பாதாம் சூப்

வழங்கியவர் : kanthimathi
தேதி : ஞாயிறு, 19/07/2009 - 16:07
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4
- பாதாம் - 20
- உருளை - 1
- டர்னிப் (அ) நூல்கோல் - 1/4 கப் (நறுக்கியது)
- வெண்ணை - 1 ஸ்பூன்
- பால் - 1/2 கப்
- பச்சை மிளகாய் – 1
- சர்கரை - 2 டி ஸ்பூன்
- சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு பொடி - தேவைக்கேற்ப
- உப்பு – தேவைக்கேற்ப
- பாதாமை அரை மணி நேரம் வெந்நீரில் ஊரவைத்து, தோலை உரித்து, மிருதுவாக அரைக்கவும்.
- காய்கறிகளை தோலுரித்து அரிந்து வைக்கவும்.
- குக்கரில் வெண்ணெயை போட்டு காய்கறிகளை போட்டு, நிரம் மாறாமல் வதக்கவும்.
- அதனுடன் பாலையும், ஒருக்கப் தண்ணீரையும் சேர்த்து, அதனுடன் பச்சை மிளகாய் போட்டு, ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- ஆறியவுடன் பச்சைமிளகாயை எடுத்துவிட்டு, காய்கறிகளை அரைத்து வடிகட்டிவைக்கவும்.
- இதனுடன் அரைத்த பாதாம் விழுது, உப்பு, சர்கரையை சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதிவந்தவுடன், தீயை குறைக்கவும்.
- சோள மாவை அரைக்கப் தண்ணீரில் கரைத்து, கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் சேர்க்கவும்.
- மிளகு தூளை பரிமாறும்போது சேர்க்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
5 நிமிடங்கள் 5 sec முன்பு
8 நிமிடங்கள் 54 sec முன்பு
13 நிமிடங்கள் 2 sec முன்பு
22 நிமிடங்கள் 10 sec முன்பு
29 நிமிடங்கள் 12 sec முன்பு
34 நிமிடங்கள் 20 sec முன்பு
44 நிமிடங்கள் 15 sec முன்பு
46 நிமிடங்கள் 15 sec முன்பு
48 நிமிடங்கள் 9 sec முன்பு
59 நிமிடங்கள் 59 sec முன்பு