... இருந்தாலும் சந்தேகம் பகுதிக்கு தகுதியானதுதான், பேஃஷன் சந்தேகம்! :) சிறுமிகள் ஆடை குறித்த சந்தேகம். இது பற்றி ‍தெரிந்த தோழிகள் வ‌ந்து உதவவும், ப்ளீஸ். நன்றி!

சிறு வயது பெண் குழந்தைகளுக்கு (8+ வயது உள்ளவர்கள்) ட்ரெஸ்ஸஸ், ஸ்கர்ட்ஸ் போடும்போது, உள்ளே போட்டுக்கொள்ளவென்று டைட்ஸ் மாதிரி ஏதாவது கிடைக்கிறதா? நான் கேட்பது ரெகுலராக‌ மெல்லிய துணியால் இருக்கும் டைட்ஸ் (டெனிம் ஸ்கர்ட் போடும்போது உள்ளே அணியும் பேண்ட்) கிடையாது. வேறு ஏதாவது உள்ளாடை போல உபயோகப்படும், பாக்ஸர் ஷார்ட்ஸ் டைப்பில் இருப்பது. இந்தியாவில் இருந்து கொஞ்சம் இதற்காக சிறுமிகள் உள்ளாடைகள் வாங்கி வந்தேன். ஆனால் அது ஸ்கர்ட் டைப்பில் இருக்கும். நான் தேடுவது பேண்ட் டைப்பில் காலோடு ஒட்டிய மாதிரி இருப்பது. இந்தியாவில், இங்கே US-ல் எந்த கடைகளில் கிடைக்கும் என்றும் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

u can find it anywhere like walmart,kohls,burlington coat factory,all the stores with cloths
am using it for my 1 yr old baby girl and i used to buy them in walmart

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

ஹாய் ஜெய‌ஸ்ரீ,
உங்க‌ ப‌திலுக்கு ந‌ன்றி. நீங்க‌ சொல்வ‌து இங்கே கிடைக்கும் 'கேப்ரி லெங்கிங்ஸ்' பற்றி இல்லை என்று ந‌ம்புகிறேன். ஏனென்றால், நீங்க‌ சொன்ன‌துப்போல‌ நான் Target, Kohls ஷாப்பில் தேடிய‌போது என‌க்கு அதுதான் க‌ண்ணில் தென்ப‌ட்டது. அது என் பொண்ணுக்கு நிறையவே இருக்கு, அவள் அது ஷார்ட் ஸர்ட் போடும்போது அணிவாள். நான் தேடுவது, ஸ்பான்டெக்ஸ் துணியாலான டைட் ஷார்ட்ஸ், குழந்தைகள் உள்ளாடை மெட்டிரியல் போலவே இருப்பது. இது அணியும்போது அது ஸ்கர்ட்க்கு/ப்ஃராக்குக்கு வெளியே தெரியாதவாறு அணியவேண்டும். நான் தெளிவா சொல்லியுருக்கேன் என்று நினைக்கிறேன். நான் வால்மார்ட்டில் இனி செக் ப‌ண்ணுகிறேன். முடிந்தால், அந்த பேக் மீது என்ன‌வென்று பெயர் போட்டு இருக்கு என்று பார்த்து/நியாபகப்படுத்தி சொல்லுவிர்க‌ளா?! மீண்டும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நீங்கள் தேடும் பொருள் Sears இல் கிடைக்கும். ஆனால், 8 வயது சிறுமிக்கு அளவுகள் சரி வருமா என்று தெரியவில்லை. போய் ட்ரை பண்ணி பாருங்கள். இல்லாவிட்டால் Macy's இல் இன்டிமேட் Sectionஇல் பாருங்கள்.

வாணி

டியர் சுஸ்ரீ நீங்க குறிப்பிடும் உள்ளாடை தனியாக கிடைக்குமா என்று தெரியவில்லை, எங்க செல்லிக்கு இந்தியாவில் வாங்கிய போது அது டூ பீஸாக கிடைத்தது, அதாவது மெல்லிய ஸ்ட்ராப்ஸ் வைத்த பனியன் & பாக்ஸராக, லேஸ் வைத்த டிசைனில் கிடைத்தது. அதுவும் கேரளாவில் லிட்டில் கிங்டம் என்ற குழந்தைங்க ஷோரூமில் வாங்கினேன். சென்னையில் அந்த கடை இருந்தால் யாரையாவது விட்டு விசாரித்து பார்க்கவும்.நானும் இங்கு அதைப் போல் கிடைக்குமா என்று பார்க்கின்றேன்.

