பட்டர் மட்டன்

image

வழங்கியவர் : asiya omar

தேதி : வியாழன், 16/07/2009 - 22:09

ஆயத்த நேரம் : 15 நிமிடம்

சமைக்கும் நேரம் : 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு

3.5
2 votes
Your rating: None
 

 

  • ஆட்டு இறைச்சி - அரைக்கிலோ
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 2 - 3
  • பழுத்த மிளகாய் - 4
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - அரைஸ்பூன்
  • மல்லி இலை - சிறிது
  • சில்லி பவுடர் - அரைஸ்பூன்
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் - 4 டீஸ்பூன்
  • பட்டர் - 2 -3 டீஸ்பூன்
  • ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

 

  • மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கி நன்கு 3 தண்ணீர் வைத்து கழுவி வடிக்கட்டிக்கொள்ளவும். மட்டனில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு, அரைஸ்பூன் சில்லி பவுடர், தயிர், தேவைக்கு உப்பு சேர்த்து சிறிது ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும். கட் செய்ததை பாதி பாதியாக பிரித்து வைக்கவும்.
  • குக்கரில் ஊறிய மட்டனோடு பாதி வெங்காயம், தக்காளி, மல்லி இலை சேர்த்து 3 விசில் வைத்து எடுக்கவும்.
  • பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பாதி இருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு, கரம்மசாலா, பழுத்த மிளகாய் வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  • அரைத்ததை வேக வைத்த மட்டனில் சேர்க்கவும். மட்டனும் க்ரேவியுமாக சேர்ந்து கொதி வரும்.
  • இறுதியாக 2 ஸ்பூன் பட்டர், ஃப்ரெஷ் கிரீம், மல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான பட்டர் மட்டன் ரெடி. இதனை ஃப்ரைட் ரைஸ், நாண், சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறவும்.

Note:

இந்த ரெசிப்பி எங்கள் உறவினர் ஒருவர் செஃப் ஆக இருக்கிறார். அவர் கொடுத்த டிப்ஸில் செய்து பார்த்தேன் அருமையாக வந்தது. அவர் சிக்கனில் சொன்னார், நான் மட்டனில் செய்து பார்த்தேன், புதுமையாக இருக்கட்டுமே என்று நம் அறுசுவை தோழிகளுக்காக உடனே கொடுத்தேன்.







Fresh Cream yentral enna?