செட்டிநாடு அசைவ சமையல் புத்தகம் எங்கே வாங்கலாம்??

எனக்கு செட்டிநாடு அசைவ சமையல் புத்தகம் வேண்டும்.எங்கே வாங்கலாம்?
ஏதாவது வெப்சைட் அட்ரஸ் தெரிந்தால் சொல்லுங்களேன்.

விகடன்.காம்,கிரிடிரேடிங் கம்பெனி,லேனா பதிப்பகம்,
மணிமேகலை பப்ளிகேஷன்ஸ் இதனுடைய்ய வெம்சைட்ஸ் கூகிலில் போனால் இருக்கு அதில் கிடைக்கும்.

தங்கள் பதிலுக்கு நன்றி. நீங்க சொன்ன வெப்சைட்களை கூகிலில் தேடினேன், எனக்கு சரியான ரிசல்ட் ஏதும் கிடைக்கவில்லை.ஆனால் வேரு ஒரு வெப்சைட் கிடைத்தது.

http://www.egctraders.com/Cooking_tamil.htm

Anbana meenal

www.dinamalar.com chendru parrkkavum. (puthagam paguthiyil)

Anbudan poongothai

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

எங்கே இதற்கும் "ஹோமியோபதி மருத்துவரிடம் கேளுங்கள், கிடைக்கும்" என்று பதில் கொடுத்திருப்பீர்களோ என்று பயந்தேன். நல்லவேளை.. அப்படியில்லை. :-)

Anbana admin vanakkam. nanum sari homeopathy m sari Non.vegkkuu

ethirppanavargal. valluvarum koodathan..

enakku nandraga tamil type adikkath therindavudan meendum varuvan.

Anbudan poongothai

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேடம், உங்களது ஐடி யை நீங்கள் வற்புறுத்தி பெற்றதும், அதற்கு நீங்கள் குறிப்பிட்ட காரணமும் எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்தது. உங்களைப் பற்றின ஒரு உயர்வான எண்ணத்தையும் தந்தது. இத்தனை ஆர்வமாக நீங்கள் மன்றத்தில் கலந்து கொள்வது இன்னும் ஆச்சரியத்தை தருகின்றது. உங்களது ஆர்வமான பங்களிப்பிற்கு மிகவும் நன்றி. இரண்டு விசயங்களை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன்.

நீங்கள் விரைவில் தமிழில் டைப் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்க விரும்பினேன். நீங்களாகவே அந்த முடிவிற்கு வந்துவிட்டதில் மகிழ்ச்சி. எழுத்துதவி பக்கத்தினை பயன்படுத்தி எழுத்துக்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். விரைவில் தமிழில் டைப் செய்ய கற்றுக்கொள்ளலாம்..

அடுத்து, நீங்கள் மிகவும் பழைய பதிவுகளை எடுத்து அதற்கு பதில் கொடுக்கின்றீர்கள். புதியவர் என்பதால் உங்களுக்கு தெரியவில்லை என்று எண்ணுகின்றேன். ஒவ்வொரு பதிவிலும் அது பதிவு செய்யப்பட்ட தேதி இருக்கும். அதனை கவனியுங்கள். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முந்தைய பதிவுகளுக்கு பதில் கொடுப்பதில் பெரிதும் பலன் இருக்காது. புதிய தலைப்புகளில் பங்கு கொள்ளுங்கள். உங்களைப் போன்ற மூத்தவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இங்கே பலருக்கும் தேவைப்படும். எனவே வெறும் வைத்தியம் சம்பந்தமான தலைப்புகளில் மட்டும் பதில் கொடுக்காமல், எல்லாவற்றிலும் பங்குகொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கின்றேன்.

மேலும் சில பதிவுகள்