நிங்க கேட்பது தான் நானும் கொஞ்சம் நாள் முன்பு தேடினேன் என் பென்னும்(8)அவளுடைய்ய டான்ஸ்ஸுக்காக என் தோழிகள் சொன்னபின் நானும் வால்மார்டில் இண்டிமேட் செக்‌ஷனில் பாலே,டான்ஸ் டைட்ஸ் என்று போட்டிருக்கும் . இது தான் நாங்க வாங்கி யூஸ் செய்கிறோம். ஸ்கர்ட்/ப்ராக்குக்கு வெளியே தெரியாமல் தான் இருக்கும்.

எப்படி இருக்கிங்க? ரொம்ப நாளாச்சு உங்களிடம் பேசி.
லிட்டில் கிங்க்டம் கேரளாவில் எந்த ஊரில் இருக்கு. சொல்ல முடியுமா, நான் இந்த மாத கடைசியில் போகிறேன். என் பென்னுக்கும் இதே ப்ராப்ளம் தான் கடைசியில் வால்மார்டில் டான்ஸ் டைட்ஸ் என்று ஒன்று கிடைத்தது.

ரொம்ப தேங்ஸ் வாணி, உங்க பதிலுக்கு. நான் தேடுவதை கரக்ட்டா தெரிந்துகொண்டீர்கள். எனக்கும் அதே சந்தேகம்தான், சிறுமிகளுக்கு கிடைக்குமா என்று. நீங்க சொன்ன Sears & macys நிச்சயம் ட்ரை பண்ணி பார்க்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

டியர் மனோகரி மேம்,
எப்படி இருக்கிங்க? மிக்க நன்றி உங்க பதிலுக்கு. தெளிவா சொல்லி இருக்கிங்க. அம்மா & தெரிந்த‌வர்களிடம் சொல்லி சென்னையில் இந்த கடை உள்ளதா என்று விசாரிக்க சொல்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் விஜி,
உங்க பதிலுக்கு ரொம்ப தேங்ஸ் விஜி. உங்க மகளும் எட்டு வயதா, உங்க இரண்டாவது பெண் 6 வயது என்று எங்கேயோ சொன்னதா நியாபகம், கரக்ட்டா?! ரொம்ப சரியா சொன்னிங்க விஜி. நானும் இந்த டைட்ஸ்‍ஐ தேடிகிட்டு இருக்கேன், உங்களைப்போலவே. கட்டாயம் வால் மார்ட்டில் போய் பார்க்கிறேன். விஜி, அப்படியே நீங்க உங்க குழந்தைகளுக்கு Camis எங்க வாங்குவிங்கன்னு சொல்லுங்க விஜி. நான் யூஷுவலா, டார்கெட்‍ல தான் வாங்குவேன். போனமுறை இந்தியாவில் கொஞ்சம் வாங்கினேன், அது அவளுக்கு கம்பர்ட்டிபிளா இல்லை (கைக்கு அருகில் வரும் கட்டிங்) என்று போட மாட்டேங்கிறாள். இங்கே டார்கெட்டில் வாங்குவது நன்றாக இருக்கிறது. ஆனால், தோளில் வரும் பட்டை மெல்லிய கோடுப்போல உள்ளது. சரி, கொஞ்சம் பட்டையா இருக்கட்டும் என்று பார்த்தால், அது ரொம்பவே பனியன் (பையன்கள் போடுவது) மாதிரி இருக்கு, அவளுக்கு பிடிக்கமாட்டேங்கிறது. கிட்டத்தட்ட ஒரே வயது பெண் குழந்தைகள் இருப்பதால் நீங்க எது வாங்குவீர்கள், எது போட நன்றாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாமென்று கேட்டேன். தவறா நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். சரி, இந்த வாரம் வால்மார்ட் போயிடவேண்டியதுதான்! : ) வேறு ஏதாவது இது சம்பந்தமாக எனக்கு தெரிய வந்தாலும் உங்களுக்கு சொல்கிறேன் விஜி. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்