பாலக் டோபு

வழங்கியவர் : Nila2006
தேதி : வெள்ளி, 17/07/2009 - 02:44
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு : 4 நபர்கள்
- ஸ்பினிச் கீரை - 1 கட்டு
- டோபு - 8 அவுன்ஸ்
- தக்காளி - 2
- வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
- இஞ்சி - 1அங்குல துண்டு
- உள்ளி - 5 - 6 பற்கள்
- பெரிய சீரகம் - 1/2 தேக்கரண்சி
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/4 தேகரண்டி
- கறித்தூள் - 1தேக்கரண்டி
- சீரகதூள் - 1/2 தேக்கரண்டி
- விப்பிங் கிறீம்/ - 3மேசைக்கரண்டி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு
- கறிவேப்பிலை
- டோபுவை சிறிய துண்டுகளாக வெட்டி 1 மேசைக்கரண்டி எண்ணெயில் சாட்டே செய்து எடுக்கவும்.
- கீரையை சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
- பின்னர் அதனை வடித்து புட் புரோஸஸரில் போட்டு தண்ணீர் விடாது அரைத்து எடுக்கவும் (கரைய அரைக்க வேண்டாம்)
- தக்காளி, உள்ளி, இஞ்சியை பிளன்டரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு வெங்காயம், பெரிய சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
- பின்னர் இதனுள் அரைத்த தக்காளி கலவை, மஞ்சள் தூள், கறித்தூள், சீரகதூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- கலவை நன்கு கொதித்ததும் அதனுள் உப்பு, அரைத்த கீரையை சேர்த்து கொதிக்க விடவும்.
- கீரை நன்கு சேர்ந்ததும் அதனுள் டோபு, கறிவேப்பிலை, விப்பிங் கிறீமை சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
- சுவையான பாலக் டோபு தயார். இதனை நாணுடன் சேர்த்து பரிமாறவும். சப்பாத்தி, சாதத்துடனும் இது நன்றாக இருக்கும்.
Note:
இதற்கு extra firm or firm டோபு பாவிக்கவும். ஏனைய டோபுவிலும் செய்யலாம். ஆனால் அவை உடைய பார்க்கும். கவனமாக கிளற வேண்டும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
9 நிமிடங்கள் 27 sec முன்பு
12 நிமிடங்கள் 12 sec முன்பு
18 நிமிடங்கள் 44 sec முன்பு
52 நிமிடங்கள் 35 sec முன்பு
ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 40 sec முன்பு
2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு