கேரட் சாதம்

image

வழங்கியவர் : thalika

தேதி : Sat, 18/07/2009 - 18:59

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4
4 votes
Your rating: None
 

 

  • வடித்த சாதம் - இருவருக்கான அளவு
  • பெரிய கேரட் - 3
  • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • பச்சைமிளகாய் - 2 அல்லது 3
  • தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

 

  • கேரட்டை துருவிக் கொள்ளவும். தேங்காயையும், பச்சை மிளகாயையும் தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் கேரட்டை கொட்டி உப்பு அரை ஸ்பூன் சேர்த்து கிளறி 3 நிமிடம் குறைந்த தீயில் இடையில் ஒரு முறை கிளறி விட எளிதில் வெந்து விடும்.
  • பின் அரைத்த தேங்காயை கேரட்டுடன் கொட்டி ஒரு கிளறு கிளறி இறக்கவும். அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.

Note:

3 நிமிடத்தில் இந்த சாதத்தை தயாரித்து விடலாம். ஆனால் சுவை அருமையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம். இதனுடன் ஏதாவது வறுவல், வடகம் இருந்தால் நன்றாக இருக்கும்